ஆலீவ் ஆயில் olive Oil
மாற்றுப்பெயர் ; வளரியல்பு ; இலைஅமைப்பு ;
பூ,காய் ; மருத்துவ
பாகம் ; குணம்
; தீர்க்கும்
நோய்கள்
- இரண்டு
ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால், வாதம் மற்றும் இதய் நோய்கள்
தடைபடும்.
- ஆலிவ் எண்ணெயை அதிக அளவு எடுத்துக் கொண்டால்,
அது எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியத்தை உடலில் அதிகப்படுத்துகிறது. இதனால்
ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்புருக்கி நோயைத் தவிர்க்கலாம்
- ஆலிவ் எண்ணெய் அதிகமுள்ள ஒரு உணவுக் கட்டுப்பாட்டைக்
கடைப்பிடித்தால் நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்
அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, இன்சுலின் உற்பத்தியும் அதிகமாவதால், நீரிழிவு
நோய் முழுவதுமாகத் தவிர்க்கப்படுகிறது.
- முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் தழும்புகளைப்
போக்குவதற்கு ஆலிவ் எண்ணெய் மிகவும் உபயோகமாக இருக்கும். அதேப்போல், உங்கள் சருமம்
உலர்ந்து இருந்தால், ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். இதனால் தோல் மிருதுவாகும்;
பளபளப்பாகும். முழங்கால், முழங்கை சொரசொரப்புக்களைப் போக்குவதிலும் வல்லது
- ஆலிவ் எண்ணெயைத் தலையில் ஊற்றி, கைவிரல் நுனிகளைக்
கொண்டு சுழற்றி சுழற்றி மசாஜ் செய்தால் கூந்தல் பளபளக்கும். எப்போதும் மெலிதான
ஈரப்பதத்துடனும் கூந்தல் இருக்கும்.
- வாரத்திற்கு ஒரு முறை மிதமான சூட்டில் உள்ள
ஆலிவ் எண்ணெயைத் தலையில் ஊற வைத்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவுதல் நலம். ஆலிவ்
எண்ணெயுடன் முட்டையும் கலந்தால் முடி இன்னும் பளபளக்கும்.
- கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி
பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக