அவரை Lablab purpureus
Lurpureus L,; Papilionoideae
(Dolichos Lablab) மாற்றுப்பெயர்
; வளரியல்பு ; உணவுக்காகப் பயிரிடப்படும்கொடிவகை. இலைஅமைப்பு ; பூ,காய்; மருத்துவ பாகம் ; இலை,பிஞ்சு விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம் குணம் ; பிஞ்சு - இலகுமலகாரி,சமனகாரி. இலை – சங்கோசனகாரி (உள்ளுக்கு), அந்தர்ஸ்நிகதகாரி (வெளிக்கு) தீர்க்கும் நோய்கள்
கங்குலுண விங்குற் கறிக்கு முறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர் – தங்களுக்கும்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி.
விதை முதிராத
வெள்ளை அவரைப் பிஞ்சு ராப் போஜனத்திற்கும், மருந்துண்பவர்களுக்கும், வாதாதி முத்தோஷம்,விரணம்,சுரம்,விழிக்குள்
முதிர்ந்த சிலேத்தும பில்லம் முதலிய ரோகிகளுக்கும் ஆகும்.
கொட்டைய வரைக்காயாற் கோரவரோ சகனோய்
கிட்டாதென் பார்மருந்தின் கீர்த்திகெடுந் – துட்டமந்தம்
பையவுண்டாம் பேதியுண்டாம் பாரிப் பனிலமுண்டாம்
ஐயமுண்டாஞ் சூலையுமுண் டாம்
விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.
அவரையிலைக் குத்தலைநோ யாழ்ந்தகிராணி
யிவரும் விஷிசிமுத லேகுந் – தவறாமற்
கொண்டவர்க்குத் தீபனமாங்கோதாய் விரணமறுங்
கண்டவர்க்குத் தோற்றமிது காண்
அவரை இலைக்குச்
சிரஸ்தாபநோய்,கிராணிஊழி,சிரங்கு ஆகியவை நீங்கும்.பசித் தீபனமும் உண்டாகும்.
இலை குடல் வாயு அகற்றும்
தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.
1. அவரை இலைச்சாறு 10 மி.லி.
தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.
2. இலைச்சாற்றுடன் மஞ்சள்
பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்.
3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில்
நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.
4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச்
சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும்
பத்திய உணவாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக