பக்கங்கள்

11 அக்டோபர், 2018

ஆல்பகோறாப் பழம் PrumusCommunis


ல்பகோறாப் பழம்                     PrumusCommunis                    மாற்றுப்பெயர் ;                                                                   வளரியல்பு ;                                                                               இலைஅமைப்பு ;                                                                              பூ,காய் ;                                                                             மருத்துவ பாகம் ;                                                                   குணம்         ; அந்தர்ஸ்நிக்தகாரி,இளகுமலகாரி,பலகாரி                              தீர்க்கும் நோய்கள்        
        நேராய் நடுமார்பில் நெட்டுகின்ற வாதபித்தம்
        சேராதகற்ரிவியுந் திண்ணமிது – பேராத
        வெப்பமலக்கட்டை வெளியாக்கும் ஆல்பகோறா
        செப்பும் பழத்தினது சீர்.               
()ஆல் பகோறாப் பழத்தினால் வாதமும்,பித்தமும் நீங்கும்.மலத்தைப் போக்கும்.தேக உஷ்ணத்தைச் சாந்தப்படுத்தும்.
1.   தேவையான பழங்களை சுவைத்துச் சாப்பிட்டு கொட்டைகளை துப்பிவிட இருதயத்தைப் பற்றின சூடு,பித்தத்தினாலுண்டான தாகம்,சூட்டைப் பற்றிய சுரங்கள்,தலைவலி,சொறி ,சிரங்கு,தினவு, முதலியவை தீரும்.
2.   பத்திய காலங்களில் பழத்தைப் பிசைந்து எடுத்த சாறு சிறு அளவாக சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வீரியம் கெடாது.
3.   பழத்தின் சத்தை வாங்கி சர்க்கரை சேர்த்து சர்பத்தாகச் செய்து சாப்பிட இருதயத்தைப் பற்றின சூடு,பித்தத்தாலுண்டான தினவு,சொறிசிரங்கு போம்.
                                                                                                                                 


கருத்துகள் இல்லை: