ஆளி
விதை Lepidium Sativum
மாற்றுப்பெயர் ; வளரியல்பு ; இலைஅமைப்பு ; பூ,காய் ; மருத்துவ பாகம் ; குணம் ;அந்தர்ஸ்நிக்தகாரி,இளகுமலகாரி,மூத்திரவர்தனகாரி, வியதாபேதகாரி,பலகாரி,காமவிர்தினி
தீர்க்கும் நோய்கள்
வீக்க மதிவாந்தி மேனி வலிவாய் வுந்
தூக்குநரம் பின்குத்த றெல்லழலை – யோக்காள
மீளி யருசி விரைவாதமும் போகு
மாளிவிதை தன்னா லறி
()ஆளி
விதையினால் சோபை,மிகுவமனம்,உடற்கடுப்பு,வாதவலி, நரம்புசூலை, அஸ்திச்சூடு,ஓக்காளம்,அருசி,பீஜவாயு
இவை நீங்கும்.
1.
இதனை
சிறு மண் கலயத்தில் பொட்டு சிறுப்தீயில் எரித்து நன்கு வெந்ததும் வடித்து,சலத்தை நீக்கி
தே,எண்னைவிட்டுக் கடைந்து சீலையில் தடவி வயிறு,மார்பு முதலான இடங்களில் காணும் சகல
நோய்களுக்கும் மேலே போட்டுக் கட்ட குணமாகும்.
2.
எலுமிச்சம்பழச்சாற்றிலாவது,குளிர்ந்த
சலத்திலாவது அரைத்துக் களி போல் கிளரி சீலையில் கனமாகத் தடவி கட்டிகளுக்கு வைத்துக்
கட்ட உடைத்துக் கொள்ளும்.
3.
200
கிராம் விதையை 2 படி தண்ணீரில் மலர வேகவைத்து
வடித்து கஞ்சியுடன் கிலோ சீனி சர்க்கரை சேர்த்து சர்பத் போல் காய்ச்சி, தேவைக்கு சிறிது
நீரில் கலந்து 2 வேளை பருக குளிர்ச்சியைப் பற்றிய இருமலையும்,இரத்த வாந்தியையும் குணப்படுத்தும்.மலம்
இளகலாகப் போகும்.குடலைச் சுத்தப் படுத்தி வாயுவைக் கண்டிக்கும்.
4.
இச்
சர்பத்துடன் 3-5 துளி சுத்தமான சந்தன அத்தர் கலந்து கொடுக்க பிரமேகம் குணமாகும்.நீர்த்
தாரையில் கண்ட விரணம் ஆறி அதனில் கண்ட கசிவு நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக