பக்கங்கள்

11 அக்டோபர், 2018

ஆமணக்கு Ricinus communis L;Euphorbiaceae


                           ஆமணக்கு                                             Ricinus  communis L;Euphorbiaceae                                                         
இதனிற் சிற்றாமணக்கு,பேராமணக்கு என 2வகை உண்டு. சிற்றாமனக்கில் வெள்ளை சிவப்பு என 2 வகை உண்டு. அனைத்திற்கும் குணம் ஒன்றே என்றாலும் சிற்றாமணக்கு சிறந்தது என்பர்.
வளரியல்பு ;  உள்ளீடற்ற எளிதில் உடையும் குறு மரம்.                       மாற்றுப்பெயர் ; கொட்டைமுத்து                                                      இலை ; மாற்றடுக்கில் வெண்பூச்சுடைய கை வடிவ மடல்கள்.                       காய் ; முட்களுடன்கூடிய மூன்று விதைகளுடன் வெடித்துச் சிதறும்.                   மருத்துவ பாகம் ; வேர்,இலை,விதை.                                               செய்கை ;இலை ; க்ஷீரவர்தினி,சோபநாசினி.                                         எண்ணை ;  மலகாரி (Laxative), சமனகாரி, வரட்சியகற்றி (Emollient)                       மருத்துவகுணம் ;

                   ஆமணக்கு இலை Recinuscommunis leaves ;                           மிக்கவெழுங் காமாலை மிஞ்சிமூ லக்கடுப்பும்                           
துக்கமிகு முந்திவலித் தொல்லைப்போம் –மக்கட்கு                  
 நாமணக்கப் பாலூட்டும் நாரியற் குப் பாற்சுரக்கும்                                 ஆமணக்கின் சீரிலையா லாம்
() ஆமனக்கு இலையால் காமாலை,மூலக்கடுப்பு,வயிற்றுவலி போன்றவை நீங்கும்,தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.                                    

                  ஆமணக்கு நெய்(Castor oil)
ஆமணக்கு நெய்யா லனைவர்க்குமுண்டு நலம்
பூமணக்குமேனி புரிகுழலே வாய்மணக்க
கொள்ளில் வயிறுவிடுங் கோரமுள்ள வாயுவறு
முள்ளில் வருகுன்மம்போ மோர்

 அம்பொனிற மும்விந்து மாங்குடலி நேற்றமது
  மைம்பொறிச் சூடெரிவு மாறுங்காண் –அம்புவியிற்
  பாமணக்கு மின்பமொழிப் பாவாய் நலஞ்செறிந்த
  ஆமணக்கு நெய்யுண் டறி.
                  (பதார்த்தகுண சிந்தாமணி)  
   எண்ணை;விரோசனித்து கோரவாதம்,குன்மம்,குடலேற்றம்,தேகம்,கண்,மூக்கு,செவி, வாய் எரிச்சல் நீக்கும்.பொன் நிறமும்,தாது விருத்தி உண்டாகும்.
                      சிற்றாமணக்கு நெய் (Ricinis Communis Seed Oil)
  மருந்தினழலும் வளியான்மூ லத்துட்
  பொருந்து மழலுமறப் போக்குங் – குருந்திற்கு
  நற்றா யெளவனர்க்கு நாளுமழ லைத்தணி
  சிற்றாமணக்கின் நெய்தான் றேர்
()சிற்றாமணக்கு நெய் பற்பல ஔஷதங்களின் வெப்பங்களையும்,வாயுவினால் மூலத்திலுண்டாகின்ற உஷ்ணங்களையும் நீக்கும்.அன்றியும் சிசுக்களைத் தாய் வளர்ப்பது போல் உடலை வளர்ப்பிக்கும்.
1.   இலையை எரித்து சாம்பலை எடுத்து சுத்தமான தண்ணீரில் கரைத்து, தெளிவை வடிகட்டிக் காய்ச்ச கிடைக்கும் உப்பை ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நொய்க் கஞ்சியில் சிறிது பெருங்காயம் சேர்த்துக் கலந்து குடித்து வர உடம்பு இளைத்து மெலிய ஆரம்பிக்கும்.
2.   இதே உப்பு, பார்லி, நெல்லி முள் சூரணம் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பருமன் குறைந்து வரும்.
3.   இலையில் நெய் தடவி அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.
4.   இலையைச் சின்னதாக அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து கட்டி வர மூலக் கடுப்பு, கீல் வாதம், வாத வீக்கம் குணமாகும். மேலும் கீல் வாதங்களுக்கும்,வாதரத்த வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுத்து அதனையே வைத்துக் கட்ட குணமாகும்.
5.   துளிரை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கித் தொப்புளில் வைத்து கட்ட, வெப்ப வயிற்று வலி குணமாகும்.
6.   இலையுடன் கீழாநெல்லி இலையைச் சமபாகமெடுத்து அரைத்து 30 கிராம் காலையில் மட்டும் 3 நாள் சாப்பிட்டு நான்காம் நாள் பேதிக்குக் கொடுக்க, காமாலை தீரும்.
7.   வேரை லேசாக நசுக்கி சிறிது தேனுடன் பிசைந்து கொஞ்சம் நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து மறுநாள் காலையில் பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு நீரை மட்டும் 100 மில்லியளவு தினமும் காலையில் குடித்துவர வயிற்றின் பளுவும், உடல் பருமனும் வீக்கமும் குறையும்.
8.   விளக்கெண்ணெய் 30 மில்லியுடன் சிறிது பசும்பால் அல்லது இஞ்சிச்சாறு கலந்து குடிக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்று வலி சிறுநீர்ப்பாதை அழற்சி,வெட்டை,நீர்க்கடுப்பு,மாதவிடாய் கோளாறுகள், இரைப்பிருமல்,பாண்டு,ஆறாத கட்டிகள்,தொண்டை அழற்சி மூட்டுவலி குணமாகும்.
9.   விளக்கெண்ணெய் 1/2 – 1 தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுக்க மலம் இளக்கமாகி வெளியேறும்.
10.  குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய்யுடன் பேயன் வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக அரிந்து ஊறப் போட்டு கற்கண்டைப் பொடி செய்து கலந்து தினம் காலை 2 துண்டு வாழைப்பழமும் சிறிது எண்ணெய்யும் கொடுத்து வர சகல சூடும் தணிந்து ஆரோக்கியமாக வளரும்                              
11.  வயிற்று வலியால் துன்புறுவோருக்கு கொடுக்க, சாந்தமாய்ப் பேதியாகும்.
12.  கண்கள், மருந்து வேகத்தாலும், தூசுகள் விழுந்து அருகி சிவந்தாலும், சிற்றாமணக்கெண்ணை கண்ணிலிட, சிவப்பு மாறும்; அருகலும் குணமாகும்.
13.  தோல் நீக்கிய விதையை மெழுகுபோல் அரைத்துப் பற்றுப்போட ஆறாத புண்கள்ஆறும். கட்டிகள் பழுத்து உடையும்.மூட்டுவலி,கணுச்சூலை வீக்கம் குறையும்.
14.  வேரை அரைத்துப் பற்றுப்போட பல்வலி நீங்கும்.
15.  மலக்கட்டும், வயிற்று வலியும் உள்ளபோதும், சூதகக் கட்டு அல்லது சூதகத் தடையுடன் அடிவயிற்றில் வலிகாணும் போதும், அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு எண்ணெயை இலேசாகத் தடவி, அதன் மீது சிற்றாமணக்கு இலையை வதக்கிப் போட்டுவர, அவைகள் குணப்படும்.
16.  விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சைசாறு சம அளவு காய்ச்சி 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

கருத்துகள் இல்லை: