சர்வாங்காசனம்
செய்முறை ; மல்லாந்து படுத்த நிலையில் தலை,கழுத்து,பிடரி சரியாய் தரையில் படிந்தவாறு இரு கால்களையும் சேர்த்து செங்குத்தாக தலைக்கு மேல் தூக்கி தலைக்குப்பின் கொண்டு செல்ல வேண்டும்.அப்போது இடுப்புப் பகுதியைத் தாங்கும் விதமாக உள்ளங்கை விரல்கள் மேல் நோக்கி இருக்குமாறு நடு முதுகில்வைக்க வேண்டும்.கண்கள் கால் கட்டை விரல்களை பார்க்கும் படி கால்கள் செங்குத்தாக நேர்கோட்டில் இருக்க வேண்டு.ம். இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்,கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளவர்கள்தவிர்க்கவும். இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள் 2-5 முறை
பலன்கள்
;
குதிகால் குடைச்சல்,நரம்பு சுருட்டு,முழங்கால் மூட்டுவலி,மூலம் ,முதுகுவலி குணமாகும்.பிட்யூட்டரி
சுரப்பி நோக்கி ரத்தம் பாய்வதால் அது,அது தொடர்புடைய
தைராய்டு தைமஸ்,மற்ற நாளமில்லா சுரப்பிகள் நன்கு வேலை செய்து குரல் மாற்றம்,முகத்தில்
முடி வளர்தல் டான்சில்ஸ், தோல்நோய் ஹார்மோன் கோளாறுகள் நீங்கும்.
Videos will available
shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக