அறுவதா Ruta graveolens L;Rutaceae
மாற்றுப்பெயர் ; சதாப்பு வளரியல்பு ; மணமுடைய
பசுமையான குறுஞ்செடி. இலைஅமைப்பு ; பூ,காய் ; மருத்துவ பாகம் ; இலை குணம் ; உற்சாககாரி,அங்காகர்ஷணநாசினி,ருதுவர்தனகாரி, கிருமிநாசினி,
கபஹரகாரி தீர்க்கும் நோய்கள்;வலி போக்குதல்,வெப்பமுண்டாக்கல்,கோழையகற்றுதல், மாத
விலக்கு உண்டாக்குதல்
கணமாந்த
ரூட்சை கணக்கழிச்சல் வாந்தி
குணமாம்
பசியுங் குலவும் – வணமயிலே
கூடுநிறைகருப்பக் கோதையர்க்காம் வேதகலு
நாடு சதாபலையி
னால்
()சதாபலை எனும் சதாப்பு
இலையினால் பால்மாந்தம் முதலியவற்றால் விளகின்ற சுரம் ,கணபேதி,கபவமணம்,பிரசவ
மாதர்களின் வேதனை நீங்கும். தீபனமுண்டாகும் என்க.
1. இலைச்சாறு 10 மிலி தாய்ப்பாலுடன் கலந்து சிறு
குழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல்,இசிவு ஆகியவற்றைப் போக்கும்.
2.
இலையுடன்
கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி உடலில் தேய்த்துக் குளித்துவர
சளி,நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.
3.
இலையை
பொடித்து வயதிற்கேற்ப ¼-1 தேகரண்டி தேனில் குழைத்துக் கொடுத்துவர
வயிற்றுப்பொருமல்,வயிற்றுவலி, செரியாமை,நாட்பட்ட மார்புச் சளி,
பால்மாந்தம்,மாந்தசுரம்,கணை, வயிற்றுப்போக்கு தீரும்.
4.
உலர்ந்த
இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாய் சுவாசிக்க இருமல் தணியும்.
5.
இலையுடன்
சிறிதளவு மிளகு சேர்த்து வெண்ணையாய் அரைத்து வேளைக்கு 200-300 மிகி தாய்ப்பாலில்
கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க
சளியை வெளியேற்றி காய்ச்சல் ,இசிவு
ஆகியவற்றைப் போக்கும்
6.
நிழலில்
உலர்த்திய சதாப்பிலை,சீரகம்,அதிமதுரம்,கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை,சதகுப்பை
வகைக்கு 40 கிராம்,தனியா 250 கிராம்,நன்கு பொடித்து சலித்து,சமன் கற்கண்டு
பொடிகலந்து, தினம் 2-3 வேளை கொடுத்துவர வாயுவை கண்டிக்கும்.சீதளத்தை அகற்றும்.
ஸ்திரீகளுக்குண்டான உதிரச் சிக்கலையும்,வயிற்றில் மரித்துப்போன கருவையும்
வெளியாக்கும்.சூதக சன்னி வாயுவினால் கானும் வயிற்றுவலி,இசிவு முதலியவைகளுக்கு
சிறந்த அவிழ்தமாகும்.
7.
இச்செடியிலையை
உண்டு பெருத்துவரும் புழுவை, புழு ஒன்றுக்கு 120மிலி ந.எண்ணை வீதம் விட்டு சூரிய
புடமிட்டு,வடித்து 3-4 துளி ,5-6 நாள்,தினமிருவேளை நாசியினுள்விட்டுவர மேகத்தினால்
நாசியினுட்புறத்தில் தின்றுகொண்டு போகும்படியான விரணங்கள் ஆறும்.
8.
மேற்படி
தைலத்தை காதில் 1-2 துளி விட்டுவர மண்டையின் உட்கரப்பான்,சீழ்வடிதல்,காதுவலி,மந்தம்,கர்ணவாதம்
தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக