ஆடாதொடை Adhatodavasicanees;Acanthaceae
ஆடாதோடைக்கும்
ஐந்து மிளகுக்கும் பாடாத நாவும் பாடும்
பழமொழி
மாற்றுப்பெயர்கள்
; ஆடாதோடை,ஆடு தொடா மூலி
வளரியல்பு
; ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் குறுஞ்செடி.
இலை ; நீண்ட முழுமையான ஈட்டி வடிவ
இலைகளும்,வெண்ணிறப் பூவும்
மருத்துவ
பாகம் ; இலை,பூ,வேர்
செய்கை ; கபஹரகாரி,கிருமிநாசினி,அங்காகர்ஷணநாசினி
மருத்துவ
குணம் ; இலை கப ஆதிக்கம்,வாத தோஷம்,பற்பல சுரம்,சந்நிபாதம், வயிற்றுநோய் நீக்கும்.
வேர் ;
இருமல்,அக்கினிமந்தம்,சுவேதபித்தம், கஷ்டசுவாசம்,கபரோகம் நீக்கும்.
ஆடாதோ
டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்குநாடின்
மிகுத் தெழுந்த சன்னிபதின்மூன்றும் விலக்கு
மகத்துநோய் போக்குமறி
()ஆடாதொடை
இலை கப ஆதிக்கம்,வாத தோஷம்,பற்பல சுரம்,சந்நிபாதம்,வயிற்றுநோய் ஆகியவற்றை
நீக்கும்.
காசமொடு
மந்தங் கதித்தபித்தங் கொடுஞ்சு
வாசங்கழுத்துவலிமுதனோய்
– கூசியே
யோடாதிராங்
கொருநாளு மொண்டொடியே
யாடாதோ
டைத்துருக் கஞ்சி.
()ஆடாதொடை வேரினாலிருமல்,அக்கினி
மந்தம்,சுவேதபித்தம்,கஷ்டசுவாசம் ,களரோகம் முதலியவை போம்.
இமயமலை
சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் ஆடாதோடை
என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன.
1.
ஆடாதொடை இலை,வேர்,மிளகு
சேர்த்துக் காய்ச்சி,வடித்து, தேன் கலந்து பருகக் காய்ச்சல் குணமாகும்
2.
ஆடாதொடை,கோரைக்கிழங்கு,பற்பாடகம்,விஷ்ணுக்கிரந்தி,துளசி,பேய்ப்புடல், கஞ்சாங்கோரை,சீந்தில் வகைக்கு
30கிராம்,இடித்து,1லி.நீரில் 500மிலியாகக் காய்ச்சி,வடித்து(அஷ்டமூலக்குடிநீர்)30-60மிலி,வேளைக்கு பருகிவர
எவ்வித சுரமும் தீரும்
3. சுக்கு,திப்பிலி,கிராம்பு,சிறுகாஞ்சொறிவேர்,அக்கராகாரம்,முள்ளிவேர்,கடுக்காய்தோல், ஆடாதொடை,கற்பூரவல்லி,கோஷ்டம்,சிறுதேக்கு,நிலவேம்பு,வட்டத் திருப்பி
முத்தக்காசு வகைக்கு சமன்,3ல்1ன்றாய் காய்ச்சிப் பருக
இருமல் சளியுடன் கூடிய சுரம் குணமாகும்
4.
பற்பாடகம்,கண்டங்கத்திரி,ஆடாதொடை,சுக்கு,விஷ்ணுக்கிரந்தி
வகைக்கு 40
கிராம், சிதைத்து 4ல்1ன்றாய்
காய்ச்சி,25மிலி
தினமிகுவேளை,4நாள் கொடுக்க
நச்சுச்சுரம் தீரும்.
5.
இலைச்சாறு,தேன் சமன் கலந்து சர்க்கரை சேர்த்து
தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி,கோழை மிகுந்து
மூச்சுத்திணறல்,இருமல்,இரத்தம் கலந்து கோழை வருதல், குணமாகும்.
அளவு; குழந்தைகள் - 5+5 துளிகள்
சிறுவர் – 10 +10 துளிகள் பெரியவர்கள்
- 15+15 துளிகள்
6.
இலைச்சாறு 2 தேகரண்டி எருமைப்பாலில் காலைமாலை
கொடுத்து வர சீதபேதி,இரத்தப்பேதி குணமாகும்.
7.
10 இலைகளை 2ல் 1ன்றாய்க் காய்ச்சி
250மிலி,காலைமாலை தேன் கலந்து 40 நாட்கள் சாப்பிட்டுவர என்புருக்கிக்காசம்(TB),
இரத்தக்காசம்,சளிச்சுரம், சீதளவலி, விலாவலி, தீரும்.
8.
வேருடன் சமன் கண்டங்கத்திரி வேர் சமன்
சேர்த்துப் பொடித்து ½ - 1 கிராம் தேனில் சாப்பிட்டுவர நரம்பு இழுப்பு,சுவாசகாசம்,சன்னி,
ஈளை,இருமல், சளிச்சுரம், என்புருக்கி,குடைச்சல் வலி குணமாகும்.
9.
இலையும்,சங்கன் இலையும் வகைக்கு 1பிடி ½ லி
நீரில் போட்டு பாதியாய்க் காய்ச்சி காலைமாலை பருகிவரக் குட்டம்,கரப்பான்,
கிரந்தி,மேகப்படை, ஊறல், விக்கல்,வாந்தி,வயிற்றுவலி தீரும்.
10.
உலர்ந்த ஆடாதொடை இலைத்தூளை ஊமத்தை சுருட்டிப்
புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.(அளவுக்கு அதிகமாக புகைப்பின் மயக்கம்
வரலாம்)
11.
700 கிராம் தூய இலைகளை நெய் விட்டு
வதக்கி,அக்கரா, சித்தரத்தை, இலவங்கம் வகைக்கு 10 கிராம்,ஏலம்4 பொடித்துப் போட்டு
பொன் வறுவலாய் வறுத்து,2லி நீர் விட்டு 1லி ஆக வற்றக் காய்ச்சி வடித்ததில் 1கிலோ
சர்க்கரை சேர்த்து தேன் பதமாய்க் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் 1 கரண்டி
கலந்து சாப்பிட்டுவர நீர்க்கோவை தீரும்,தினம் 3 வேளையாக நீடித்து கொடுத்துவர
காசம்,என்புருக்கி,மார்ச்சளி, கப இருமல், புளூரசி, நீடித்த ஆஸ்துமா, நிமோனியா
குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.
- திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய்
கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் கலந்து குடிக்க சுவாச
மண்டல உறுப்புகள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும்.
கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.
- வேர்கசாயம் கடைசி மாதத்தில் காலை மாலை
சாப்பிட்டுவர சுகப்பிரசவம் ஆகும். (ஆடாதொடையிலிருந்து கிடைக்கும்
காரத்தன்மையுடைய வாசிசைன் மெதர்ஜின் போன்ற மருந்துகளுக்கு இணையானது.
பழங்காலத்தில் செவிலியர்கள் சுலபமாக பிரசவம் ஏற்பட பயன்படுத்தினர்)
- இலைகளோடு, வேர் எடுத்து ஒரு லிட்டர்
நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு இரு வேளை ஒரு வாரம் குடித்து வர
மூச்சிரைப்பு நோய் குறையும்.
- இலைக்கசாயம் 25 மிலியுடன் சிறிது திப்பிலி
சூரணம்,தேன் கலந்து தினம் 2 வேளை கொடுத்து வர இரத்தம் சுத்தியாகும்.கபம்
குறையும்.கஷ்டசுவாசம் தீரும்.
- இலையின்
ஈர்க்கு,நிலவேம்பு,சீந்தில்கொடி,பேய்ப்புடல்,வெப்பாலை அரிசி வகைக்கு 20கிராம்
இடித்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 25மிலி தினம் 2-3 வேளை கொடுக்க
விஷம்,குளிர்சுரம் குணமாகும்.
- ஈர்க்கு,திப்பிலி,சுக்கு,சித்தரத்தை,ஓமம்,கண்டங்கத்திரி
வகைக்கு 10கிராம் முன் போல் தேன் சேர்த்து கொடுக்க கபசுரம் நீங்கும்.
- வேர்பட்டை 80கிராம்,பூ கதிர் 160கிராம்,பேரரத்தை,சித்தரத்தை,
வாய்விளங்கம், சிறு
தேக்கு,கோரைக்கிழங்கு,இச்சிப்பட்டை,கரிமஞ்சள்,மிளகு,கண்டங்கத்திரி வகைக்கு 10
கிராம்,தூதுவேளை உலர்ந்த இலை,காஞ்சொறிவேர் வகைக்கு 80கிராம்,அரிசித்திப்பிலி
120கிராம்,கோஷ்டம், காட்டாத்திப்பூ வகைக்கு 10கிராம் இடித்துப் பொடித்து,20கிராம்
சாம்பிராணி பதங்கம்கூட்டிக் கலந்து(ஆடாதொடை சூரணம்) 5கிராம் பாலில் கலக்கி
தினம் 2வேளை 10-20 நாள் கொடுத்துவர சீதள சம்பந்தத்தாலுண்டான சுவாசகாசம்,
இரைப்பிருமல் தீரும்.
19. ஆடாதொடை இலைகளை நடுநரம்பு நீக்கி,10மிளகு,1பிடிதுளசி,2 வெற்றிலை சேர்த்து,சிதைத்து,4ல்1ன்றாய் காய்ச்சி,கற்கண்டு கலந்து, தினமிருவேளை பருக இருமல்,சளி,தொண்டைக்கட்டு தீரும் வறட்டு இருமல் குணமாகும்.
20. ஆடாதொடையை தேன் விட்டு
வதக்கி,தாளிசபத்திரி.அரிசிதிப்பிலி, அதிமதுரம் சமன் பொடித்துப்
போட்டு,4ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி அருந்திவர காசநோய், இருமல்,இரைப்பு குணமாகும்
21. .தூதுவேளை,ஆடாதொடை,கண்டங்கத்திரி வேர்,சித்தரத்தை
நான்கையும் அரைத்து நீரிலிட்டு காய்ச்சிப் பருக,1தேகரண்டி
குழந்தைகளுக்குக் கொடுக்க சளி,மூக்கடைப்பு தீரும்.
22. கண்டங்கத்திரி,ஆடாதொடை,வேர் வகைக்கு 50கிராம்,திப்பிலி 5 கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி,தினம் 4வேளை பருக கப இருமல் தீரும்
23. ஆடாதொடைஇலையை இடித்து பிட்டவித்து சாறு100மிலியில் திரிகடி
திப்பிலி பொடி கலந்து உட்கொள்ள ஈளை இருமல் தீரும்.
24. ஆடாதோடை
இலையை கசாயமாக செய்து தொடர்ந்து 4 நாட்கள் குடிக்க, சளி, காய்ச்சல் கட்டுக்குள்
வரும்.
25. ஆடாதொடைஇலை5,மிளகு10,துளசிஇலை1பிடி,வெற்றிலை2,சேர்த்திடித்து
4ல்1ன்றாய்க்
காய்ச்சி 75மிலி,தினம்2,3வேளை
சாப்பிட மூக்கழற்சி குணமாகும்
26. ஆடாதொடைஇலை,வேர்,மிளகு சேர்த்துக் காய்ச்சி,வடித்து,தேன் கலந்து பருக காய்ச்சல் குணமாகும்
27. பற்பாடகம், கண்டங்கத்திரி, ஆடாதொடை,சுக்கு,விஷ்ணுக்கிரந்தி வகைக்கு 40கிராம்,சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி,25மிலி தினமிருவேளை, 4 நாள் கொடுக்க நச்சுச்சுரம் தீரும்
28. விஷ்ணுக்கிரந்தி சமூலம், ஆடாதொடைவேர், கண்டங்கத்திரிவேர், தூதுவேளை வகைக்கு 30கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி, காலை மாலை 50மிலி கொடுக்க என்புருக்கிக்காய்ச்சல் தீரும்
29. கண்டங்கத்திரி சமூலம், ஆடாதொடை வகைக்கு30கிராம், விஷ்ணு
கிரந்தி பற்பாடகம் வகைக்கு 15கிராம்,சீரகம்,சுக்கு வகைக்கு 10கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி 4-6வேளை சாப்பிட்டு வர நிமோனியா, ப்ளு (மண்டைநீரேற்றக்காய்ச்சல்) தீரும்
30. திரிகடுகு,திரிபலை,வெப்பாலையரிசி,கடுகுரோகிணி,ஆடாதொடைவேர், மஞ்சள், மரமஞ்சள்
வகைக்கு10கிராம் இடித்து கசாயம் செய்து கொடுக்க கண்டகூச்ச சன்னி தீரும்.
31.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக