பக்கங்கள்

4 ஆகஸ்ட், 2025

உடற்கூறு

 

                                   உடற்கூறு

முன்னுரை                                                   

   மனித உடம்பு என்பது ஒரு அற்புதமான படைப்பாகும். ஏனெனில் ஒரு இயந்திரமானது அதில் உள்ள அச்சுக்கேற்ப(Mould) ஒரே மாதிரியான பொருளையே எவ்வித மாற்றமுமின்றி உற்பத்தி செய்யும்.ஆனால் ஒரு தாய் வயிற்றின் கருப்பை என்னும் ஒருஅச்சிலிருந்து வெளிவரும் உடம்பில்தான் எத்தனை வித்தியாசம்.பால்,ரேகை,குணம் குரல் என்று சகோதர சகோதரிக் குள்ளேயே ஏகப்பட்ட வித்தியாசம்.                                                                              இப்படிப்பட்ட அற்புதமான உடலை ஊத்தைச் சடலமடி உப்பிட்ட பாண்டமடி என்றும் காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்றும் பலரும் பலவிதமாக கூறும்போது வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க சுவாமிகள் கூறுவது வித்தியாசமானது.அவர் ஐயா நானோ ஏழை.நான் ஒன்பது பொத்தல் உள்ள வீட்டில் வசிக்கிறேன். இதுவோ(உடல்) நிலையில்லாமல் நான் எங்கே சென்றாலும் கூடவே வருகிறது.இதற்கு உரிமையாளர்கள் மூன்று பேர்.இவர்களுக்கு சரியாக குடக்கூலி(வாடகை) கொடுக்காவிடில் இவர்கள் செய்யும் துன்பம் (நோய்) தாங்கொனாதது என்பார்.யார் இந்த மூவர் குடக்கூலி என்ன என்பதை அறிந்தாலே நாம் நோயின்றி வாழலாம்.                                                              பிறப்பு நிலை                                                                            ஆண் பெண் சேர்க்கையால் உண்டானது இந்த உடல் என்பதை அனைவரும் அறிவோம். பெண்கள் பூப்படைந்தநாள் முதல் 16 நாட்கள் கருக்குழி மொக்கானது திறந்திருக்கும்.(மாதவிலக்கான முதல் 7 நாட்கள் கருமுட்டை வளர்ச்சியடையாமலும் கடைசி 7 நாட்கள் முதிர்ச்சி அடைந்தும் விடுவதால் 16 நாட்கள் மட்டுமே கணக்கிலெ டுக்கப்பட்டது) இத்தினங்களில் கூடும்போது கருப்பையில் அருகம்புல்லின் நுனியில் காணப்படும் பனி நீரின் அளவிலான சுக்கிலமும் சுரோனிதமும் இணைந்து தேயு என்ற தீ பூதம்,வாயு பூதம் துணையால் கருவாக மாறும்.அக்கணமே மொக்கானது மூடிக் கொள்ளும். இது முதல் நாள் கடுகுபோல் உருவமும் கனமும், இரண்டாம் நாள் மல்லியின் வடிவமும் கனமும்,மூன்றாம் நாள் மிளகின் வடிவமும் கனமும், நான்காம் நாள் அவரை விதையைப் போன்று சற்று நீண்டு முனைகள் சன்னமாகி நடுவில் கனத்தும் ஐந்தாம் நாள் நீர்க்குமிழியைப்போல் வடிவமும் உள்ளே வெற்றிடமும் உண்டாகும்.                                                                                                   ஆறாம் நாளில்நெல்லிக்காயைப் போல வெளிப்புறம் தெளிவாகவும் உட்புறம் கலங்கலாகவும் வடிவம் பெற்றும்,ஏழாம் நாளில் கருப்புரையால் மூடப்பட்டும்(கரு சிசுவாகவும்,புரை நஞ்சுக்கொடியாகவும் மாறும்),எட்டாம் நாளில் ஐந்து பிரிவுகள் ஐந்து நிறங்களுடன் காணப்படும்,ஒன்பதாம் நாளில் காக்கை முட்டையைபோல சற்றேறக்குறைய உருண்டையாய் இருக்கும்.       10-15 நாளில் பல மாறுதல்கள் உண்டாகி கோழி முட்டையின் வடிவத்தையும் அளவையும் பெறும்.ஒரு மாதத்தில் வாழைப்பூ வடிவமாக நீண்டும்,இரு முனைகளில் தலைப்புறம் கனத்தும்,அடிப்புறம் சற்று சன்னமாகவும் காணும்.                   இரண்டாம் மாதத்தில் கழுத்தும்,மூன்றாம் மாதத்தில் தலையும், தலையின் உறுப்புகளும் தோன்றும்.நான்காம் மாதத்தில் கை கால் பொருத்துக்களும்,விரல்களும் தோன்றி வடிவத்தை அடையும்.ஐந்தாம் மாதம் செவி உண்டாகும்.ஆறாம் மாதம் மல சல துவாரங்களுண்டாகி, நாடி நரம்பு உற்பத்தி துவங்கும்.ஏழாம் மாதம் 72000 நாடி நரம்புகளும் வளர்ச்சியடைந்து முழுமை பெற்று எலும்புகள்,சுவாச உறுப்புகள்,குடல்,கொப்புள்,கால்,கைகள் உண்டாகும்.எட்டாம் மாதம் உயிர் உண்டாகும்.இதுவரை உச்சி என்ற நாபி வழியாகச் சென்றுடலை பெருகச் செய்த அன்னரசம் ஒன்பதாம் மாதம் முதல் நேரடியாகச் செல்லும்.உயிர் பெற்று அறிவு தோன்றும். பத்தாம் மாதம் தீ பூதமும் வாயு பூதமும் அதிகரித்து அபானவாயுவின் சக்தியினால் தலை கீழாகத் திரும்பி யோனி வழியாக குழவி சிரம் திரும்பிப் பிறக்கும்.                                               பஞ்ச பூதங்கள் ஐந்து,அதன் தன் மாத்திரை ஐந்து,ஞானேந்திரியம் ஐந்து,தன்மாத்திரை ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து தன் மாத்திரை ஐந்து, மலங்கள் மூன்று தச வாயுக்கள் என முப்பத்தாறு என்றும்,இதை இன்னும் விரித்து தொண்ணூற்றாறு தத்துவங்களை கொண்டு எட்டு சாண் உயரமும் (96அங்குலம்),மூன்றரைக்கோடி ரோமங்களும்,எட்டு துலாம்(சுமார் 64 கிலோ)எடையும்,நாடி நரம்புகள் எழுபத்தி இரண்டாயிரம்,வலிமை வாய்ந்த இரு துண்டுகளையுடைய கால் எலும்புகளும்,அவ்வாறே கை எலும்புகளும், முதுகெலும்பு முப்பத்தி இரண்டு-இரு பெரும் பிரிவுகளையுடையது,உடலின் உறுப்புகள் மொத்தம் நூறு, முன்னூற்றறுபது முழம் கொண்ட சிறுகுடல், முப்பத்தியிரண்டு முழம் கொண்ட பெருங்குடல் ,5.2லி இரத்தம்(நான்கு நாழி) கொண்டது. (96 தத்துவ விவரங்களை சைவ சித்தாந்தவாதிகளிடம் கேட்டறிக)                                                                                                                                                                       96  தத்துவங்களும் 96 வர்மங்களாக அமையப்பெற்ற இவ்வுடலாகிய வீட்டில் வாத பித்த கபம் என்ற மூன்று அரசர்களும் கூடி வாழ்ந்து ஆட்சி செய்து வருவர். (இவர்களே வீட்டின் உரிமையாளார் மூவர்)பிரம்மனின் படைப்பில் உயிர் நூறாண்டு வாழ வேண்டும். முதல் 10 ஆண்டுகள் வாலைப்(குழந்தை) பருவம்,இருபது வயது வரை பாலர் (சிறுவர்). முப்பது வயதுவரை இளைஞர்.முப்பதுக்குப் பின் உடல் தேஜஸ் குறையும். நாற்பதில் அழகு குறையும்.ஐம்பதில் தேயுவால் ஆட்கொள்ளப்பட்டு உடல் வெளுக்கும். இது இரத்தக்குறைவை காட்டும்.அறுபதாம் வயதில் அப்பு பிருத்திவியுடன் சேர்ந்து கண் பார்வையைக் குறைக்கும்.எழுபதில் தேயுவால் ஆட்கொள்ளப்பட்டு சப்த தாதுக்களும் உலர்ந்து சுருங்கி,அறிவுகுன்றும். என்பதாம் வயதில் பிராணன் உடலினுல்  செல்லாமல் அதிகம் வெளியில் சென்று வீணாகும்.தொண்ணூறில் இந்திரிய உற்பத்தி நிற்கும்.நூறில் மரணம்               நூறாண்டு கூறப்பட்டாலும் தாய் தந்தையர் செய்த தீவினைத் தொழில், விஷ உயிர்கள் கடிப்பதாலும்,விபத்துக்களாலும்,ஆஅயுதங்களால் வெட்டு குத்து படுவதாலும்,வர்ம அடியாலும்,மிருகங்கள் தாக்குவதாலும்,நச்சுப் பொருட்களை உண்உவிடுதலாலும் ஆயுள் குறைந்து இளமையில் மரணம் ஏற்படும். நூறு ஆண்டுகளில் முப்பது வருடம் வாதமும்,அடுத்த முப்பத்தி மூன்று ஆண்டுகள்(63வரை)பித்தமும்,கடைசி 37 ஆண்டுகள் கபமும் உடலை வளர்த்திவரும்.                                                                                                                                            நரம்பகள் எழுபத்தியிரண்டாயிரத்தில் ஒரு நரம்பு தலைப்பகுதி யிலிருந்து நேராகத் தண்டுவடம் வரை நீண்டு முடிச்சிடத்தில் பல கிளைகளாகப் பரந்து தேகம் முழுவதும் பரந்து கிடக்கும்.இதன் தொழில் சேர்கின்ற இடத்தில் நீட்டல்,மடக்கல் ஆகும்.உடலின் ஒருசில பகுதிகளில் இவை முடிச்சிட்டு உடலின் பகுதி முழுவதும் பரந்து கிடக்கும்.இவ்வாறு  அமைந்திருக்கின்ற நரம்புகளில் வாத பித்த கபம் என்ற முத்தோஷம் வர்மத் தால்உண்டாகும்                                                                                                                                   . 

 

உட்டியானா

blogger.com/blog/page/edit/4855745518765705815/1388126531004829885

                                           உட்டியானா

செய்முறை                                                                                                                        கால்களை ஓரடிஅகட்டி வாந்தி எடுப்பதுபோல் நின்று கைகளை தொடையில் வைத்துக் கொள்ளவும்.மூச்சை முழுவதுமாக வெளியேவிட்டு கைகளை அழுத்தி வயிற்றை எக்கி குடலை மேலே ஏற்றவும்.5 வினாடிகள் நிறுத்தி குடலை இறக்கவும்.சுவாசத்தை இழுத்து இளைப்பாறவும்                                                           வெறும் வயிற்றில் 5 வினாடியாக 2-4முறை

பலன்கள்                                                                                                                                    வயிற்றுப் பகுதி உள் உறுப்புகள் வீரியமடையும்.அல்சர்,குடல்புண்,வயிற்று வலி குணமாகும்.ஜீரணசக்தி அதிகரிக்கும்.சொப்பன ஸ்கலிதம் நீங்கும் . விந்து கட்டிப்படும்.தொந்தி,ஊளைச்சதை குறையும்.

                                       Videos will available shortly

                                                                               

 

 

 

 

 

 

                                                                                                       

ஹலாசனம்

 

                                              ஹலாசனம்

செய்முறை                                                                                                                      yoga                  மல்லாந்து படுத்த நிலையில் உள்ளங்கைகள் தரையை பார்த்தவாறு உடலை ஒட்டி வைத்து மூச்சை சிறிது உள்ளிழுத்து கால்களை மேலே தூக்கி தலைக்குப்பின் கொண்டுவந்து விரல்கள் தரையைத் தொட வேண்டும்.நாடி நெஞ்சைத் தொட வேண்டும்.                                                                                                                   1-2 நிமிடமாக 2-3 முறை  சாதாரண மூச்சு.

பலன்கள்                                                                                                                        முதுகுத்தண்டு பலம் பெறும்.நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும். சோம்பல் முதுமை ஒழியும்.இடுப்பு முதுகு கழுத்து பலம் பெறும்.நீரிழிவு குணமாகும்.

                                       Videos will available shortly  

நின்றபாத ஆசனம்

யோகா/blog/post/edit/4855745518765705815/6913778226519164802

                                         நின்றபாத ஆசனம்

செய்முறை                                                                                                                  ஒற்றைக்காலில் நிற்பது.வலதுகாலில் நின்றுகொண்டு இடதுகாலை மடக்கி வலது தொடைமேல் ஆசன வாயில் படும்படி வைக்க வேண்டும்.கைகளை கூப்பிய நிலையில் காதுகளை ஒட்டி தலைக்குமேல்தூக்கி இளக்கமாக இருக்க வேண்டும். பின் இடது காலில் நிற்க வேண்டும்.                                                         சாதாரண மூச்சு  முறைக்கு 1 -2 நிமிடமாக 2-4 முறை                               அர்த்தசிரசாசனம்,சிரசாசனத்திற்கு மாற்று.

பலன்கள்                                                                                          வாதம்,நரம்புத்தளர்ச்சி,சோம்பல் நீங்கும்.மனம் ஒருமைப்பட்டு மனோதிடம் பெருகும்.பயம் நீங்கும்.ரத்த ஓட்டம் சீர்படும்.

                                       Videos will available shortly

சிரசாசனம்

                                                        சிரசாசனம் 

செய்முறை                                                                                                                                  yoga             அர்த்த சிரசாசன நிலையில் இருந்து கால்களை இளக்கி லேசாக மூச்சுப் பிடித்துக் கொண்டு கால்களை மெதுவாக மேலே தூக்க வேண்டும். இறங்கும் போது இரண்டு கால்களையும் மடித்து மெதுவாக இறங்க வேண்டும். மண்டியிட்டு உட்கார்ந்து மூச்சு வாங்கி பின் மெதுவாக கண்களை திறக்க வேண்டும்.                                                                                                                                                 3 – 5 நிமிடம்                 

பலன்கள்                                                                                                                                                      எந்த நோயும் வராமல் தடுக்கும்.ஞாபக சக்தி சிந்தனா சக்தி அதிகரிக்கும். மூளைக் கோளாறு நீங்கும்.ருதுவடையாத பெண்கள் ருதுவடைவர்.அனைத்து சுரப்பிகளும் உறுதிப்பட்டு நன்கு வேலை செய்யும்.முகம் பொலிவு பெறும்.மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி, வெள்ளெழுத்து நீங்கும்.சுத்த ரத்தம் நாளங்களில் பாயும். ஆண்மை மேலிடும்.

                                                                                                             

                                       Videos will available shortly

அர்த்த சிரசாசனம்,

 

                                   அர்த்த சிரசாசனம்,

செய்முறை                                                                                                                                       மண்டியிட்டு அமர்ந்து விரல்களை சேர்த்து முழங்கைகளை முக்கோணம் போல் தரையில் ஊன்றவும்.பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு உச்சந்தலையை தரையில் வைத்து இடுப்பை மேலே தூக்கவும்.சாதரண மூச்சு,கண்களை மூடி கால்களை இழுத்து முக்கோண வடிவில் நிற்கவும். உடல் எடை முழுதும் கைகள் தாங்க வேண்டும்.                                                                                                                                                1 -2 நிமிடம் 3-4 முறை

பலன்கள்                                                                                                        yoga                                             எந்த நோயும் வராமல் தடுக்கும்.கண் காது நாக்கு போன்ற புலன்கள் நோயுறாது.ருதுவடையாத பெண்கள் ருதுவடைவர்.பிட்யூட்ரி.பீனியல்பாடி சுரப்பிகள் நன்கு வேலை செய்யும்.முகம் பொலிவு பெறும்.மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி,வெள்ளெழுத்து நீங்கும்.சுத்த ரத்தம் நாளங்களில் பாயும். ஆண்மை மேலிடும்.மூளைக்கோளாறு நீங்கும்.ஞாபக சக்தி,சிந்தனா சக்தி அதிகரிக்கும்.

                                       Videos will available shortly

விபரீதகரணி

                                                           விபரீதகரணி

செய்முறை                                                                                                                             மல்லாந்து படுத்த நிலையில் உடலை இளக்கி கால்களை மடித்து உயரே தூக்கவும்.இரண்டு உள்ளங்கைகளையும் விரல்கள் உட்பக்கமாக ஈருக்கும்படி வைத்து இடுப்பை தாங்கிப் பிடித்து முழங்கைகளை நன்றாக தரையில் ஊன்றிகால்களை மேலே தூக்கி தலை முதுகு மட்டும் தரையில் இருக்கும்படி இருக்கவும். கீழே இறக்கும்போது காலை மடக்கி கைகளில் வழுக்கியவாறு இறங்கவும்.                                                                                                                                    ஆரம்பத்தில் சுவரில் சாய்ந்தவாறோ முதுகுக்கு கீழ் தலையனை வைத்தோ செய்து பழகலாம். 

பலன்கள்                                                                                                               yoga                             சிரசாசனம் செய்வதின் 50% பலன்கள் கிடைக்கும்.

                                       Videos will available shortly

அர்த்த மத்யேந்திராசனம்

                                    அர்த்த மத்யேந்திராசனம்

செய்முறை                                                                                                                                       உட்கார்ந்த நிலையில் இடதுகாலை மடக்கி இடது குதிங்காலை வலது தொடை சந்திற்கு கொண்டு வந்து, வலது முழங்காலை மடக்கி நிறுத்தி இடது முழங்காலருகே இடது தொடையைத் தாண்டி நிறுத்தவும்.உடலை வலது பக்கம் திருப்பி இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி இடது முழங்காலை பிடிக்கவும்.இடது கையால் முதுகை வலது பக்கம் திருப்பி மூச்சை வெளியே விட்டு வலதுகை விரல்களால் வலது முழங்காலில் கொக்கி போல்  மாட்டி உடலை நன்றாகத் திருப்பி இழுக்கவும்                                                                                       இதேபோல் கால் மாற்றி செய்தால் பூர்த்தி .

பலன்கள்                                                                                                                     yoga      முதுகெலும்பு திருகப்பட்டு புத்துணர்ச்சியும்,முகக் கவர்ச்சியும் உண்டாகும். இளமை மேலிடும்.நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும்.விலா எழும்பு பலப்படும்.தொந்தி கரையும்.

                                       Videos will available shortly

மயூராசனம்

                                                          மயூராசனம்

செய்முறை                                                                                                                     முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்கார்ந்து முன் கைகளைச் சேர்த்து உள்ளங்கைகளை தரையில் ஊன்றவும்.வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புளை முழங்கைமேல் வைத்து கால்களை பின் நீட்டி முன் சாய்ந்து உடல் கைகள்மேல் அந்தரத்தில் இருப்பதுபோல் வரவும் ஆரம்பத்தில் முகத்திற்கு தலையனை வைத்துக் கொள்ளவும்.                                                ஒருமுறைக்கு 10-15 வினாடிகள்-3 முறை

பலன்கள்                                                                                                                                               வாத பித்த கபம் சமமாகும்.உதரவிதானம்,இரைப்பை,ஈரல்,கணையம், சிறுகுடல் கசக்கப்பட்டு நன்கு வேலை செய்யும்.சர்க்கரை நோய் தீரும்.ஜீரண உறுப்புகள் நன்கு இயங்கும்.

                                       Videos will available shortly

சலபாசனம்

                                                     சலபாசனம்   

செய்முறை                                                                                                                               குப்புறப்படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்து இரு கைகளையும் குப்புற வைத்த நிலையில் அடி வயிற்றின் கீழ் வைக்கவும்.மூச்சை உள்ளே இழுத்து அடக்கியவாறு கால்களை விரைப்பாக வைத்து மேலே தூக்கவும்.ஒருமுறைக்கு 5-10 வினாடியாக மேலே தூக்கி இறக்கவும்.முதலில் ஒவ்வொரு காலாக மாற்றி மெதுவாகப் பழகவும்.

பலன்கள்                                                                                                                                                                  வயிற்றுப் பகுதி பலப்படும்.பெருங்குடல் சிறுகுடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும்.மலச்சிக்கல் ,அஜீரணம்,,வயிற்றுவலி,முதுகு,இடுப்பு வலி நீங்கும்.தொந்தி கரையும்.முதுகெலும்பு நோய் குணமாகும்.

                                       Videos will available shortly

தண்டாசனம்

                                              தண்டாசனம்

செய்முறை ;                                                                                                                                                    இரு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்கார்ந்து இரு கைகளையும் பின்னுக்குக் கொண்டுபோய் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி கைகளையும் குதிகால்களையும் அழுத்தி உடலை மேலே தூக்க வேண்டும். தலையை இளக்கமாக பின்னால் தொங்க விடவும்.                                          சர்வாங்காசனத்திற்கு மாற்று.                                                                                                       இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள் 2-5 முறை                                                                 பலன்கள் ;                                                                                                                                            இரத்தம் பாதத்திற்கு பாயும்.சுருங்கிய கழுத்து பிடரி பகுதி விரியும்.

                                               Videos will available shortly


சர்வாங்காசனம்

                                                                   சர்வாங்காசனம்

செய்முறை ;                                                                                                                                    மல்லாந்து படுத்த நிலையில் தலை,கழுத்து,பிடரி சரியாய் தரையில் படிந்தவாறு இரு கால்களையும் சேர்த்து செங்குத்தாக தலைக்கு மேல் தூக்கி தலைக்குப்பின் கொண்டு செல்ல வேண்டும்.அப்போது இடுப்புப் பகுதியைத் தாங்கும் விதமாக உள்ளங்கை விரல்கள் மேல் நோக்கி இருக்குமாறு நடு முதுகில்வைக்க வேண்டும்.கண்கள் கால் கட்டை விரல்களை பார்க்கும் படி கால்கள் செங்குத்தாக நேர்கோட்டில் இருக்க வேண்டு.ம்.                                       இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்,கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளவர்கள்தவிர்க்கவும்.                                                                                                              இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள் 2-5 முறை

பலன்கள் ;                                                                                                                                  குதிகால் குடைச்சல்,நரம்பு சுருட்டு,முழங்கால் மூட்டுவலி,மூலம் ,முதுகுவலி குணமாகும்.பிட்யூட்டரி சுரப்பி நோக்கி ரத்தம் பாய்வதால்  அது,அது தொடர்புடைய தைராய்டு தைமஸ்,மற்ற நாளமில்லா சுரப்பிகள் நன்கு வேலை செய்து குரல் மாற்றம்,முகத்தில் முடி வளர்தல் டான்சில்ஸ், தோல்நோய் ஹார்மோன் கோளாறுகள் நீங்கும். 

                                       Videos will available shortly

உத்தன பாதாசனம்

                                         உத்தன பாதாசனம்

     செய்முறை ;                                                                                                                        கைகள் உடலோடு ஒட்டி உள்ளங்கைகள் தரையில் படுமாறு மல்லாந்து படுக்கவும்.முழங்கால்கள் மடங்காமல் பாதங்களை அப்படியே ஓரடி உயர்த்தி 15 வினாடி நிறுத்தி பின் இயல்பு நிலை திரும்பவும்.                                                          அடிவயிற்றில் சற்று நடுக்கம் வரும்போது நிறுத்தி விடலாம்.                                                                                                                                   

பலன்கள் ;                                                                                                                                        சொப்பன ஸ்கலிதம் ஏற்படாது. அடி வயிற்று உறுப்புக்கள் நன்கு பயனடையும். அடி வயிற்றில் உள்ள தசைகள்,மூத்திரக்காய்கள், மூத்திரப்பை, கர்ப்பப்பை சூலகங்கள் செயல்கள் தூண்டப்படுகின்றன. தொந்தி, தொடையிலுள்ள சதைகள் குறையும். 

                                       Videos will available shortly              

தனுராசனம்

                                                        தனுராசனம்

செய்முறை ;                                                                                                                                                             குப்புறப் படுத்த நிலையில் இரு கைகளையும் உடலோடு ஒட்டி முழங்கால்களை மடக்கி ஒன்று மாற்றி ஒன்று பிருஷ்டத்ததில் படுமாறு சிலமுறை செய்ய வேண்டும்,பிறகு இரு கணுக்கால்களையும் பிடித்து சேர்த்து முழங்காலை வெளிப்பக்கமாய் அகட்டி தலையையும் நெஞ்சையும் மேல் நோக்கி தூக்கவும். வில்போல் இருக்க வேண்டும்.

பலன்கள் ;                                                                                                           பச்சிமோத்தாசனத்திற்கு மாற்று.                                              சிறுகுடல்,பெருங்குடல்,சிறுநீரகம், மூத்திரப்பை பகுதிகள்,கர்ப்பப்பை,கைகள் பின்னோக்கி இழுக்கப்படுவதால் தோளிலிருந்து மார்பு,நுரையீரல்,இதயம், மண்ணீரல்,கல்லீரல் போன்ற முக்கியமான உறுப்புகள் புது ரத்தம் பாய்ந்து நன்கு இயங்கும். சர்க்கரை நோய், மலட்டுத்தண்மை,மஞ்சட்காமாலை,ஜீரணக் கோளாறுகள்  நீங்கும். கால் கை நரம்புகள் பலம் பெறும்.மூலநோய் குணமாகும்                        அடிவயிற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் தவிர்க்கவும்.                                                                     Videos will available shortly

பச்சிமோத்தாசனம்

                                               பச்சிமோத்தாசனம்

செய்முறை;                                                                                                                                     இரு கால்களையும் முன் நீட்டி உட்கார்ந்து இரு கைகளை பக்கவாட்டிலிருந்து தூக்கி தலைக்குமேல் கொண்டுபோய் இடுப்பை வளைத்து முன்னோக்கிக் குனிந்து கைகளின் அந்தந்தப்பக்கத்து ஆட்காட்டிவிரல் மற்றும் நடு விரல்களால் கால் கட்டை விரலைப் பிடித்துக் குனிந்து முழங்கால் வளையாமல் தாடையைக் கொண்டு முழங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும்.

  இயல்பான சுவாசத்தில் 10 வினாடிகள் 2-5 முறை

பலன்கள்;                                                                                                                                      அடி வயிற்று உறுப்புக்களான சிறுகுடல்,பெருங்குடல்,விந்துப்பை, மூத்திரக்காய், மூத்திரப்பை,கர்ப்பப்பை நன்கு கசக்கிப் பிழியப்பட்டு புது ரத்தம் பாய்வதால் நன்கு இயங்கும்.பெருந்தொந்தி,புட்டம், அடித் தொடையிலுள்ள சதைகள் குறையும்.மலச்சிக்கல் நீங்கும்.கால் கை நரம்புகள் பலம் பெறும்.மூலநோய் குணமாகும்.

                                       Videos will available shortly

மச்சாசனம்

                                                               மச்சாசனம்

செய்முறை ;                                                                                                         பத்மாசனநிலையில் உட்கார்ந்து ஒவ்வொரு கையாய் பின்னால் கொண்டுபோய் முழங்கைகளைத் தரையில் ஊன்றி லேசாக உச்சந்தலையால் தரையைத் தொட்டு உடலை மேல் நோக்கி வளைத்து கையால் அந்தந்தப் பக்கத்து கால் கட்டை விரலை பிடிக்கவும்.

  இயல்பான சுவாசத்தில் 10 வினாடிகள் 2-3 முறை

பலன்கள்;                                                                                                         தொண்டைச்சதை(டான்சில்ஸ்), கழுத்துவலி போகும். நினைவாற்றல், கண்ணொளி பெருகும். சுவாசக் கோளாறுகள், ஈஸ்ணோபீலியா ஆஸ்துமா, மார்புச்சளி நீங்கும்.                                                                                                                   அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் தவிர்க்கவும்.

                                       Videos will available shortly

யோக முத்ரா

                                                 யோக முத்ரா

செய்முறை ;                                                                                                                பத்மாசனத்தில் அமர்ந்து கைகளை பின்புறம் கொண்டு சென்று இடது கை மணிக்கட்டை வலது கையால் பிடித்துக் கொண்டு முன்னோக்கிக் குனிந்து தாடையால் தரையைத் தொட வேண்டும்.

  சிரமம் ஏற்பட்டால் கால்களை மாற்றி உட்காரவும். இயல்பான சுவாசத்தில் 2-3 முறை

பலன்கள்;                                                                                                                                           தொந்தி குறையும்.நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.சர்க்கரை நோய், மூலம், வயிற்றுப்புண்,குடலிறக்கம்,விரைவீக்கம் குணமாகும். பெண்கள் கருப்பை இறக்கம்,அடிவயிறு கனம்,தொடைசதை கனம்,இடுப்புவலி தீரும்.

                                                   Videos will available shortly

பத்மாசனம்

                                                                 பத்மாசனம்

செய்முறை;                                                                                                                                               இரு கால்களையும் நீட்டி உட்கார்ந்து வலது காலை மடக்கி இடது அடித் தொடையில் வைக்கவும்.இடதுகாலை மடக்கி வலது அடித் தொடையில் வைக்கவும் .முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு முழங்கால்களின்மேல் வைக்கவும்.

  சிரமம் ஏற்பட்டால் கால்களை மாற்றி உட்காரவும். இயல்பான சுவாசத்தில் 2-3 முறை 10-15 நிமிடங்கள்

பலன்கள் ;                                                                                                                         முதுகுவலி,கால்வலி நீங்கும்.

                                                   Videos will available shortly

குதபாதாசனம்

 

                                                           குதபாதாசனம்

  செய்முறை ;                                                                                                                           குத்திட்டு உட்கார்ந்த நிலையில் இரு பாதங்களையும் ஒன்றோடு ஒன்று பார்த்தவாறு வைத்து குதிகால் குதத்தைத் தொடுமாறு ஒட்டி இரு முழங்கால்களும் தரையில் படுமாறு அசைக்க வேன்டும். இரு கால் விரல்களையும் பிடித்துக் கொண்டு தலை தரையில் படும்படி குனிய வேண்டும்.

  இயல்பான சுவாசத்தில் 2-3 முறை

பலன்கள் ;  பெருந்தொந்தி குறையும்.சர்க்கரை நோய்,குடலிரக்கம்,கிட்னி தொல்லை, மூலம் குணமாகும்.பெண்கள் ஜனன உறுப்புகள் இயங்கி புத்திரப்பேறு உண்டாகும்.உதிரபோக்கு சீர் படும் .அடிவயிறு பெருக்கம் சுருங்கும்.

                                                   Videos will available shortly

                                                

பரிவர்த்தன திரிகோணாசனம்.

                                           பரிவர்த்தன திரிகோணாசனம்.   

செய்முறை ;                                                                                                                                      இரு கால்களையும் சுமார் 3அடி இடைவெளியில் பக்கவாட்டில் விரித்து,இரு கைகளையும்  பக்கவாட்டில் தோள்அட்டைக்கு இணையாகத் தூக்கி திரும்பி சற்று முன்னோக்கி குனிந்து வலது கை விரல்களால் இடது கால் விரல்களைத் தொடவும். இதே போல் இடது கை விரல்களால் வலதுகால் விரல்களைத் தொடவும்.முழங்கால் வளையக் கூடாது. இவ்வாறு செய்யும்போது மற்றொரு கை தலைக்கு மேலே நீட்டி கண்ணால் பார்க்க வேண்டும்.

  இயல்பான சுவாசத்தில் 2-3 முறை

பலன்கள் ;                                                                                                                                       உடலின் மத்திய பாகமான இடுப்பு,முதுகு,வயிறு திருகி கசக்கப் படுவதால் தொந்தி குறையும்.மலஜல உறுப்புகள் நன்றாக இயங்கும். புதிய சுறுசுறுப்பும், புத்துணார்ச்சியும் உண்டாகும்.

                                                   Videos will available shortly

பிறையாசனம்

                                                          பிறையாசனம்

செய்முறை ;                                                                       

இரு கால்களையும் சுமார் 3அடி இடைவெளியில் பக்கவாட்டில் விரித்து,இரு கைகளையும்  முதுகில் விரல்கள் மேல் நோக்கி இருக்குமாறு உள்ளங் கைகளை வைத்து,தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டு பின் தோள்பட்டை, இடுப்பு,முழங்கால்களை பின்னே வளைத்து உடலை சந்திரப்பிறைபோல் அரைவட்டமாக வளைக்க வேண்டும்.

  இயல்பான சுவாசத்தில் 10 வினாடிகள் நின்று பின் பழைய நிலைக்கு திரும்பவும்..

பலன்கள்

முதுகுத் தண்டு பலம் பெறும்.சர்க்கரை நோய்,தொந்தி,மூத்திரக்காய் கோளாறு, மலச்சிக்கல்,இடுப்புவலி குணமாகும்.                                                                                                             கருத்தடை சாதனம் பொருத்திய மாதர்கள்,இதய நோய். ஹெர்னியா, விரைவீக்கம் போன்றவற்றிக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதத்திற்கு இதை செய்யக் கூடாது.

                                                Videos will available shortly

பாதஹஸ்தாசனம்

                                                பாதஹஸ்தாசனம்

செய்முறை ;                                                                                                          இருகால்களையும் சேர்த்து நேராக நின்று கைகளை தலைக்குமேல் தூக்கிப் பிறகு குனிந்து முழங்கால் வளையாமல் தரையைத் தொட வேண்டும்.தலை இளக்கமாய் தொங்கவும்.                                                                                                  இயல்பான சுவாசத்தில் 4-5 முறை செய்யவும்.

பலன்கள்;    இடுப்புப்பகுதி,மூத்திரக்காய்கள்,சிறுகுடல்,பெருங்குடல்,விந்துப்பை சிறப்பாக இயங்கும்.கால்கள் பலம் பெறும். மாதர்களுக்கு மாதவிடாய், கர்பப்பை கோளாறுகளும் நீங்கும்.   

                                                   Videos will available shortly

பரிவர்த்தனாசனம்

 

                                             பரிவர்த்தனாசனம்

செய்முறை;                                                                                                                                    வலது இடது கால்களை முன்பின்னாக சுமார் 21/2அடி இடைவெளியில் நேர்கோட்டில் வைத்து இரு கைகளைபக்கவாட்டில் தோளுக்கு நேராக நீட்டி உடலைச் சம நிலைப்படுத்தி பின் தலைக்குமேல் கொண்டுபோய் கைகளைச் கோர்த்து இடுப்பை வலப்பக்கம் திருப்பி பின்பக்கம் பார்க்கவும். இதேபோல் உடனே கால்களை திருப்பி இடப்பக்கம் திருப்பி பின்பக்கம் பார்க்கவும்.             ஒருமுறை வலம் இடம் செய்தால் பூர்த்தி.                                                      இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள் நின்று பின் பழைய நிலைக்கு திரும்பவும்.

பலன்கள்;                                                                                                                                     குதிகால்முதல் தலைவரையிலான தசை நரம்புகள் x வடிவில் திருப்பி பிழியப்படுவதால் இடுப்பு,அடிவயிற்றுத் தசைகள் மலஜல உறுப்புகள்,ஜனன உறுப்புகள் ஆகியவற்றில் புது ரத்தம் பாய்ந்து வலுவடைகின்றன.

மாதர்களுக்கு மாதவிடாய்,கர்பப்பை கோளாறுகளும்,பக்கவாதம், இளம்பிள்ளை வாதம் நீங்கும்.தொடை சதை குறையும்.                                            கைகளை விரித்து ஆழ்ந்த சுவாசம் செய்வதால் மார்பு விரிந்து நுரையீரல் சம்பந்தமான ஈஸ்ணோபீலியா,சயம்,ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்கள் குணமாகும்.

                                                               Videos will available shortly

உட்கட்டாசனம்

 

                                                உட்கட்டாசனம்

செய்முறை ;                                                                                                                                     இரு கால்களையும் ஓரடி இடைவெளியில் அகட்டி பக்கவாட்டில் விரித்து வைத்து ,இரு கைகளையும் தோல்பட்டைக்கு இணையாக முன்பக்கம் நீட்டி இடுப்பையும்,முழங்கால்களையும் மடக்கி உடலை நாற்காலி போல் அமைக்கவும்.                                                                                                                                                 இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள் நின்று பின் பழைய நிலைக்கு திரும்பவும்.

பலன்கள்;                                                                                          பாதம்,முழங்கால்,இடுப்பு பலம் பெறும். முழங்காலில் ஏற்படும் மூட்டுவலி, நீர்க்கட்டு,வாயுவீக்கம் போன்ற கோளாறுகளைப் போக்கும்.                             மூன்றுமுறை செய்தால் 3கிமீ நடை செய்த பலன் கிடைக்கும்.

                                         Videos will available shortly