ஆவாரை Cassia
Auriculata L;Caesalpinioideae
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட து ண்டோ”
- பழமொழி - வளரியல்பு ; குறுஞ்செடி இலை ;
பூ,காய் ; பளிச்சிடும்
மஞ்சள் நிறப்பூ,தட்டையான காய் செய்கை ; சமனகாரி,சங்கோசனகாரி,விதை
காமவர்தினி மருத்துவ பாகம் ; சமூலம்
மருத்துவ குணம்;
ஆவாரை இலை,பட்டை
(CassiaAuriculata Leaves & Bark) சொல்லுதற்குமட்டோ தொலையாத மேகநீ ரெல்லாமொழிக்கு
மெரிவகற்று –மெல்லவச மாவாரைப்
பம்பரம்போ லாட்டுந் தொழிலணங்கே யாவாரை மூலியது
()ஆவாரைச் செடியானது
சர்வ பிரமேக மூத்திர ரோகங்களையும்,ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.
ஆவாரம்பூ(Cassia
Auriculata Flower);
தங்கமேனவே சடத்திற்கு காந்தி தரு
மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா
மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிவிடும்
பூவைச் சேராவாரம் பூ
()ஆவாரம்பூ
பிரமேக நீர்,வறட்சி,உடம்பிற்பூத்த உப்புமா,கற்றாழை நாற்றம் இவற்றை நீக்கும்.தேகத்திற்குப்
பொற்சாயலைத் தரும்.
ஆவாரை பிசின்(CassiaAuriculata
Gum); பெருநீர் மறிக்கும் பிரமேகம் போக்கும்
வருநீர்ச் சுருக்குதனை மாற்றுந் –தருநீர்மை பூணுமே னிக்கமலப்
பொன்னே பிடகரெலாம் பேணுமே காரிப் பிசின் ()ஆவாரைச் செடியின்
பிசினானது வெகுமூத்திரத்தையும்,பிரமேகரோகத்தையும், வாதகிரிச்சரத்தையும் போக்கும்.
"மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான் ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல் எவாரைக் கண்மடமாதோ?"
- ( பதார்த்த குண விளக்கம்
)-
- பூவை நன்றாய் அலம்பி பச்சைப் பயறுடன் ,கூட்டி
பாகப்படி கூட்டமுது செய்து உண்ண மது மூத்திரம், இரத்த மூத்திரம், பெரும்பாடு,உட்காங்கை
, தாகம் இவைகள் போகும்
- நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு
காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து காபி போல் கலந்து
காலை, மாலை பருகிவர உட்சூடு,நீரிழிவு,நீர்க்கடுப்பு குணமாகும்.
- பூ இதழ் வதங்கி(வாடி) வரும் சமயம் எடுத்து இரண்டு எடைசீனாக் கற்கண்டு போட்டு ஆட்டி வழித்து
எடுக்க குல்கந்து போலிருக்கும் , இத்துடன் போதிய அளவு தேன் கூட்டி கலந்து பிசைந்து சில தினம் ரவியில் வைத்து வேளைக்கு10
கிராம்,தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர அதிக நன்மையைத் தரும் .
- பூவை உலர்த்தி வேளைக்கு 10 கிராம் கியாழமிட்டு
பால் சர்க்கரை கூட்டி காப்பி போல் சாப்பிட
நீரிழிவு,உட்சூடு,நீர்க்கடுப்பு,முதலியவை குணமாகும்.
- பூவை உலர்த்தி நலுங்கு மாவுடன் கூட்டி தேய்த்து
ஸ்நானம் செய்து வர கற்றாழை நாற்றம்,உடம்பில் உப்பு பூத்தலை நீக்கும்.உடல் மினுமினுக்கும்.
- ஆவாரம் பட்டை 20 கிராம் நன்றாய் இடித்து ஒரு
மட்கலயத்தில் போட்டு முக்கால் படி நீர்விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து,
வீசம் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, தினம் இரு வேளை 50 மிலி வீதம் கொடுத்து
வர மதுமேகம் (சர்க்கரை நோய் ),ரத்தமூத்திரம்(ரத்த வெட்டை), பெரும்பாடு,தாகம் இவைகள்
போகும் .
- ஆவாரைப் பஞ்சாங்க சூரணம்(இலை,பூ,பட்டை,வேர்,காய்
வகைக்குசமன்) 250 கிராம், கடலழிஞ்சில்பட்டை,மருத மரப்பட்டை,நாவல் மரப்பட்டை,தண்ணீர்
விட்டான் கிழங்கு,பாதிரி வேர்,வகைக்கு 80 கிராம்,மரமஞ்சள்,கல்நார் வகைக்கு 40கிராம்,குரோசாணி
ஓமம் 10கிராம்,இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு,வேண்டும் போது வேளைக்கு
20 கிராம் சூரணத்தை கால் படி நீரில் அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி
தினம் 2 வேளை சிறிது சர்க்கரை கூட்டிப் பருகி வர மதுமேகம்(சர்க்கரை நோய்),தேககாங்கை
(சர்க்கரை நோயாளர்களுக்கான உடல் , கை கால்களில் ஏற்படும் எரிச்சல்),தாகம், முதலியவை
நீங்கும்.தேவை என்றால் பசும் பால் கூட்டிக் கொள்ளலாம்.
- நன்கு சுத்தம் செய்த எள் 400கிராம்,வேர் பட்டை
சூரணம்,வறுத்த கடலை மாவு வகைக்கு 200கிராம்,கலந்து தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை
சேர்த்து இடித்து இலேகியம் செய்து நெல்லிக்காயளவு,காலைமாலை சாப்பிட்டு வர தாகம்,அழலை,நீரிழிவு
போன்ற பல பிணிகள் தீரும்.
- பிசின் 2-3 குன்றி எடை தினம் 2 வேளை 20-40
நாள் பசும்பாலில் சாப்பிட்டுவர விந்து நஷ்டம்,மதுமேகம்,தாகம்,உட்காங்கை தீரும்.
- பட்டையை உலர்த்திப் பொடித்து 20கிராம்,1 லிட்டர்
நீரிலிட்டு 200மி.லியாகக் காய்ச்சி அந்தி சந்தி குடித்து வர மதுமேகம்,சிறுநீருடன்
ரத்தம் போதல், பெரும்பாடு தீரும்.
- ஆவாரைப் பஞ்சாங்க சூரணம் 10கிராம் தினம் காலை
மதியம்,மாலை வெந்நீருடன் சாப்பிட மதுமேகம்,பிரமேகம்,உடல்
மெலிவு, உடல் எரிச்சல், வேதனை,மூச்சுத் திணறல் ஆகியன குணமாகும்.1-3 மண்டலம் சாப்பிட
வேண்டும்.
- பூவை
இரவு ஒரு தம்ளர் நீரில் போட்டு காலை வெறும் வயிற்றில் அதன் தெளிவைக் குடித்து
வர சொறி, சிரங்கு, தேமல் போன்ற துன்பங்கள் போகும்
- பிசின் 3 கிராம் 1 தம்ளர் நீரில் இட்டு சிறிது
பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினம் இருவேளை குடித்து வர வெள்ளைப் போக்கு குணமாகும்.
வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும்.
- பட்டை,கஸ்தூரிமஞ்சள்,1 மிளகாய்,சிறிது சாம்பிராணி,நல்லெண்ணெயில்
காய்ச்சி வடிகட்டி(ஆவாரைத் தைலம்) தலைமுழுகிவர மதுமேகத்தாலுண்டான தோல் வெடிப்பு,தோல்வறட்சி,எரிச்சல்
குணமாகும்.
- இலையோடு உளுந்த மாவை சேர்த்து அரைத்து மூட்டு
வீக்கம், வலி ஆகியவற்றுக்குப் பற்றாகப் போட வீக்கம் தணிந்து வலியும் போகும்
- . 20கிராம் ஆவாரம் பட்டையை பொடித்து 5ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி தினமிருவேளை பருகிவர பெரும்பாடு கட்டுப்படும்
ஆவாரையில்
"சென்னா பிக்ரின்'' எனப்படும் "கார்டியாக் குளூகோசைட் மற்றும் "ஆன்த்ரா
குனைன்ஸ்'', "டேனின்ஸ்'' ஆகிய வேதிப் பொருள்களை உள்ளடங்கி உள்ளது.
பல்வேறு நோய்களுக்கும்
காரணமான "ஸ்டேப்பிலோகக்கஸ் ஆரியஸ்'', "என்டரோ காக்கஸ் "பீக்காலிஸ்'',
"பேச்சிலஸ் சப்டிலிஸ்''.சால்மோனில்லா டைபி'', "சால் மோனில்லா பேரா டைப்பி'',
"விப்ரியோ காலரே'', "சைஜில்லா டிசன்ட்ரோ'' போன்ற நோய்க் கிருமிகளுக்கு எதிராகச்
செயல்படும் மருத்துவ வேதிப் பொருள்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக