பரிவர்த்தனாசனம்
செய்முறை;
வலது இடது கால்களை
முன்பின்னாக சுமார் 21/2அடி இடைவெளியில் நேர்கோட்டில் வைத்து இரு கைகளைபக்கவாட்டில்
தோளுக்கு நேராக நீட்டி உடலைச் சம நிலைப்படுத்தி பின் தலைக்குமேல் கொண்டுபோய் கைகளைச்
கோர்த்து இடுப்பை வலப்பக்கம் திருப்பி பின்பக்கம் பார்க்கவும். இதேபோல் உடனே கால்களை
திருப்பி இடப்பக்கம் திருப்பி பின்பக்கம் பார்க்கவும். ஒருமுறை வலம் இடம் செய்தால் பூர்த்தி.
இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள்
நின்று பின் பழைய நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்; குதிகால்முதல்
தலைவரையிலான தசை நரம்புகள் x வடிவில் திருப்பி பிழியப்படுவதால் இடுப்பு,அடிவயிற்றுத்
தசைகள் மலஜல உறுப்புகள்,ஜனன உறுப்புகள் ஆகியவற்றில் புது ரத்தம் பாய்ந்து வலுவடைகின்றன.
மாதர்களுக்கு
மாதவிடாய்,கர்பப்பை கோளாறுகளும்,பக்கவாதம், இளம்பிள்ளை வாதம் நீங்கும்.தொடை சதை குறையும். கைகளை
விரித்து ஆழ்ந்த சுவாசம் செய்வதால் மார்பு விரிந்து நுரையீரல் சம்பந்தமான ஈஸ்ணோபீலியா,சயம்,ஆஸ்துமா
போன்ற நாட்பட்ட நோய்கள் குணமாகும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக