1. பஸ்திரிகா வலது கை நடுவிரல் ஆட்காட்டிவிரலை
மடக்கிக்கொண்டு பெருவிரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.உள்ளே
நிறுத்தாமல் இடதுநாசியை அடைதுக் கொண்டு வெளியே விடவும்.இதேபோல் வலது வலது நாசியில்
இழுத்து இடது நாசியில் விடவும்.10 முறை. பலன்கள் நோய் அணுகாது. கழுத்து பலவீனம்,பீனிசம்
சம்பந்தமான நோய்கள், மார்புவலி,ஈளை,இருமல்,க்ஷயம்,ஆஸ்துமா,ஜலதோஷம்,வாயு,பித்தம், கபம்,உடற்சூடு
குணமாகும்.
2. கபாலபதி
மூக்கின் இரு துவாரங்கள் வழியாக
உள்ளிளுத்து நிறுத்தாமல் உடனே வேகமாக வெளியே விடவேண்டும். 10 முறை. பலன்கள் கபரோகம் அனைத்தும் நீங்கும்.அழகு
உண்டாகும்.
3. உஜ்ஜயி
இரண்டு நாசியிலும் ஒரே சமயத்தில்
வேகமாக உள் இழுத்து 10 வினாடி நிறுத்தி இரண்டு துவாரங்களினாலும் மெதுவாக வெளியே விட வேண்டும். பலன்கள்
தலைச்சூடு,இருமல்,க்ஷயம்,மர்புசளி நீங்கும்.
4. சீத்தளை நாக்கை வெளியே நீட்டி குழல்போல் உருட்டி அதன்
வழியாக மூச்சை வேகமாக உள் இழுத்து நிறுத்தாமல் இரு நாசி வழியாக மெதுவாக விட வேண்டும். 10 முறை பலன்கள் கண் எரிச்சல்,தலைச்சூடு,உடற்சூடு
நீங்கும்.
5. சீத்தாரி வாயை திறந்த நிலையில் நாக்கை உள்ளே மடித்து
மூச்சை வாய் வழியே இழுத்து நிறுத்தாமல் மெதுவாக மூக்குத் துவாரங்களின் வழியாக விடவேண்டும். 10 முறை.
கவனிக்கவேண்டியவை 1. காற்றோட்டமான இடம் 2, 6’+3’ நல்ல விரிப்பு 3.காலையில் மலஜலம் கழித்தபின் வெறும் வயிற்றில் செய்ய
வேண்டும் 4.நிதானமாகவும் மெதுவாகவும் செய்ய
வேண்டும்.சிலருக்கு சில ஆசனங்கள் வராது.
5.பிணி உள்ளவர்கள் ஆசிரியரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். 6.வெகுதூரபிரயாணம்,முதல்நாள் கண் விழித்தல்,எண்ணை
ஸ்நானம் செய்த நாள்,உடலுறவு கொண்ட நாள், செய்யக்கூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக