பக்கங்கள்

11 அக்டோபர், 2018

ஆலமரம் Ficus Benghalensis L,; Moraceae


ஆலமரம்  
                Ficus Benghalensis L,; Moraceae                                   வளரியல்பு ; கிளைகளிலிருந்து விழுதுகளுடன் கூடிய பெரு மரம்.                   இலை    ; மாற்றடுக்கில் அகலமானவை.                                      மருத்துவ பாகம் ; இலை,பூ,பழம்,விதை,பட்டை,வேர்,விழுது,பால்.                    செய்கை ; விழுது,பட்டை,இலை –சங்கோசனகாரி, பலகாரி,விதை –,காமவிர்த்தினி,  பால் – சங்கோசனகாரி,சீதளகாரி, பலகாரி, காமவிர்த்தினி                                     மருத்துவ குணம் ; பால் –பிரமேகம் நீக்கும்,குளிர்ச்சி தரும்,பல் இறுக்கும்,தாதுபுஷ்டி உண்டாக்கும்.கொளுந்து இரத்த அதிசாரம் போக்கும்,புல்லுருவி விஷபாக ரோகம் நீக்கும்.      ஆலம்பால்மேக மறுத்தசையும் பல்லிறுக்குங்                                             கோலமுடிக்குக் குளிர்ச்சிதரும் – ஞாலமதின்       
      மெத்தவுமே சுக்கிலத்தை விருத்தி செய்யுந்                                            தப்பாமற் சுத்தமதி சொல். 
()ஆலம்பால் பிரமேகத்தை நீக்கும்,ஆடும் பற்களை இறுகச் செய்யும்.சிகைக்குக் குளிர்ச்சியைத் தரும்.தாது புஷ்டியுண்டாக்கும்.
    
 சொல்லுகின்ற மேகத்தைத் துஷ்ட வகக்கடுப்பைப்                                      கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்கா –ணல்லாலின்                              பாலும் விழுதும் பழமும் விதையும்பூவும்                                      மேலுமிலையுமென விள்  
()ஆலமரத்தின் பால்,விழுது,பட்டை,பழம்,விதை,பூ,இலை இவற்றால் பிரமேகம், வயிற்றுக்கடுப்பு,மேகநீர் இவை நீங்கும்.                                                   வடமரவீழ் பல்லிறுக்கு மாமேகம் போக்கு                                       மடர்கொழுந்தி ரத்தப்போக் காற்றும்-படரதிலாம்                                        புல்லுருவி யொன்றெய்திற் பொல்லா விடபாக                                              வல்லுருவி லுண்மை மதி              
()ஆல மரத்தின் விழுது தந்தங்களை இறுகச் செய்யும்.பிரமேகத்தை நீக்கும்.இந்த மரத்தில் முளைத்த புல்லுருவியால் விஷபாக ரோகம் நீங்கும்.     
                                    -பதார்த குண விளக்கம்-                     
  1. பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர  மூலம் குணமாகும்.
  2. மரப்பட்டை,வேர்ப்பட்டை,மொட்டு,கொளுந்து,பழம்,விழுது வகைக்கு 40கிராம், 4ல் 1ன்றாய்க் காய்ச்சி,250மிலி காலைமாலை குடித்துவர மேக எரிச்சல், மேகப்புண்,மேக ஒழுக்கு(White discharge)தீரும்.
  3. பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டு புளி,காரம் நீக்க ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.
  4. பாலை காலைமாலை தடவிவர வாய் ரணம்,நாக்கு உதடு வெடிப்பு,கைகால் வெடிப்பு,பல் ஆட்டம் தீரும்.
  5. ஆலம்பட்டை,அத்திப்பட்டை,அவுரி வேர்பட்டை வகைக்கு 40கிராம்,10 மிளகுடன் இடித்து ,8லி நீரில் 2லி ஆகக் காய்ச்சி,வேளைக்கு250மிலி தினம் 3வேளை குடித்துவர ரச பாஷாணவீறு தணியும்.
  6. மரபட்டை,வேர்பட்டை வகைக்கு 200கிராம் சிதைத்து 4லி நீரிலிட்டு காய்ச்சி தினம் காலை ஒருகுவளை 1-4 மண்டலம் குடித்துவர மதுமேகம்(Diabaties) குணமாகும்.(4 நாட்களுக்கு ஒருமுறை தயார் செய்து கொள்ளலாம்)
  7. பழம்,விழுது,கொளுந்து சம அளவு அரைத்து 30கிராம் காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர 120 நாளில் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகும்.
  8. விழுது துளிர்,விதை அரைத்து 5கிராம் பாலில் 5-7நாள் சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.வெட்டை,மேகம்,உடல் எரிவு,காங்கை தீரும்.
  9. துளிர் இலை அரைத்து 5கிராம் தயிரில்கலந்து கொடுக்க இரத்தபேதி,இரத்த அதிசாரம் நிற்கும்.
  10. விழுதைக் கொண்டு பல் துலக்க பற்கள் உறுதிப்படும்.
  11. விழுதுநுனி கொளுந்துச் சாற்றில் ஜவ்வரியை ஊறவிட்டுலர்த்தி கஞ்சி அல்லது அல்வா செய்து சாப்பிட தாது பலப்படும்.
  12. பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொள்ள பல்வலி தீரும்.                                                   
  13. அத்தி, ஆலம், அரசு, விதைகளை சம அளவில் பொடித்து அல்லது பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலை உரமாக்குகிறது.தாது விருத்தியாகும்.
  14. விதையுடன் அரசம்விதை சேர்த்து பால் விட்டரைத்து 5 கிராம் 5-7 நாள் கொடுக்க இரத்தக்கக்கல் நீங்கும்.தாது பலப்படும்.
  15.  பட்டை 40-60கிராம் 500மிலி நீரிலிட்டு 150மிலியாக்கி வடித்து பனங்கற்கண்டு சேர்த்து காலைமாலை பருகிவர பிரமேகம்,இரத்தப்பிரமேகம்,நீர்கடுப்பு நீங்கும்.
  16. மரத்தின் புல்லுருவியை ஞாயிற்றுக்கிழமை சூரியன்,சந்திரன்,புதன் ஒரே ராசியில் இருக்கும்போது காப்புகட்டி எடுத்துவந்து தேள் முதலிய விஷம் தீண்டிய இடத்தில் சுத்தமான நீரில் உரைத்துப்போட விஷமிறங்கும்.
  17. பாலை வாயிலிட்டு கொப்புளித்து சிறிதுநேரம் அடக்கிவைத்து துப்ப நா ரணம் ஆறும்.
  18. பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க பிரமேகம்,தாதுக் குறைவு நீங்கும்.
  19.  விழுது துளிரை அரைத்து கொட்டைப்பாக்களவு,தயிரில் கலந்து கொடுக்க இரத்த அதிசாரம் நீங்கும்.
  20. ஆல்,அரசு,இச்சி வித்து சூரணித்து இலேகியம் கிளரி சாப்பிட தாது விருத்தியாகும்.
  21. விழுது துளிர்,விதை பாலில் அரைத்துக்ழற்சிக்காய் அளவு தினம் 1வேளை 5-7 நாள் பாலில் கொடுக்கப் பால் சுரப்புண்டாகும்.வெட்டை,மேகம்,உடல் எரிவு,காங்கை முதலியவை தீரும்.
  22. பாலை கால் வெடிப்புகளுக்குப் போட்டுவர வேதனை தணிந்து ஆறும்.






                                                                                                                   




கருத்துகள் இல்லை: