ஆரை Marsilea quadrifolia L;Marsilieaceae
மாற்றுப்பெயர் ;ஆலக்கீரை,ஆரைக்கீரை வளரியல்பு ; சிறிய நீர்த் தாவரம். இலைஅமைப்பு ; செங்குத்தான நான்கு இலைகள் பூ,காய் ; மருத்துவ பாகம் ; குணம் ; சீதளகாரி தீர்க்கும் நோய்கள்
தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப்
புண்ணீரை – யென்றுமிந்த
வூராரைச் சாராம லோட்டிவிடு நாவிதழா
நீராரைக் கீரையது நீ
() நல்ல சுவையும் நாவிதழுமுள்ள(4
இதழ்கள் உள்ள)நீராரைக் கீரை பித்த நோயையும்,அதிமூத்திரத்தையும்,இரத்தப் பிரமேகத்தையும்
நீக்கும்.
1. இதனை துவட்டலாகச் செய்து உன்பது வழக்கம்.
2. கீரையைச் சமைத்துண்ண தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும்.
3. கீரையைச் சமைத்துண்ண பகுமூத்திரம் போகும்.
4. இலைச்சூரணம் 30 கிராம்,2ல் 1ன்றாய்க் காய்ச்சி,,பாலும், பனங்கற்கண்டும்
சேர்த்து காலைமாலை பருகிவர பகுமூத்திரம்,அதிதாகம்,சிறுநீரில் இரத்தம் போதல் தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக