பக்கங்கள்

11 அக்டோபர், 2018

ஆதொண்டை Capparis zeylanica L; Capparaceae


                                                ஆதொண்டை                                                                                   Capparis zeylanica L;Capparaceae                மாற்றுப்பெயர் ;                                                                                                                                                       வளரியல்பு           ; முள்ளுள்ள ஏறு கொடி                                                                                                          இலைஅமைப்பு ;  தனி இலைகள்                                                                                                                 பூ,காய்                    ;செந்நிறப்பூக்கள்,சமைத்துண்ணக்கூடிய சதைப் பற்றான காய்கள்     மருத்துவ பாகம் ;இலை,காய்,வேர்.                                                                                                                    குணம்            ; நாடி நடை மிகுத்து வெப்பந்தரும்,   பசி தரும்,உடல் தேற்றும்                             தீர்க்கும் நோய்கள் ; வியதாபேதகாரி,ஜடராக்கினிவர்தினி,உற்சாககாரி
1.       இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி உணவுடன் கொள்ளச் சுவையின்மை,பசியின்மை நீங்கி பசியுண்டாகும்.
2.       50 கிராம் வேர் பட்டையை இடித்து 1லி நீரிலிட்டு 100 மிலியாக காய்ச்சி வடித்து 30 மிலி வீதம் 3 வேளை சாப்பிட்டுவரப் பசியின்மை,வாந்தி, மார்புவலி தீரும்.
3.       காயை சமைத்து அல்லது வற்றலாக்கி உபயோகிக்கலாம்.
4.       வேர் சூரணம் 160கிராம்,கருஞ்செம்பைப் பூ,பளிங்கு சாம்பிராணி, வெள்ளுள்ளி,கம்மாறு வெற்றிலை வகைக்கு 80கிராம்,தும்பை பூ, கஸ்தூரி மஞ்சள்,சந்தனத்தூள் வகைக்கு 40 கிராம் மிளகு 10கிராம், அபினி 5கிராம் பசுவின் பாலிலரைத்து,1லி பசும்பாலில் கலந்து 1லி ந.எண்ணை சேர்த்து மெழுகு பதமாய்க் காய்ச்சி வடித்து, வாரமொருமுறை தலை முழுகிவர எத்தகைய கொடிய தலைவலியும் 2-3 முரையில் குணமாகும்.
5.       வேர்,சங்கம்வேர்,நொச்சிவேர்,எருக்கம்வேர்,சிற்றாமுட்டிவேர் வகைக்கு 200 கிராம் இடித்து 5லி நீரில் 1லி ஆகக் காய்ச்சி வடித்து ஆறவிட்டு அத்துடன் எருக்கம் பழுப்புச்சாறு,எழுமிச்சம்பழச்சாறு, ந.எண்ணை வகைக்கு 1லி, வேப்பெண்ணை1/2லி,கலந்து அடுப்பிலேற்றி திரிகடுகு,ஓமம்,பூண்டு, வசம்பு, ஏலம்,மஞ்சள் வகைக்கு 20கிராம் பாலில் அரைத்துப்போட்டு காய்ச்சி வடித்து தலைமுழுகிவர சிரசுசூலை,சூலைவாயு.வாதசூலை,திமிர்வாதம்,இரைப்பு, நேத்திரக்குத்து,சொறி,சிரங்கு,போகும்.
                                                                             

கருத்துகள் இல்லை: