பிறையாசனம்
செய்முறை ;
இரு
கால்களையும் சுமார் 3அடி இடைவெளியில் பக்கவாட்டில் விரித்து,இரு கைகளையும் முதுகில் விரல்கள் மேல் நோக்கி இருக்குமாறு உள்ளங்
கைகளை வைத்து,தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டு பின் தோள்பட்டை, இடுப்பு,முழங்கால்களை
பின்னே வளைத்து உடலை சந்திரப்பிறைபோல் அரைவட்டமாக வளைக்க வேண்டும்.
இயல்பான சுவாசத்தில் 10 வினாடிகள் நின்று பின் பழைய
நிலைக்கு திரும்பவும்..
பலன்கள்
முதுகுத்
தண்டு பலம் பெறும்.சர்க்கரை நோய்,தொந்தி,மூத்திரக்காய் கோளாறு, மலச்சிக்கல்,இடுப்புவலி
குணமாகும். கருத்தடை சாதனம் பொருத்திய மாதர்கள்,இதய
நோய். ஹெர்னியா, விரைவீக்கம் போன்றவற்றிக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதத்திற்கு
இதை செய்யக் கூடாது.
Videos will available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக