பக்கங்கள்

4 ஜூலை, 2018

அழிஞ்சில் Alangium salvijfoliunmgium salvijfoli L;fLf Alangiaceae (Alangium decapetalum )

                                            அழிஞ்சில்          
Alangium  salvijfoliunmgium salvijfoli L;fLf  Alangiaceae (Alangium decapetalum )

மாற்றுப்பெயர்  ; அங்கோலம் .                                           வளரியல்பு     ; முள்ளுள்ள மரம்-புதர் காடுகளிலும்,வேலிகளிலும் தானே வளரும்.
இலைஅமைப்பு ;  நீண்ட இலைகள்
பூ,காய் ; கருப்பு,வெள்ளை,சிவப்பு,மஞ்சள் என பூக்களில் வேறுபாடு உண்டு.                                                                  மருத்துவ பாகம் ;  வேர்பட்டை,இலை,விதை.                               குணம்வியதாபேதகாரி,வமனகாரி,கிருமிநாசினிபித்தகாரி,சுரஹரகாரி தீர்க்கும் நோய்கள் ;
 அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
 மொழிஞ்சபித் தத்தையுயர்த்தும் – விழுஞ்சீலாங்
 குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
 திட்டமென வறிந்து சேர்
()அழிஞ்சில் மரமானது வாதகோபம்,கபதோஷம்,சீழ்வடியும் பெருநோய் (குஷ்டம்) போக்கும்.ஆனாலும் பித்தத்தை உபரி செய்யும்.
   பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
   செல்லாக் கிரந்திரணம் சேர்நோய்க – ளெல்லாமும்
   அங்கோலங் காணில் அரந்தைசெய் நோய்களெல்லாம்
   பொங்கோல மிட்டோடிப் போம்.
() அங்கோலம் என்று சொல்லப்படுகின்ற அழிஞ்சி கபத்தினால்,ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லாவித தோஷங்களும்,பேதி,கிரந்தி, விரணம் ஆகியவையும் போம்.
               அழிஞ்சில் வித்து(Alagium Decapetalum Seeds)
 நிகருமிடை மெல்லியலே இத்தரையில்
அழிஞ்சில் வித்ததனாற் சாறுபல – மென்னவெனில்
 மறையு மஞ்சனமா முகும் சனவசியம்
 அது செய்திடவே நன்று.
(0 நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும்,உலக வசியமும் உண்டாகும்.
  1. வேர் பட்டைச் சூரணம் 1-2 கிராம் நீரில் கொடுக்க வாந்தியாகும்.அரை கிராம் கொடுக்க வாய் குமட்டும். சுரத்தைப் பரிகரிக்கும்.
  2. நீடித்து கொடுக்க 1-1/2 குன்றி(100-150மிலி) போதுமானது என்று அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.இதனால் பற்கடிகளாலேற்பட்ட விஷங்கள்,குட்டம்,கிரந்தி,விரணம்,பேதி,நீங்கும்.(விஷக்கடிகளுக்கு ஒருமுறை ஆந்திக்குக் கொடுத்தல் நலம்)
  3. அழிஞ்சில் வேர்,விழுதிவேர் சமனெடுத்து 5-6 நாள் நிழலிலுலர்த்தி, முறைப்படி குழித்தைலம் இறக்கி புறைகண்ட ரணத்தில் செலுத்தி கட்டிவர விரைவில் ஆறும்.
  4. ஜாதிக்காய்,ஜாதிபத்திரி,இலவங்கம் சமன் பொடித்து,சமன் அழிஞ்சில் வேர்பட்டை சூரணம் கலந்து தினமிருவேளை 6-10 கோதுமை எடை கொடுக்க குஷ்டரோகம் குணமாகும்.
  5. அழிஞ்சில் வித்து தைலத்தை சரும ரோகங்களுக்குப் பூச ஆறும்.
  6. உள்ளுக்குக் கொடுக்க கபவாதத்தையும்,குட்டத்தையும் நீக்கும்.
  7. இதில் காய்,இலை,நரம்புகளில் கருப்பு நிறமோடிய கருப்பழிஞ்சில் உண்டு.இது வசியம்,ஜால வித்தைகளுக்கு சிறந்தது.மேலும் விபரங்களுக்கு புலிப்பாணி ஜால காண்டம் காண்க. ஆனாலும் மருத்துவத்திற்கு சிவப்பே சிறந்ததென்று அறிக.
  8. இலைச் சாறு அல்லது கற்கம் 1-2 கிராம் அளவாக காலைமாலை கொடுத்துவர கிராணி,குன்மம்,கப நோய்கள் தீரும்.





கருத்துகள் இல்லை: