உடற்கூறு
முன்னுரை
மனித உடம்பு என்பது ஒரு அற்புதமான
படைப்பாகும். ஏனெனில் ஒரு இயந்திரமானது அதில் உள்ள அச்சுக்கேற்ப(Mould) ஒரே மாதிரியான
பொருளையே எவ்வித மாற்றமுமின்றி உற்பத்தி செய்யும்.ஆனால் ஒரு தாய் வயிற்றின் கருப்பை
என்னும் ஒருஅச்சிலிருந்து வெளிவரும் உடம்பில்தான் எத்தனை வித்தியாசம்.பால்,ரேகை,குணம்
குரல் என்று சகோதர சகோதரிக் குள்ளேயே ஏகப்பட்ட வித்தியாசம். இப்படிப்பட்ட அற்புதமான உடலை ஊத்தைச் சடலமடி
உப்பிட்ட பாண்டமடி என்றும் காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்றும் பலரும் பலவிதமாக
கூறும்போது வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க சுவாமிகள் கூறுவது வித்தியாசமானது.அவர்
ஐயா நானோ ஏழை.நான் ஒன்பது பொத்தல் உள்ள வீட்டில் வசிக்கிறேன். இதுவோ(உடல்) நிலையில்லாமல்
நான் எங்கே சென்றாலும் கூடவே வருகிறது.இதற்கு உரிமையாளர்கள் மூன்று பேர்.இவர்களுக்கு
சரியாக குடக்கூலி(வாடகை) கொடுக்காவிடில் இவர்கள் செய்யும் துன்பம் (நோய்) தாங்கொனாதது
என்பார்.யார் இந்த மூவர் குடக்கூலி என்ன என்பதை அறிந்தாலே நாம் நோயின்றி வாழலாம். பிறப்பு நிலை ஆண் பெண் சேர்க்கையால் உண்டானது இந்த உடல் என்பதை
அனைவரும் அறிவோம். பெண்கள் பூப்படைந்தநாள் முதல் 16 நாட்கள் கருக்குழி மொக்கானது திறந்திருக்கும்.(மாதவிலக்கான
முதல் 7 நாட்கள் கருமுட்டை வளர்ச்சியடையாமலும் கடைசி 7 நாட்கள் முதிர்ச்சி அடைந்தும்
விடுவதால் 16 நாட்கள் மட்டுமே கணக்கிலெ டுக்கப்பட்டது) இத்தினங்களில் கூடும்போது கருப்பையில்
அருகம்புல்லின் நுனியில் காணப்படும் பனி நீரின் அளவிலான சுக்கிலமும் சுரோனிதமும் இணைந்து
தேயு என்ற தீ பூதம்,வாயு பூதம் துணையால் கருவாக மாறும்.அக்கணமே மொக்கானது மூடிக் கொள்ளும்.
இது முதல் நாள் கடுகுபோல் உருவமும் கனமும், இரண்டாம் நாள் மல்லியின் வடிவமும் கனமும்,மூன்றாம்
நாள் மிளகின் வடிவமும் கனமும், நான்காம் நாள் அவரை விதையைப் போன்று சற்று நீண்டு முனைகள்
சன்னமாகி நடுவில் கனத்தும் ஐந்தாம் நாள் நீர்க்குமிழியைப்போல் வடிவமும் உள்ளே வெற்றிடமும்
உண்டாகும்.
ஆறாம் நாளில்நெல்லிக்காயைப் போல வெளிப்புறம்
தெளிவாகவும் உட்புறம் கலங்கலாகவும் வடிவம் பெற்றும்,ஏழாம் நாளில் கருப்புரையால் மூடப்பட்டும்(கரு
சிசுவாகவும்,புரை நஞ்சுக்கொடியாகவும் மாறும்),எட்டாம் நாளில் ஐந்து பிரிவுகள் ஐந்து
நிறங்களுடன் காணப்படும்,ஒன்பதாம் நாளில் காக்கை முட்டையைபோல சற்றேறக்குறைய உருண்டையாய்
இருக்கும். 10-15 நாளில் பல மாறுதல்கள் உண்டாகி கோழி முட்டையின் வடிவத்தையும் அளவையும்
பெறும்.ஒரு மாதத்தில் வாழைப்பூ வடிவமாக நீண்டும்,இரு முனைகளில் தலைப்புறம் கனத்தும்,அடிப்புறம்
சற்று சன்னமாகவும் காணும். இரண்டாம் மாதத்தில் கழுத்தும்,மூன்றாம்
மாதத்தில் தலையும், தலையின் உறுப்புகளும் தோன்றும்.நான்காம் மாதத்தில் கை கால் பொருத்துக்களும்,விரல்களும்
தோன்றி வடிவத்தை அடையும்.ஐந்தாம் மாதம் செவி உண்டாகும்.ஆறாம் மாதம் மல சல துவாரங்களுண்டாகி,
நாடி நரம்பு உற்பத்தி துவங்கும்.ஏழாம் மாதம் 72000 நாடி நரம்புகளும் வளர்ச்சியடைந்து
முழுமை பெற்று எலும்புகள்,சுவாச உறுப்புகள்,குடல்,கொப்புள்,கால்,கைகள் உண்டாகும்.எட்டாம்
மாதம் உயிர் உண்டாகும்.இதுவரை உச்சி என்ற நாபி வழியாகச் சென்றுடலை பெருகச் செய்த அன்னரசம்
ஒன்பதாம் மாதம் முதல் நேரடியாகச் செல்லும்.உயிர் பெற்று அறிவு தோன்றும். பத்தாம் மாதம்
தீ பூதமும் வாயு பூதமும் அதிகரித்து அபானவாயுவின் சக்தியினால் தலை கீழாகத் திரும்பி
யோனி வழியாக குழவி சிரம் திரும்பிப் பிறக்கும். பஞ்ச பூதங்கள் ஐந்து,அதன் தன் மாத்திரை
ஐந்து,ஞானேந்திரியம் ஐந்து,தன்மாத்திரை ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து தன் மாத்திரை ஐந்து, மலங்கள்
மூன்று தச வாயுக்கள் என முப்பத்தாறு என்றும்,இதை இன்னும் விரித்து தொண்ணூற்றாறு தத்துவங்களை
கொண்டு எட்டு சாண் உயரமும் (96அங்குலம்),மூன்றரைக்கோடி ரோமங்களும்,எட்டு துலாம்(சுமார்
64 கிலோ)எடையும்,நாடி நரம்புகள் எழுபத்தி இரண்டாயிரம்,வலிமை வாய்ந்த இரு துண்டுகளையுடைய
கால் எலும்புகளும்,அவ்வாறே கை எலும்புகளும், முதுகெலும்பு முப்பத்தி இரண்டு-இரு பெரும்
பிரிவுகளையுடையது,உடலின் உறுப்புகள் மொத்தம் நூறு, முன்னூற்றறுபது முழம் கொண்ட சிறுகுடல், முப்பத்தியிரண்டு
முழம் கொண்ட பெருங்குடல் ,5.2லி இரத்தம்(நான்கு நாழி) கொண்டது. (96 தத்துவ விவரங்களை
சைவ சித்தாந்தவாதிகளிடம் கேட்டறிக) 96 தத்துவங்களும் 96 வர்மங்களாக அமையப்பெற்ற இவ்வுடலாகிய
வீட்டில் வாத பித்த கபம் என்ற மூன்று அரசர்களும் கூடி வாழ்ந்து ஆட்சி செய்து வருவர். (இவர்களே வீட்டின் உரிமையாளார் மூவர்)பிரம்மனின் படைப்பில்
உயிர் நூறாண்டு வாழ வேண்டும். முதல் 10 ஆண்டுகள் வாலைப்(குழந்தை) பருவம்,இருபது வயது
வரை பாலர் (சிறுவர்). முப்பது வயதுவரை இளைஞர்.முப்பதுக்குப் பின் உடல் தேஜஸ் குறையும். நாற்பதில்
அழகு குறையும்.ஐம்பதில் தேயுவால் ஆட்கொள்ளப்பட்டு உடல் வெளுக்கும். இது இரத்தக்குறைவை
காட்டும்.அறுபதாம் வயதில் அப்பு பிருத்திவியுடன் சேர்ந்து கண் பார்வையைக் குறைக்கும்.எழுபதில்
தேயுவால் ஆட்கொள்ளப்பட்டு சப்த தாதுக்களும் உலர்ந்து சுருங்கி,அறிவுகுன்றும். என்பதாம்
வயதில் பிராணன் உடலினுல் செல்லாமல் அதிகம்
வெளியில் சென்று வீணாகும்.தொண்ணூறில் இந்திரிய உற்பத்தி நிற்கும்.நூறில் மரணம் நூறாண்டு
கூறப்பட்டாலும் தாய் தந்தையர் செய்த தீவினைத் தொழில், விஷ உயிர்கள் கடிப்பதாலும்,விபத்துக்களாலும்,ஆஅயுதங்களால்
வெட்டு குத்து படுவதாலும்,வர்ம அடியாலும்,மிருகங்கள் தாக்குவதாலும்,நச்சுப் பொருட்களை
உண்உவிடுதலாலும் ஆயுள் குறைந்து இளமையில் மரணம் ஏற்படும். நூறு ஆண்டுகளில் முப்பது
வருடம் வாதமும்,அடுத்த முப்பத்தி மூன்று ஆண்டுகள்(63வரை)பித்தமும்,கடைசி 37 ஆண்டுகள்
கபமும் உடலை வளர்த்திவரும்.
நரம்பகள் எழுபத்தியிரண்டாயிரத்தில்
ஒரு நரம்பு தலைப்பகுதி யிலிருந்து நேராகத் தண்டுவடம் வரை நீண்டு முடிச்சிடத்தில் பல
கிளைகளாகப் பரந்து தேகம் முழுவதும் பரந்து கிடக்கும்.இதன் தொழில் சேர்கின்ற இடத்தில்
நீட்டல்,மடக்கல் ஆகும்.உடலின் ஒருசில பகுதிகளில் இவை முடிச்சிட்டு உடலின் பகுதி முழுவதும்
பரந்து கிடக்கும்.இவ்வாறு அமைந்திருக்கின்ற
நரம்புகளில் வாத பித்த கபம் என்ற முத்தோஷம் வர்மத் தால்உண்டாகும்
.