பக்கங்கள்

11 அக்டோபர், 2018

ஆள்வள்ளிக் கிழங்கு Jatropha Manihot

                 ள்வள்ளிக் கிழங்கு                                            Jatropha Manihot                       
மாற்றுப்பெயர் ; மரவள்ளிக் கிழங்கு ,பெருவள்ளிக் கிழங்கு,            வளரியல்பு ;                                                                  இலைஅமைப்பு ; விரல் போன்ற அகன்ற இலைகள்                     பூ,காய் ;                                                                       மருத்துவ பாகம் ; கிழங்கு                                                   குணம் ;    பலகாரி                                                           தீர்க்கும் நோய்கள்
   வாதகபம் பித்தமொடு மாமூலம் வாதகுன்ம
   மோதுபல நோய்மந்த முண்டாகும் – போதின்
   மருவள்ளிக் கொண்டகுழன் மாதே! யுலகிற்
   பெருவள்ளி யின்கிழங்காற் பேசு.
() பெருவள்ளிக் கிழங்கு என்று கூறப்பட்ட ஆள்வள்ளிக் கிழங்கால் திரிதோஷ தொந்தம்,வாதமூலம்,வாதகுன்மம் முதலிய சில நோய்களும், அக்கினி மந்தமும் உண்டாகும்.
     பித்தங் கலந்த பெருவாயு வைக்கூவு
     மெத்தஅனல் மந்தத்தை மேலெலுப்புஞ் – சுத்த
     இரவள்ளிக் கொண்டகு ழலேந்திழையே! யிந்த
     மரவள்ளிக் கந்தமென வை
()மரவள்ளிக்கிழங்கு பயித்திய வாததொந்தத்தையும்,அக்கினி மந்தத்தையும் உண்டாக்கும். 
1.   நெருப்பில் சுட மாவாகும்.இத்துடன் தேன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
2.   இதனைச் சுத்தம் செய்து நன்றாக வேக வைத்து மேல் தோல் நீக்கி தேங்காய் சேர்த்து உண்பதுண்டு. அன்றியும் வேகவைத்து மேல் தோல் நீக்கி துருவி சர்க்கரை,ஏலம்,தேங்காய் துருவல் சேர்த்து உண்பார்கள். இதனால் தாது விருத்தியுண்டாகும். நாவிற்கு ருசி தரும். ஆனால் மலங்கட்டும்.அக்கினி மந்தம் உண்டாகும்.தேங்காய் சேர்வதால் பெரும்பாலும் கெடுதல் செய்யாது.

1.   ஈஇ
2.    

கருத்துகள் இல்லை: