பக்கங்கள்

4 ஜூலை, 2018

அவுரி Indigoferra tinctoria

அவுரி                                      

              Indigoferra tinctoria 

அவுரி என்னும் நீலியடா அவள் 64 பேரைக் கொண்டவளடா

                                                     -பழமொழி-

நீலி,சாய வேர் முதலாய 64 பெயர்கள் உண்டு                                 

 வளரியல்பு      ; சிறு செடி                                                                                                 இலைஅமைப்பு ; கரும்பச்சை                                                                                              பூ,காய்          ;                                                                                                              மருத்துவ பாகம் ;   சமூலம்                                                                                                   குணம்           ;                                                                                                                              தீர்க்கும் நோய்கள்

உரியவு ரித்தழைதானோது பதிணெண்

ணரிய நஞ்சைத் தின்றவர்க்கு மாகுந் – தெரிவரிய

வாதவெப்பு காமாலை மைந்தர்க் குறுமாந்தஞ்

சீதமகற்றுந் தெளி.

               சந்நி பதின்மூன்றுஞ் சந்தொடித்த வாதமுத

               லுன்னு விஷக்கடியு மோடுங்காண் – மின்னுங்

                கவுரிநிற முண்டாகுங் காசினியு ளேநல்

               லவுரி யிலையா லறி

 

 செய்கை ; சோபாநாசினி,விஷநாசகாரி,வியதாபேதகாரி,மலகாரி,உற்சாககாரி.

அவுரி இலை தாவர கந்தமூல விஷங்கள் 18ம்,வாதசுரம்,காமிலம், மாந்தம், சீதளம்,சந்நிபாதங்கள்,கீல்வாதம்,சர்ப்பவிஷம் இவற்ரை நீக்கும். தேகத்திற்குப் பொன் மேனியைத் தரும்.

                              வேர்

எல்லா விஷங்களுக்கு மேற்ற முறிப்பாகும்

பொல்லாச் சுரமூர்ச்சை பொங்குவேட்டை நில்லாப்  

பவுரிதருங் குன்மமுதற் பன்னோ யொழிவு

மவுரி தருவேருக் கறி

செய்கை ; விஷநாசகாரி.

அவுரி வேரினால் சர்வ விஷம்,சுரம்,மூர்ச்சை,வெள்ளை,வயிற்றுநோய் முதலிய பல ரோகங்கள் போம்.         

1.   இலையை அரித்து கொட்டைப் பாக்களவு காலை 200மிலி வெள்ளாட்டுப்பாலில் 3 நாள் கொடுக்க மஞ்சள்காமாலை, அந்திமாலை தீரும்.

  1. இலையை அரைத்து சிரங்குகளுக்குப் பூசி மாலை ஸ்நானம் செய்விக்க ஆறும்
  2. இலைச் சாற்றை உலர்த்திப் பொடித்தி சிரங்குகளின்மேல் தூவ ஆறும்.
  3. மேற்படி பொடியை 100மிகி ,நீரில் கலந்து தினம் 2 வேளை கொடுக்க ரத்தவாந்தி,காக்கைவலி,ஈரல்களின் வீக்கம்,நரம்புகளைப் பற்றிய ரோகம் நீங்கும்.
  4. மேற்படி பொடியை சிற்றாமணக்கெண்ணையில் குழைத்து குழந்தைகளின் வயிற்ரைச் சுற்றி தடவ மலத்தை வெளியாக்கும்.
  5. இலை,கையாந்தகரை,குப்பைமேனி,கொட்டைக்கரந்தை,வல்லாரை, பொற்றலைக்கையாந்தகரை,செருப்படைபொடித்து சமன் கலந்து  திரிகடி,காலைமாலை,தேனில் கொடுத்துவர ஸ்திரிகளுக்குண்டான உதிரக்கட்டு,வயிற்றிலுண்டாகின்ற கிருமிக் கூட்டம்,கீல்வாதம், சர்ப்பவிஷம் நீங்கும்.தேகம் பொன்மேனியாகும். இம்முறை கற்பத்தில் ஒன்று.இச்சா பத்தியம் புளி,புகையிலை,போகம் நீக்கவும்.
  6. வேரை அரைத்து நெல்லிக்காயளவு,200மிலி பசும்பாலில் கலந்து காலை 8 நாள் கொடுக்க விஷ சிலந்தி,எலிவிஷம் போம்.உப்பில்லாப் பத்தியம்.
  7. வேர்,சுக்கு வகைக்கு 10கிராம் இடித்து சுண்டக் காய்ச்சி கொடுக்க மருந்து வீறு தணியும்.
  8. வேர்ப்பட்டையுடன் மிளகு சேர்த்தரைத்து கொட்டைப்பாக்களவு,ஆவின் பால் அல்லது வெள்ளாட்டுப்பாலில் கொடுக்க விஷ செந்துக்களின் கடிவிஷமும்,நஞ்சுபொருள் விஷமும்,கரப்பான் வகைகளும் தீரும்.
  9. வேர் 20கிராம்,அறுகம்புல் 30கிராம்,மிளகு 3,மையாய் அரைத்து புன்னைக் காயளவு தினம் 3 வேளை உப்பு,புளி நீக்கிச் சாப்பிட பாம்பு, தேள்,பூரான், செய்யான் நஞ்சு நீங்கும். காலைமாலை சாப்பிட்டு இச்சாபத்தியமிருக்க மருந்து வேகம் தணியும்.
  10. வேர் 30கிராம்,பெருநெருஞ்சில் இலை 50கிராம் அரைத்து எலுமிச்சை யளவு மோரில் கொடுக்க வெள்ளை தீரும்.
  11. வேர்பட்டை,இலை,பொரித்த பெருங்காயம்,மிளகு சமனரைத்து சுண்டைக்காயளவு மத்திரை செய்து தினம் 3 வேளை கொடுக்க நரம்புச் சிலந்தி,ஓடுவாயு கட்டிகள்,கீல்வாதம் தீரும்.
  12. 1பிடி இலை,2 சிட்டிகை சீரகம் 6 மிளகு இடித்து 4ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து வேளைக்கு 2மடக்கு தினம் 4வேளை கொடுக்க வாதக்காய்ச்சல், சன்னிக்காய்ச்சல், கீல்வாதம், குன்மம், மாந்தம், காமாலை தீரும்.



கருத்துகள் இல்லை: