பக்கங்கள்

4 ஜூலை, 2018

அரிவாள்மனைப் பூண்டு SIDA CAPRINIFOLOLIA L,; MALVACEA

              அரிவாள்மனைப் பூண்டு.
                  SIDA CAPRINIFOLOLIA L,; MALVACEA
வளரியல்பு ; மிகக் குறுஞ் செடியினம்.
வேறு பெயர் :- BALA PHANIJIVIKA.
இலை     ; கூர் நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவம்.
மருத்துவ பாகம் :- இலை, விதை, வேர்,பூ முதலியன.
செய்கை ; ரக்தஸ்தம்பனகாரி.
மருத்துவ குணம் :-
‘வெட்டுக்காயத்தை விரவி லுர்த்திவிடுந்
துட்டக் கடுவோட்டுத் தோன்றிமிகக் கெட்ட
பிரிவாற் றலையைப் பினக்கும் வலி நீக்கு
மரிவாள் மூக்குப் பச்சிலை.’
அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச் சீக்கிரத்தில் ஆற்றுவதுந் தவிர மாக விஷத்தையும் உதிரக் கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலகும் என்க.
அரிவாள்மனைப் பூண்டு எல்லாவித மண்ணிலும் வளரும். ஆனால் செம்மன் நிலத்தில் நன்கு வளமுடன் வளரும். மாரிக்(மழை) காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில தானே வளரும். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.
  1. அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.
  2. அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சமன் குப்பைமேனி,   பூண்டுப்பல் 2 , மிளகு3  சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறிவதுடன் தலைவலியும் நீங்கும்..உப்பு, புளி நீக்க வேண்டும்.
  3. இலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவிச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும்.            
  4. இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்துப் பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.
  5. அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை சம அளவு எடுத்து அரைத்து புழுவெட்டின் மீது தடவி வர விரைவில் மாறும்.                             
  6. இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மீது தடவி வர குணமாகும்.
  7. அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வர விரைவில் குணமாகும். (பத்தியம்): எலுமிச்சம் பழம், புளிப்புப் பதார்த்தங்கள் நீக்கவும்.
  8.  அரிவாள்மனைபூண்டுபூ 20, 2ல்1ன்றாய்க் காய்ச்சி வாய் கொப்புளித்து வர ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் கட்டுப்படும்


கருத்துகள் இல்லை: