ஆனைக்கற்றாழை Furcraea foetida
(L)Haw;Agavaceae (Agave Americana)
மாற்றுப் பெயர் ; இராக்காசி
மடல்,இரயில் கற்றாழை வளரியல்பு ;பெரிய மடல்களையுடைய கற்றாழை இனம். இலைஅமைப்பு ; பூ,காய் ; மருத்துவ பாகம் ; மடல்,குருத்தின் கீழ் உள்ள கிழங்கு. குணம் ; மூத்திரவர்த்தனகாரி,ருதுவர்த்தனகாரி,வியதாபேதகாரி,
மலகாரி. தீர்க்கும் நோய்கள் ;
வெட்டுரணங் காயம் வீக்கமுறும் பல்வலியும்
முட்டும் பிரமேகம் மோதுகின்ற கட்டிப்
பிடிப்பகற்றும் மாதே! பெரியவிராக் காசிச்
செடிப்பயனை யெல்லார்க்குஞ் செப்பு
()
இராக்காசிச் செடியினால் வெட்டுக்காயம்,வீக்கம்,பல்வலி,வெள்ளைகட்டி, மேகவாயுவினால்
உண்டான பிடிப்பு முதலியவை குணமாகும்.
1. மடலை வாட்டிப் பிழிந்த சாற்றில் போதுமான அளவு கேழ்வரகு மாவு
அல்லது மூசாம்பர பொடி கலந்துகொதிக்க வைத்து வீக்கத்தின் மீது பற்றுப் போட கரையும்.
2. 50 கிராம் மடலுடன் 25 கிராம் நன்னாரி வேரைப் பொடித்துச் சேர்த்து
1லி நீரில் 250 மிலி யாகக் காய்ச்சி காலைமாலை 30 மிலி பருகிவர பாலியல் நோயான கொறுக்குப்புண்
கிரந்தி ஆகியவை தீரும்.
3. குருத்தின் கீழுள்ள மென்மையான கிழங்குப் பகுதியை எடுத்து சர்க்கரை
சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட வெள்ளை குணமாகும்.
4. வேர் 30 கிராம் நசுக்கி 4ல் 1ன்றாய்க் காய்ச்சி காலைமாலை
100மிலி பருகிவர சிறுநீர் தாராளமாக இறங்கும்.
5. மடலை குழகுழப்பாகுமாறு துவைத்துக் கட்ட வலிகள் நீங்கும்.
6. மடல் சாற்றை அடிபட்ட காயங்களின்மீது தடவ சீழ் பிடிக்காமல் ஆறும்.
7. வேர்ப்பிசினை தேன் பதமாய்க் கரைத்து சொறி,சிரங்குகளுக்குத் தடவ
ஆறும்.
8. மடலைச் சீவி உள்ளிருக்கும் சதையை இலேசாக அரிந்து நோயுள்ள பாகங்களில்
வைத்துக் கட்டக் குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக