பக்கங்கள்

29 அக்டோபர், 2016

சளி,இருமல் (COUGH, COLD)



                                                                                                                                                                                                                                ழகடன் வாங்கிக் கொடாமையாலும்,பெரியோரை மனம் நோகப்பேசி ஏசுவதாலும், தாகபானம் உதவாமையினாலும்,பித்தட்சயம்,பித்தகாசம்,மந்ததாரகாசம், இரத்தகாசம்,சுவாசகாசம் உண்டாகும்.மேலும் எலி கடியாலும்,மூலத்தில் அனல் அதிகரித்து மூளையில் நீர் கசிந்து நெஞ்சில்சுவரி,கபத்தை உறையச் செய்யும்.

சீதளம் அதிகரித்து எந்நேரமும் உஷ்ணம் உண்டாகிச் சூடுபோல் காண்பித்து சலத்தைப் பெருக்கி ரோகம் 96 உண்டாக்குவது சிலேத்துமம். 
சிலேத்தும அறிகுறிகள்:                                                                                                                      மன்னிய  சேதம் மீறி  மாகாயம்  வெளுக்கும் வற்றும்             பன்னியே  அன்னஞ் செல்லா  பருவிக்கல்  இருமல் சத்தி             உன்னிய  மூர்ச்சை  ஈளை   ஊசிநீர் வழுவழுத்து                 கன்னியே  விலாவும்  நெஞ்சும் கடுப்புடன்  நோகும்  பாரே        மூலத்தில் அக்கினி அதிகரித்துக் கபாலத்தில் பற்றி    இரத்தம் வற்றி, தாதுகெட்டு நீரேறி நெஞ்சில் கபமுண்டாகி இருமல் இளைப்புக்கண்டு உடல் வற்றும்.                                                      சயரோகக்குணம்;அஸ்தியில் அனலேறி இரத்தம் வற்றி,பித்தம் அதிகரித்து நெஞ்சில் கபமுண்டாக்கி இருமல்,இளைப்பு காணும்;தேகம் வற்றும்; முகம் வெளுக்கும்;வாய் நீரூறும்;அரோசிகம் காணும்;தொண்டை,விலா புண்போல் நோகும்;நெஞ்சு பள்ளம் விழும்;விரல் நரம்பு சுருக்கலாகும். 

 பித்தசயகுணம்;பித்தமதிகரித்து அக்கினி கொண்டு உடல்,உள்ளங்கால், உள்ளங்கை எரிந்து கடுக்கும்,வெதுப்பும், நெஞ்சில் கபமுண்டாக்கி இருமல், இளைப்பு காணும்;சிவந்து விழும்,வாந்தி பண்ணும்,வயிறு கழியும்,நீர் கடுக்கும், அரோசிகம் அன்ன துவேஷம் உண்டாகும். 

காசரோககுணம்(tb);அக்கினியாயெரித்து,நெஞ்சு புண்ணாகி அடிக்கடி புகைந்திருமும், கபத்தோடு இரத்தம் விழும், தொண்டை புண்போல் நோகும்;கபமும் வாந்தி பண்னும்,களைப்புண்டாகும்,நாசி தணல் போலெரியும், தேகம் வெதும்பும்,வற்றும்,கடுக்கும்,முறுக்கும்,தலை வலிக்கும், வாயு அதிகரித்து வயிறு நோகும். 

 மந்தகாசத்தின் குணம்;முகம் காது ஊறும்;நாசி கரகரத்து தும்மலுண்டாகும்; நீர் வடியும்,நெஞ்சில் கபம் கட்டி இருமும், இளைக்கும், நெஞ்சும் விலாவும் வலிக்கும், மந்தார காலங்களில் நோய் அதிகரிக்கும், பசி மந்திக்கும்,வயிறு பொருமும், தேகம் அதைக்கும், கிறுகிறுக்கும்.   
                    
விஷபித்தகாசகுணம்;வளர்பிறை தோறும் பித்தம் அதிகரித்து நுழைத்துப் பொங்கி கபமுண்டாகி நினைவு தெரியாமல் அலுப்பு கண்டு பித்தம் வடிந்தபோது நிற்கும்,கிறுகிறுத்து வரும்,சுரங்காயும்,தொண்டை நெஞ்சு விரை புண் போல் நோகும்,அன்னஞ் செல்லாது.            
 
இரத்தகாசகுணம்;இருமல் காணும்,வாயில் இரத்தம் அடிக்கடி விழும், உடல் வற்றும், நாஉலரும்,வழுவழுக்கும்,அன்னஞ் செல்லாது.      

உளைமாந்தைக்குணம்;உடல் கனந்துளைத்து குத்திக் குடைந்து கைகால் எரிந்தும், சுரம்,தலைவலி,இருமல்,ஆயாசம்,மயக்கம் புலப்பமுண்டாகும், நினைவு தடுமாறும்,வாயால் வெண்ணுரை தள்ளும்,வாய்நீர் வடியும், அன்னஞ் செல்லாது,தேகம் மெலியும்.  
                                  
சுரமாந்தைகுணம்;அகோரமாய் சுரங் காயும்,இருமல்,ஆயாசம்,அன்னத் துவேஷம், அரோசிகங் காணும்.                              

சுவாசத்தின் குணம்;தேகம் உலர்ந்து வரும்,சுரங் குளிர்,இருமல்,ஆயாசம், சுவாசம், தலைவலி காணும்,வயிறு பொருமி வாந்தி பண்ணும்,மலங் கட்டும், வியர்வை,தாகம் மிகும்,புறந்தாளசைக்கும்.                                                                                                                     
1) 50கிராம் அதிமதுரம்,10கிராம் மிளகு ,இளவறுப்பாக வறுத்து,சூரணித்து 1 தேகரண்டி,  தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர இருமல் கட்டுப்படும் 
2) அதிமதுரத்தை  வாயிலிட்டு மென்று,ஊறவைத்துச் சாப்பிட  வறட்டு இருமல்  குணமாகும்                                               
3.       3) அரத்தைசூரணம் கால் தேகரண்டி,1 தேகரண்டி தேனில் குழைத்துச் சாப்பிட தொண்டைக்கட்டு,இருமல்,சளி  குணமாகும்
4.       4) 1துண்டு அரத்தையை  வாயிலிட்டு  மென்று,எச்சிலை  விழுங்கி வர தொண்டைக்கட் டு ,இருமல்,சளி குணமாகும்                               
5.   ஆடாதொடை இலைகளை நடுநரம்பு நீக்கி,10மிளகு,1பிடிதுளசி,2 வெற்றிலை சேர்த்து,சிதைத்து,4ல்1ன்றாய் காய்ச்சி,கற்கண்டு கலந்து, தினமிருவேளை பருக இருமல்,சளி,தொண்டைக்கட்டு தீரும் வறட்டு இருமல்  குணமாகும்.
6.       1 தேகரண்டி இஞ்சிச்சாறுடன் சிறிது தேன் கலந்து,தினம் 3வேளை பருகிவர சளியுடன் கூடிய இருமல் தீரும்,தொண்டை எரிச்சல். , பித்தமயக்கம், வயிற்றுப்பிசம், ஜலதோஷம் நீங்கும்
7.       2 தேகரண்டி இம்பூரல் வேர்ச்சூரணத்தை அரிசிமாவுடன் கலந்து, அடையாக தட்டிச் சாப்பிட சளி கட்டுப்படும்
8.       ஊமத்தை பூ,இலைகளை உலர்த்தி புகைப்பதுபோல் செய்ய சுவாசகாசம், வறட்டு இருமல் குணமாகும்
9.       வெள்ளைக்கடுகு தூள் கால்தேகரண்டி,தேனில் குழைத்துச் சாப்பிட இரைப்பு,  இருமல் ,சுவாச நோய்கள் குணமாகும்
10.   கண்டங்கத்திரி இலைச்சாறு 3தேகரண்டி,சிறிது தேன் கலந்து சாப்பிட சளி குணமாகும்
11.   கண்டங்கத்திரி சமூலச்சூரணம் சமஅளவு கற்கண்டு தூள் கலந்து, அரை தேகரண்டி ,தேனில் குழைத்துச் சாப்பிட இருமல் தீரும்
12.   மஞ்சள்கரிசாலை சாறு அரைலி, ந.எண்ணை அரை லி.,அதிமதுரதூள் 20 கிராம் நீர்சுண்டக் காய்ச்சி,1தேகரண்டி காலைமாலை சாப்பிட இருமல் தணியும் . ஓரிருதுளி பாலில் கலந்து பருகிவர )BRANCHICITIES) மார்பில் கட்டிய கோழை வெளியாகும.
13.   2 கொத்து கறிவேப்பிலையை,காம்பு நீக்கி,2ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி, தினம் 4வேளை பருக சளி,இருமல் குணமாகும்.
14.   கற்பூரவல்லி இலைச்சாறு 50மிலி, 1 ேகரண்டி தேன் கலந்து,தினமிரு வேளை பருக ஜலதோஷம் கட்டுப்படும்
15.   1தேகரண்டி கற்பூரவல்லி இலைச்சாற்றுடன்,கால் தேகரண்டி சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சளி,இருமல் குணமாகும்
16.   கற்பூரவல்லி இலைகளை இளஞ்சூடாக வதக்கி, 1ேகரண்டிச் சாறெடுத்து சமஅளவு தேன் கலந்து கொடுக்க குழந்தைகளின் மார்பில் கட்டிய சளி வெளிப்படும்
17.   1கிராம் குங்கிலிய தூளை, 200ிலி பாலில் கலந்து குடிக்க இருமல், மார்புச்சளி, இரத்தமூலம் குணமாகும்
18.   சடாமஞ்சில்பொடி 1கிராம்,நீரில் கலந்து தினமிருவேளை உட்கொள்ள கோழை வெளியாகும்
19.   சிறுகுறிஞ்சான்வேர் 20கிராம்,சிதைத்து 10ல்1ன்றாய் காய்ச்சி, 30மிலி, தினம் 3 வேளை பருக இருமல் குணமாகும்
20.   தவசுமுருங்கை இலைச்சாறு 1தேகரண்டி, சமன் தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கான சளி தீரும்.
21.   செம்பரத்தைபூவிதழ்கள் 15, ஆடாதொடை தளிரிலைகள் 3, சிதைத்து, 2ல் 1ன்றாய்  காய்ச்சி, அரை தேகரண்டி தேன் கலந்து,தினமிருவேளை பருக இருமல் தீரும்
22.   தவசுமுருங்கை இலைச்சாறு 2தேகரண்டி தினமிருவேளை பருக இரைப்பு நோய் குணமாகும்
23.   தவசுமுருங்கை இலைசூரணம் அரைதேகரண்டி, 1ேகரண்டி தேனில் குழைத்து தினமிருவேளை சாப்பிட சளி,இருமல் குணமாகும்.
24.   திருநீற்றுப்பச்சை இலைச்சாறு,தேன் சமன் கலந்து தினமிருவேளை 30 மிலி பருக இருமல் கட்டுப்படும்
25.   துளசியை இலேசாக அவித்து 5-10மிலி சாறெடுத்து, தினமிருவேளை பருக சளித் தொல்லை தீரும்
26.   கைப்பிடி தூதுவேளை இலைகளை, 2ல்1ன்றாய் காய்ச்சி,குடிக்க இரைப்பிருமல் தீரும்.
27.   கைப்பிடி தூதுவேளை இலையுடன், வெங்காயம் சமன் கலந்து,  ந.எண்ணையில் வதக்கி  துவையல் செய்து சாப்பிட இரைப்பு இருமல் தீரும்.
28.   தூதுவேளை காயை நெய்விட்டு வதக்கி,குழம்பு செய்து,தொடர்ந்து சாப்பிட்டு வர மார்புச்சளி கரையும்
29.   200மிலி நீரில் 10தூதுவேளை இலைகளை போட்டுக் காய்ச்சி, தினமிரு வேளை பருக சளியுடன் கூடிய இருமல் குணமாகும்-
30.   1பிடி நல்வேளை இலைகளை தேவையான அளவு உப்பு சேர்த்தரைத்துச் சாப்பிட இருமல் தீரும்
31.   பச்சைநன்னாரிவேர் 5கிராம், நன்கரைத்து, 200மிலி பாலுடன் கொள்ள வறட்டு இருமல் தீரும்
32.   முசுமுசுக்கை இலை சூரணம் 120கிராம்,தூதுவேளை இலை சூரணம் 80 கிராம் கலந்து,அரை தேகரண்டி வெண்ணையில் கலந்து சாப்பிட இரைப்பிருமல் குணமாகும்
33.   முசுமுசுக்கைஇலை 3பிடி,நெய் அல்லது நஎண்ணையில் வதக்கி துவையல் செய்து  சாப்பிட இரைப்பிருமல்,மூக்குப்புண் குணமாகும். இரத்தமும் சுத்தியாகும்.                                                             
34.   முட்சங்கன் இலை,தூதுவேளை இலை பிடியளவெடுத்து,அரைத்து, நெல்லிக்காயளவு, 200மிலி பாலில் பருக சளி வெளியாகும்.
35.   எருக்கம்பூ,மிளகு வகைக்கு 1பங்கு,கிராம்புஅரைபங்கு,அரைத்து,மிளகளவு மாத்திரை செய்து,தேனில் 2மாத்திரை சாப்பிட இரைப்பு தீரும்
36.   வெள்ளை எருக்கம்பூ இதழுடன் மிளகு சேர்த்தரைத்து,மிளகளவு மாத்திரை செய்து,தினமிருவேளை 1மாத்திரை தேனில் சாப்பிட மார்பில் கட்டிய கோழை வெளிப்படும்
37.   கஸ்தூரிமஞ்சளை விளக்கில் சுட்டு புகையை நுகர காசநோயின்போது ஏற்படும் இரைப்பு கட்டுப்படும்.
38.   கண்டங்கத்திரி சமூலசூரணம் அரைதேகரண்டி சமஅளவு தேனில் குழைத்துச் சாப்பிட சுவாசநோய்கள்,ஆஸ்துமா,சளி தீரும்
39.   25 தும்பைபூக்களை, 100ிலி காய்ச்சியபாலில் 1மணிநேரம் ஊறவைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க தொண்டையில் கட்டிய கோழை வெளியாகும்
40. 10துளி தும்பை பூச்சாறு காலையில் குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல், விக்கல் தீரும்
41.   நல்வேளை பூச்சாறு 10துளிகள் தாய்பாலுடன் கலந்து கொடுக்க பிறந்த குழந்தைகளுக்கான சளி,மூச்சுத் திணறல் கட்டுப்படும்
42.   10 மிளகைத் தூளாக்கி, கஷாயம் செய்து குடிக்க கோழை, இருமல் தீரும்
43.   குப்பைமேனி சமூலம் பிடிஎடுத்து கஷாயம் செய்து குடிக்க சளி,இருமல் கட்டுப்படும்
44.   குப்பைமேனி இலைச்சாறு 4துளி நாவில் தடவ கோழை வெளிப்படும்.
45.   கரிசாலை இலையை நன்கரைத்து, 2பங்கு நீரில்கலந்து 2பங்கு ந.எண்ணையில் காய்ச்சி வடித்து அரைதேகரண்,டி 100மிலி பாலில், தினமிரு வேளை பருக மார்பில் கட்டிய கோழை இளகும்
46.   பிரம்மி சமூலத்தை அரைத்து மார்பில் பூச கோழைகட்டு குணமாகும்
47.   பறங்கிக்காய் உள்ளிருக்கும் சதையை சூரணித்து சாப்பிட இரத்தவாந்தி , கோழை நீங்கும்
48.   குப்பைமேனி இலைசூரணம் கால்தேகரண்டி உட்கொள்ள கோழை வெளியாகும்.
49.   திப்பிலியை நெய்யில் வறுத்துப் பொடித்து, அரைதேகரண்டி,காலை மாலை தேனில் குழைத்துச் சாப்பிட தொண்டைக்கட்டு,கோழை, அரோசிகம் தீரும்
50.   நல்வேளை பூச்சாறு 1தேகரண்டி,குழந்தைகளுக்குக் கொடுக்க காய்ச்சல், மார்புச்சளி குணமாகும்
51.   தாளிசாதி சூரணமாத்திரை 2 ,தினமிருவேளை வெந்நீருடன் கொள்ள சளி,  இருமல்,இரைப்பு குணமாகும்.                                                                                         
52.   ஆடாதொடை மணப்பாகு செய்து 5-10மிலி தினம்3வேளை கொள்ள சளி, இருமல், இருமலுடன் கூடிய சுரம் நீங்கும்.நீடித்துச் சாப்பிட மார்புச்சளி நீங்கும்                                                           
53.   பலகறைபற்பம் 100மிகி திரிகடுகுசூரணம் 1கிராம், 5-10மிலி தேனில் குழைத்து தினம்2வேளை சாப்பிட்டுவர பீனிசம் நீங்கும்.    
 54.   நெய் மஞ்சள்பொடி தேன் கலந்து.தினம்2வேளை உண்டுவர இருமல் குணமாகும்.                                                     
55.   உருத்திராட்சத்தை இழைத்து தேனில் கலந்து நாவில் தடவ தொண்டைக்கட்டு, கோழை நீங்கும்                                     
56.   தவசுமுருங்கை இலை சாற்றுடன்,தே.எண்ணை கலந்து,காய்ச்சி வடித்து,     5-10துளி கொடுக்க, குழந்தையின் சளி நீங்கும்           
57.   தூதுவேளை இலையை ,எண்ணெயில் காய்ச்சி,வடித்து 10சொட்டு தினம் பருகிவர இருமல் குணமாகும்.பசி உண்டாகும்.
58.   அரைக்கீரையை பருப்புடன் சேர்த்து,வெங்காயம்,பெருங்காயத்துடன் சமைத்துச் சாப்பிட்டுவர சளி,இருமல்,ஜலதோஷம்,குளிர்காய்ச்சல் நீங்கும்
59.   200 கிராம் ஓமத்தை, 2படி நீரிலிட்டு,அரை படியாகக் காய்ச்சி வடித்து, 200ிலி தே.எண்ணை சேர்த்துக் காய்ச்சி 40ிராம் கற்பூரம் பொடித்துப் போட்டு,இறக்கி, இளம்சூட்டில் மார்பு,விலா,முதுகுப்புறங்களில் அழுத்தித் தடவி ஒற்றடமிட சளி இளகி வெளிப்படும்
60. சித்தரத்தை,அமுக்கராகிழங்கு,தேவதாரு,கடுகுரோகிணி,கரியபோளம், வெள்ளை குங்கிலியம்,வசம்பு,கோஷ்டம்,மஞ்சள்,பூங்காவி,அதிமதுரம் , சிற்றாமுட்டிவேர்,கோரைக்கிழங்கு,திரிகடுகு,சகஸ்ரவேதி,வெட்டிவேர், விலாமிச்சைவேர்,கடல்நுரை,அகில்கட்டை,சந்தனம் ,வகைக்கு சமன் பொடித்து 2சிட்டிகை உச்சந்தலையில் அழுத்தி தேய்த்து.நுகர ,சளிகட்டு நீங்கும் குழந்தைகளுக்கு ஆகாது. .                               
61. வேப்பங்கொழுந்து,மிளகு,சீரகம்,சேர்த்தரைத்து வெந்நீரில் கலந்து, 1 பாலடை ஊற்ற, குழந்தைகளுக்கு சளி,கபம் தீரும்.
62.   மஞ்சளை அரைத்து இளம்சூட்டில் நெற்றியில் பற்றிட சளி,தடுமன் விலகும்              
63.   குப்பைமேனி இலைத் தூளை வே.எண்ணையில் குழைத்து குழந்தைகளுக்கு நாவில் தடவ கோழை நீங்கும்.            
64.   கரிசலாங்கண்ணிச்சாறு 2துளி நசியமிட மூக்குச்சளி குறையும்.       
65.   தேன், எலுமிச்சைசாறு சமன்கலந்து,காலைமாலை வெறும் வயிற்றில் சாப்பிட ஜலதோஷம் நீங்கும்.                                     
66.   பச்சை திராட்சைப் பழத்தின் சாற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஜலதோஷம்,இருமல்,இவற்றால் ஏற்பட்ட ஜுரம் ஆகியவை குனமாகும். 
67.   ஆரஞ்சுபழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர ஜலதோஷம்,இருமல் குனமாகும்.                                                           
68.   வெந்நீரில் கழுவிச் சுத்தம் செய்யப்பட்ட 50 கிராம் கொடி முந்திரிப் பழத்தை பாலில் வேகவிட்டு,ஒவ்வொன்றாய் சாப்பிட்டு,அந்த பாலையும் குடிக்க ஜலதோஷம் விலகும்.                          
69.   பேரீச்சம்பழத்தை பாலில் வேகவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட இருமல் நீங்கும்.                                       
70.   புளியம்பூவைக் கஷாயம் செய்து சாப்பிட ஜலதோஷம் நீங்கும். 
71.   மிளகு,வெல்லம் சேர்த்தரைத்து பாக்களவு வெறும் வயிற்றில் சாப்பிட ஜலதோஷம்,சளி,இருமல் குணமாகும்.                  
72.   கறந்த பசும்பாலில்,மஞ்சள்தூள் கலந்து காய்ச்சி காலை 3நாள் வெறும் வயிற்றில் பருக தீராத இருமலும் தீரும்.                 
73.   ஆடாதொடை இலைச்சாறு தேன் சமன் கலந்து தினம் 4வேளை கொடுக்க இருமல் தீரும்.                                             
74.   இனிப்பான ஆப்பிள் அரைகிலோ 1வாரம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குனமாகும்.
75.   தழுதாழை இலை சாற்றை உறிஞ்சிவர தும்மல் தீரும். 
76.   நல்வேளை சமூலம் இடித்துச்சாறு பிழிந்து,சக்கையை தலையில் கட்ட தும்மல் தீரும்..                                                                                                                   
77.   காய்ச்சிய  பாலில் 1சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு பருகிவர  இருமல், மூச்சு திணறல்,தொண்டைகரகரப்பு  தீரும்                                                     
78.   மிளகு,பனங்கற்கண்டு,துளசி சமனெடுத்து,பொடித்து,கலந்து அவ்வப்போது 1தேகரண்டி,சுவைத்துச் சாப்பிட  இருமல்  குணமாகும்                          
79.   சூடான பாலில் 1சிட்டிகை மஞ்சள்தூள்,சுக்குத்தூள் கலந்து சாப்பிட வறட்டு இருமல்  குணமாகும்                                                                                                    
80.   நிலவேம்பு இலைகளை குடிநீர் செய்து தினம்3வேளை பருகிவர பீனிசம் தீரும்.                                                                                                                   
81.   வெற்றிலை,கருந்துளசி சாற்றை,தேனில் கலந்து,குழந்தைகளுக்குக் கொடுக்க சளித்தொல்லை  மறையும்                                                                    
82.   வேப்பஎண்ணையை  மார்பு,முதுகுகளில் தடவி,சிறிது உள்ளுக்கும் கொடுக்க குழந்தைகளுக்கு சளித்தொல்லை குறையும்                                             
83.   ஆடாதொடையை  தேன் விட்டு வதக்கி,தாளிசபத்திரி.அரிசிதிப்பிலி, அதிமதுரம் சமன்  பொடித்துப்  போட்டு,4ல்1ன்றாய்க்  காய்ச்சி,50மிலி  அருந்திவர  காசநோய், இருமல்,இரைப்பு  குணமாகும்                            
84.   நீர்க்கோவை மாத்திரையை வெந்நீரிலரைத்துப் பற்றிட பீனிசம், பீனிசத் தலைவலி நீங்கும்.                                       
85.   தேன் 1கரண்டி தினமும் ஊட்டிவர குழந்தைகளுக்கு சளி நீங்கும்.     
86.   கற்பூரம்,தே.எண்ணை கலந்து காய்ச்சி தடவ மார்பில் கட்டிய கோழை வெளியாகும்.                                    
87.   மஞ்சள்,குங்குமப்பூ,சாம்பிராணி மூன்றையும் அரைத்து நெற்றியில் பற்றிட சளி மறையும்.                                                                                                             
88.  புழுங்கல் அரிசியுடன்  மிளகு  சேர்த்து  மென்று  சாப்பிட  இருமல் குணமாகும்                                                                                                          
89.   ஆசனவாயில் வி.எண்ணை தடவ இருமல் தீரும்.                 
90.   வெள்ளை பூண்டை நெய்யில் வதக்கி,சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட இருமல் தீரும்                                                        
91.   ரோஜாப்பூவை நுகர மூக்கடைப்பு தீரும்.                       
92.   கடுகுஎண்ணையை மூக்கு,மார்பின் மேல்தடவி,உப்பு நீரால் மூக்கை சுத்தம் செய்ய மூக்கடைப்பு தீரும்                              
93.   சுக்கை சுட்டுப் பொடித்து,தேனில் குழைத்துச் சாப்பிட சளி நீங்கும்
94.   ஆடாதொடை இலைச்சாறு,தேன்,சமனளவு,சர்க்கரை கலந்து,தினம் 4 வேளை கொள்ள இருமல் தீரும்                         
95.   கஞ்சாங்கோரை இலை10,மிளகு1கிராம் சேர்த்தரைத்து வென்னீரில் கொள்ள இருமல் தீரும்                                             
96.   இஞ்சிச்சாறு,மாதுளம்பழச்சாறு வகைக்கு 30மிலி, 15மிலி தேன் கலந்து, தினம் 3வேளை சாப்பிட இருமல் தீரும்                       
97.   30கிராம் கோவை இலையை,200மிலி நீரில் சிதைத்துப் போட்டு, 100மிலி யாக்கி தினமிருவேளை பருக இருமல் தீரும்                
98.   நெல்லிக்காய் லேகியம் காலை மாலை கழற்சிக்காயளவு சுவைத்துப் பாலருந்த இருமல் குணமாகும்                                   
99. இன்புறா,வல்லாரை வகைக்கு 40கிராம்,சிதைத்து 500மிலி நீரிலிட்டு 150 மிலியாக காய்ச்சி,50மிலியாக 3வேளை கொள்ள இருமல் தீரும்
100.                        கரிசாலைசாறு,.எண்ணை வகைக்கு 1லி,அதிமதுரதூள் 40கிராம், கலந்து,  காய்ச்சி வடித்து,1தேகரண்டி கொள்ள இருமல் தீரும். தலை முழுகியும் வரலாம்
101.                        பால்சுண்டைக்காயை சமைத்துண்ண இருமல் தீரும்             
102.                        கறிவேப்பிலை ஈர்க்கு,முருங்கை ஈர்க்கு,வேம்பு ஈர்க்கு,நெல்லி ஈர்க்கு வகைக்கு 30கிராம்,சுக்கு,மிளகு,சீரகம் வகைக்கு 20கிராம்,சிதைத்து, 2ல்1ன்றாய் காய்ச்சி, வேளைக்கு 1மடக்கு கொள்ள இருமல் தீரும்     
103.                        முசுக்கைவேர்120கிராம்,தூதுவேளைவேர்80கிராம்,சுக்கு10,மிளகு10, கிராம்பு 5கிராம்,பொடித்து,5அரிசிஎடை,கருப்பு வெற்றிலையுடன் உண்டு, பால்அருந்த, சுவாச உறுப்பு சுத்தமாகும்.உறைந்த சளி வெளியேறும்
104.                        கற்பூரவல்லி  இலைக்காம்புகளை குடிநீர் செய்து பருக இருமல் தீரும்
105.                        பிரமத்தண்டு சமூலம்பால்,3அரிசிஎடை,தேனில் கொள்ள இருமல் தீரும்
106.         பிரமத்தண்டு இலைசூரணம்,விதைசூரணம் கலந்து,30மிகி,காலை மாலை, தேனில் கொள்ள இருமல் தீரும்                                      
107.         மரைக்காரை பழச்சதையை உலர்த்திப் பொடித்து,200மிகி,கொள்ள இருமல் தீரும்                                          
108.         புளியாரை நெய் 1தேகரண்டி,காலைமாலை,சாப்பிட்டுவர இருமல் தீரும்
109.         ஆடாதொடைவேர்,கண்டங்கத்திரிவேர்,சமன் சூரணித்து, 1கிராம், தேனில் கொள்ள ஈளை,வறட்டு இருமல்,என்புருக்கி,இருமல் தீரும்
110.         மஞ்சள்துண்டுகளை சுண்ணாம்பு தெளிவு நீரில், ஊறவைத் துலர்த்தி,  தூள் செய்து,1தேகரண்டி,தேன்,பால்,வெந்நீரில் கொடுக்க வறட்டு இருமல்,ஈளை தீரும்                                      
111.         இண்டந்தண்டுசாறு 15மிலி,திப்பிலிபொடி,பொரித்தவெங்காரம் வகைக்கு 1கிராம், சேர்த்துக் காலை3நாள் கொடுக்க ஈளை,வறட்டு இருமல் குணமாகும்
112.         மருளை வாட்டிப்பிழிந்த சாறு அரைசங்கு குழந்தைகளுக்குக் கொடுக்க நெஞ்சில் ஏற்பட்ட சளி நீங்கும்.          
113.         .தூதுவேளை,ஆடாதொடை,கண்டங்கத்திரி வேர்,சித்தரத்தை நான்கையும் அரைத்து நீரிலிட்டு காய்ச்சிப் பருக,1தேகரண்டி குழந்தைகளுக்குக் கொடுக்க சளி,மூக்கடைப்பு தீரும்.                                      
114.         சுக்கை உரைத்துப் பற்றிட சளி,மூக்கடைப்பு,தடுமன்,தலைவலி நீங்கும். 
 115.         மூக்கிரட்டைவேர் 30கிராம்,மிளகு4,உத்தாமணிச்சாறு 50மிலி, 100மிலி வி.எண்ணையில் காய்ச்சி வடித்து குழந்தைகளுக்கு 15மிலி, அதற்குமேல் 30 மிலி, வாரம்1,2முறை,கொடுக்க கப இருமல் தீரும்
116.         கண்டங்கத்திரி,ஆடாதொடை,வேர் வகைக்கு 50கிராம்,திப்பிலி 5 கிராம் சிதைத்து,4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி,தினம் 4வேளை பருக கப இருமல் தீரும்                                                
117.         விளாக்கொழுந்து அரைத்து,புன்னைக்காயளவு,பால்,கற்கண்டு கலந்து சாப்பிட கப இருமல் தீரும்                                             
118.         அகத்தி இலைசாற்றில் தேன் 5துளி கலந்து உச்சந்தலையில் சூடு பறக்கத் தேய்க்க குழந்தைகளுக்கு ஜலதோஷம் நீங்கும்.                
119.         திரிகடுகை அரைத்து மிளகளவு மாத்திரை செய்து குழந்தைகளுக்குக் கொடுக்க வாதம்,பித்தம்,கபம்(திரிதோஷம்) குணமாகும்.
120.         மஞ்சள்,கறிவேப்பிலை சேர்த்தரைத்து,பெரிய நெல்லிக்காயளவு நீடித்துச் சாப்பிட்டுவர ஒவ்வாமை தும்மல்,இரைப்பு, எக்ஸிமா, ஈஸ்னோபீலியா, ஆஸ்துமா குணமாகும்.                                 
121.         முருங்கை இலையுடன்,மிளகு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர நெஞ்சுச்சளி நீங்கும்.                           
122.         முருங்கைஇலைச்சாறு,தேன் கலந்து சாப்பிட்டுவர தொண்டைக் கம்மல், எரிச்சல்,இருமல் தீரும்.                                   
123.         தூதுவேளை இலைசாற்றில் சமன் நெய் கலந்து,காய்ச்சி வடித்து, 5 மிலி,  காலை மாலை சாப்பிட்டுவர மார்புச்சளி தீரும்              
124.         தழுதாழை இலைச்சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மார்புச்சளி படிப்படியாய் குறையும்.பீனிசம் குணமாகும்            
125.         கோவைக்கிழங்குச்சாறு 10மிலி காலையில் பருகிவர சளி தீரும்.
126.         பொடுதலை இலையுடன், இஞ்சி,புதினா,கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, துவையல் செய்து,சுடுசாதத்துடன் நெய் சேர்த்து, முதலில் உண்டுவர சளி தீரும்
127.         தான்றி தளிரிலை சாற்றினை வெள்ளைத்துணியில் தடவி உலர்த்தி, நீரில் பிழிந்து பருகிவர தொண்டைக்கம்மல்,இருமல் குணமாகும் 
 128.                        சுக்கை வாயில் அடக்கிக்கொண்டு சாற்றை விழுங்கிவர இருமல் குணமாகும்.                            
129.         சுண்டைவற்றல்,நெல்லிவற்றல்,சுக்கு,வெந்தயம்,ஓமம்,மாதுளை ஓடு, மாம்பருப்பு,கறிவேப்பிலை,சீரகம் வறுத்திடித்து,பொடித்து,காலை மாலை 2சிட்டிகை,மோரில் சாப்பிட்டுவர சளி நீங்கும்
130.         மண்டூரம்,உலர்ந்தமாவிலை,கீழாநெல்லி,நீர்முள்ளி வகைக்கு 80 கிராம், சீரகம்10கிராம் உலர்த்திப் பொடித்ததில் 50கிராம்,500மிலி நீரிலிட்டு 125 மிலியாக காய்ச்சி,60மிலி காலைமாலை உணவிற்குப்பின் சாப்பிட்டு வர சோகை,  உடல்வீக்கம்,உடம்புவலி,அண்டவீக்கம், இருமல் சுரம் தீரும்
131.         சுக்கு,மிளகு,திப்பிலி சமன் பொடித்து,1கிராம்,தேன்,நெய்யில் கலந்து, காலை மாலை சாப்பிட்டுவர பசியின்மை,செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் ,சுரம்,இருமல் தீரும்
132.         கடுக்காய்தோல்,தான்றித்தோல்,நெல்லிவற்றல், சமன் பொடித்து 2 கிராம், நெய்,தேனில்,காலைமாலை கொள்ள இருமல்,கண்எரிச்சல், வாய்ப்புண், மலச்சிக்கல் தீரும்          
 133.         பிரம்மதண்டு சாம்பல்பொடி 2கிராம்,தேனில் கலந்து உண்டுவர ஆஸ்துமா,காசநோய்,இருமல்,இரைப்பு குணமாகும்.                    
134.                        பிரண்டை உப்பை தென்னங்கள்ளில் கலந்து சாப்பிட்டுவர ஆஸ்துமா குணமாகும்.                                              
135.                        எலுமிச்சைசாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
136.         தூதுவேளை,கருந்துளசி,இன்புறா,மணித்தக்காளி,முசுமுசுக்கை, மிளகரனை, சிறுகீரை,ஆடாதொடை,அமுக்கரா,வேர்கள் வகைக்கு 50 கிராம், இடித்து,5லி நீரிலிட்டு அரைலி ஆக காய்ச்சி வடித்து அரைலி நெய் சேர்த்து காய்ச்சி 50கிராம் கற்கண்டு பொடி கலந்து வடித்து காலை மாலை 5மிலி சாப்பிட்டுவர கபநோய்கள் ,கைகால் எரிவு, வறட்டு இருமல்,ஈளை, காசம் குணமாகும்.
137.         தாளிசாதிசூரணம் 100-500மிகி,10மிலி தேனில் குழைத்து குழந்தைகளுக்குக் கொடுக்க (1தேகரண்டி பெரியவர்களுக்கு) சளி, இருமல், இரைப்பு குணமாகும்.
138.                        தான்றிகாயை நெய்யுடன் வறுத்து,பிசைந்து,ஈர கோதுமை மாவால் மூடி,வாயில் அடக்க இருமல்,சளி தீரும்.               
139.                        பிரம்மதண்டுகிழங்குசூரணம்,மிளகுசூரணம்,வெள்ளைசர்க்கரை சமன் கலந்து, வேளைக்கு திரிகடி,21நாள் சாப்பிட்டுவர இரைப்பு தீரும்.பத்தியம்.. 
140.                        முட்சங்கன்,தூதுவேளை,இலைசமனெடுத்தரைத்து,நெல்லிக் 
காயளவு,  200மிலிபசும்பாலில் சாப்பிட சளி வெளியாகும். கபரோகம் தீரும்      
141.                        மஞ்சளை சுட்டு நுகர தலை நீரேற்றம், மூக்கடைப்பு தீரும்
            
142.                        அரைகிராம் மிளகுதூளுடன்,1கிராம் வெல்லம் சேர்த்து சாப்பிட தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்                             
143.                        நொச்சிஇலைகளை தலையணையாக செய்து உபயோகிக்க தலைவலி, காய்ச்சல்,பீனிசம் குணமாகும்
144.                        பலகறைபற்பம்100மிகி,திரிகடுகுசூரணம்1கிராம்,10மிலி தேனில் குழைத்து, தினமிருவேளை சாப்பிட பீனிசம் நீங்கும்                     
145.                        வெண்தாமரைசமூலம் மணப்பாகு(சர்பத்) செய்து சாப்பிட இரத்தமூலம், சீதபேதி, ஈரல் நோய்கள் குணமாகும்.இருமல் கட்டுப்படும்..             
146.                        இந்துப்பு,கற்கண்டு பொடித்து திரிகடி கொள்ள ஈளை, இருமல் நீங்கும்
147.                        தூதுவேளை, முருங்கைபட்டை,திப்பிலி,சீனி சமன் பொடித்து திரிகடி பசுநெய்யில் கொள்ள ஈளை,இருமல் தீரும்.
148.                        மிளகு, ,பொடுதலை கொழுந்து சமனரைத்து வேளைக்கு கொட்டை பாக்களவு சாப்பிட்டுவர ஈளை இருமல் தீரும்
149.                        ஓமம்,கடுக்காய்,மிளகு,சுக்கு,திப்பிலி,அரத்தை,அக்கராகாரம் சமன் பொடித்து பாதிஅளவு சர்க்கரை கலந்து திரிகடி கொள்ள ஈளை இருமல் தீரும்
150.                        துளசிச்சாறு,.எண்ணைகலந்து300மிலி காலை3நாள் பத்தியத்துடன் சாப்பிட இரத்தகாசம் தீரும்
151.         சித்தரத்தை,ஓமம்,கடுக்காய்,மிளகு,திப்பிலி,அக்கராகாரம்,தேசாவரம் சமன் இடித்துப் பொடித்து,பாதிஎடை சர்க்கரை சேர்த்து,1 தேக்கரண்டி, காலை மாலை கொள்ள ஈளை, வறட்டு இருமல்,நீர்க்கோவை தீரும்.                              
152.         மூக்கிரட்டைவேர் 30கிராம்,அருகம்புல் 30கிராம்,மிளகு10,சிதைத்து 3ல்1ன்றாய்க் காய்ச்சி,150மிலி,தினம்3வேளை பருக சளியுடன் கூடிய இருமல் த
153.         20கிராம் விராலி இலையை இடித்து,250மிலிநீரில் 1நாளூற வைத்து, வடித்து,20மிலி பாலுடன் கொள்ள சளி,இருமல்,நுரையீரல் நோய்கள், கணச்சூடு தீரும்.                                       
154.         விழுதிசாற்றில் சமன் ந..எண்ணை கலந்து காய்ச்ச்சி வடித்து 4 நாட்களுக்கு 1 முறை தலைமுழுகிவர சகல பீனிசமும் தீரும்.                                     
155.         அரைகிராம் மிளகுபொடியுடன் 1கிராம் வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டுவர பீனிசம் தீரும்.                                                                     
156.         வெங்காயச்சாறு 15மிலி,காலைமாலை 15நாள் கொடுக்க தொடர்ந்து புகை பிடிப்பதால் வந்த இருமல் தீரும்.                                       
157.         கஞ்சாங்கோரை இலைசாறு 30துளி,பாலுடன் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்புச்சளி குணமாகும்.                                                    
158.         உப்பு கலந்த புளித்த மோரில் சுண்டைக்காயை 2முறை ஊற வைத்து, காய வைத்து,பொரித்து இரவு உணவில் சேர்த்துவர சளி தீரும்.
159.         சித்தரத்தை,பேரீச்சம்பழம்,சுக்கு,அதிமதுரம் வகைக்கு10கிராம், ஒன்றிரண்டாய் நறுக்கி,50மிலி பால்,50மிலி நீர் சேர்த்து காய்ச்சி, கற்கண்டு கலந்து காலைமாலை 50மிலி சாப்பிட்டுவர வறட்டுஇருமல், சளியுடன் கூடிய இருமல்,சுரத்துடன் கூடிய இருமல் தீரும்.
160.         நிலஆவாரை,சுக்கு,மிளகு,ஓமம்,வாய்விளங்கம் பொடித்து சமன் கலந்து அந்தளவு சர்க்கரை சேர்த்து 2கிராம்,காலைமாலை,வெந்நீரில் கொள்ள வாயு, பொருமல்,விக்கல்,சளி,இரைப்பிருமல், உடம்புஎரிவு, வாந்தி, பித்தம்,மலக்கட்டு நீங்கும்.                                                                    
161.                        இண்டு இலை,சங்கிலை,தூதுவேளைஇலை,சுக்கு,திப்பிலி வகைக்கு 20 கிராம் இடித்து,4ல்1ன்றாய்க் காய்ச்சி,100மிலி தினமிருவேளை பருகி வர இருமல் தீரும்.                                                 
162.                        வல்லாரை,தூதுவேளைஇலை சமஅளவு கசக்கிச்சாறெடுத்து 5-6 துளி அல்லது பொடி 1தேகரண்டி,50மிலி காய்ச்சிய பாலில் கொடுக்க சயரோகத்தால் வந்த தொண்டைக்கம்மல்,சுவாச உறுப்புகளில் சளி தேக்கம் நீங்கும்.
163.                        ஆனைதிப்பிலி சூரணம் தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர இருமல்,ஈளை, கபம்,வாயு தீரும்.                                                    
164.                        சடாமஞ்சில் சூரனம் 1கிராம் நீரில் தினமிருவேளை சாப்பிட்டுவர கோழை வெளியாகும்.                                                   
165.                        முட்சங்கன் இலை,தூதுவேளைஇலைசமனெடுத்து,அரைத்து நெல்லிக்காயளவு 200மிலி பசும்பாலில் சாப்பிட சளி வெளியாகும். கபரோகம் தீரும்.                                                    
166.                        ஆடாதொடைஇலையை இடித்து பிட்டவித்து சாறு100மிலியில் திரிகடி திப்பிலிபொடி கலந்து உட்கொள்ள ஈளை இருமல் தீரும்.   
167.                        திரிகடுகு,கடுக்காய்,சிற்றரத்தை,ஓமம் வகைக்கு 12கிராம் வறுத்து பொடித்து சமன் சீனி சேர்த்து திரிகடி தேனில் கொள்ள ஈளை இருமல் தீரும்.         
168.                        மரமஞ்சள்,திரிகடுகு,திரிபலா,ஓமம்,கடுக்காய்பூ,சித்தரத்தை தேற்றான் விதை வகைக்கு12கிராம் பொடித்து திரிகடி தேனில் கொள்ள ஈளை இருமல் தீரும்.
169.         தேன்,இஞ்சிச்சாறு,மாதுளம்பழச்சாறு சமன் கலந்து மணிக்கொரு முறை 100மிலி பருகி வர ஈளை இருமல் தீரும்.                                             
170.               வாழைப்பூ இரசம் செய்து அருந்தி வர இருமல் நீங்கும்.
171.               எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்
172.               ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில்  சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
173.               3 தம்ளர் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் சேர்த்து  கொதிக்க வைத்து குடித்து வர கடுமையான இருமல்  தீரும்.
174.               நீருடன் தேனைக்கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
175.               மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி, காய்ச்சி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் நசியமிட (படுத்தவாறு மூக்கில் விட) மூக்கடைப்பு நீங்கும்.
176.               நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்க நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
177.               ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூச மூக்கு ஒழுகுவது நிற்கும்.
178.               சுக்கை தட்டி கஷாயமாக போட்டு தேனுடன் கலந்து சாப்பிட ஜலதோஷம் நீங்கும்.
179.               ஐந்தாறு துளசி இலைகளுடன் சிறு துண்டு சுக்கு, 2 இலவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட தலைவலி குணமாகும்.
180.               தாளிசபத்திரி சூரணம், வசந்தகுசுமாத்திரை, சுதர்சன மாத்திரை, சாந்த சந்திரோதயம் மாத்திரைகள் உட்கொள்ள சளி மற்றும் காய்ச்சல் குணம் அடையும்.
181.               உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர இருமல் நீங்கும்.
182.               ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டுவர இருமல் குணமாகும்.                                                                                                                                                     
183.               வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்க சளித்தொல்லை நீங்கும்                                                                                              
184.               சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 தம்ளர் வென்னீர் அருந்தி படுக்க சளித்தொல்லை  நீங்கும் .
185.               முற்றிய வெண்டைக்காயை இரசம் செய்து குடித்து வர இருமல் உடனே நிற்கும்.
186.               மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி நீங்கும்
187.               பாலில் பூண்டை காய்ச்சிக் குடிக்க இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு  நீங்கும்
188.               பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இரசம் செய்து குடிக்க சளி சீக்கிரம் குணமாகும்.
189.               சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர, குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குறையும்.
190.               இரவு ஒரு தம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வர  சளி, இருமல் பறந்தோடி விடும்.
191.               இஞ்சியை நன்றாக அரைத்துச் சாறெடுத்து, ஒரு சிட்டிகை உப்பைக் கலந்து பருகிவர ஓரிரு நாட்களில் மூக்கு ஒழுகுதல் நின்று போகும்.
192.               ஒரு பல் பூண்டை எடுத்து வாயில் போட்டு நன்றாகக் கடித்து மெல்ல மூக்கு ஒழுகுதல் உடனடியாக நின்று போகும்.
193.               ஓரிரு துளி நீலகிரித் தைலம் கைக்குட்டையில் விட்டு, அவ்வப்போது அதை மூக்கில் வைத்து நாள் முழுவதும் சுவாசித்து வர ஜலதோஷம் நீங்கும்.
194.               10 ஓம இலைகள் மற்றும் ஆறு கிராம்புகளை சர்க்கரையுடன் கலந்து நீரில் கொதிக்க வைத்து, தினமும் காலையில் குடித்து வர சளி ஓடிப் போகும்.
195.               எள்ளை நன்றாக வறுத்து, அத்துடன் வெல்லத்தை சேர்த்துச் சாப்பிட்டு வர, கொளகொளவென்று ஒழுகிக் கொண்டிருக்கும் சளி விரைவில் நின்று போகும்.
196.               அரை தேகரண்டி பூண்டு, 1 தேகரண்டி தேன், ஒரு தேகரண்டி எலுமிச்சை சாறு, அரை தேகரண்டி இலவங்கப்பட்டை, அரை தேகரண்டி இஞ்சியுடன் தேவையான அளவு தேயிலை கலந்து கொதிக்க வைத்து கசாயம் செய்து குடித்து வர, 30 நிமிடங்களில் மூக்கு ஒழுகுதல் நிற்கும்.
197.               வெற்றிலை சாற்றில் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க ஜலதோசம் நீங்கும்.
198.               13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட  தூசு குப்பையினால்  ஏற்படும் ஒவ்வாமை (Dust allergy) யினால் வரும் ஜலதோசம்  குணமாகும்.
199.               மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு சேர்த்து தலையைச் சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் பூச ஜலதோசம் சளி குணமாகும்
200.               மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட, தலைவலி நீங்கும்.
201.               கற்கண்டுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
202.               ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
203.               உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர இருமல் நீங்கும்.
204.               கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட இருமல் குணமாகும்.
205.               மிளகுத்தூள் சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடசூட்டினால் உண்டாகும் இருமல தீரும்.
206.               நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
207.               வால்மிளகின் தூளை வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட சளி நீங்கும்
208.                மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி நீங்கும்
209.          

DISEASES (நோய்கள்)



நம் உடல் தனக்கு தேவையில்லாத எதையும் உடனே வெளியேற்றும். உணவின் மூலம் உடலில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றுவதே நோய்கள்,உதாரனமாக நெஞ்சுப்பகுதியில் சேர்ந்த ஒவ்வாத பொருட்களை வெளியேற்ற உனவு,சுவாசக் குழல்கள் மத்தியில் உள்ள அடைப்பானை (வால்வு) திறந்து மூடுவதே இருமல்.எனவே காரணமறிந்து மருந்துகள் கொள்க.
நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்                             வாய்நாடி வாய்ப்பச் செயல்   -குறள்-
1.   சளி இருமல்
2.   தலைவலி, தலைபாரம், நீர்கோவை
3.   சுரம், தட்டம்மை
4.   வாய்ப்புண், உதடு வெடிப்பு
5.   தொண்டை உள்நாக்கு, மூக்கு அழற்சி
6.   குடற் புழுக்கள்
7.   குடல்வலி, வயிற்றுப்புண்
8.   வயிற்றுப்போக்கு, மாந்தம், காலரா
9.   நீரிழிவு
10. வாந்தி, விக்கல்
11. வெள்ளைப்படுதல், மேகவெட்டை
12. அக்கி, வேனற்கட்டி, வீக்கம்
13. பல் நோய்கள்
14. நகச்சுற்று, காலாணி, சேற்றுப்புண்
15. மஞ்சள் காமாலை
16. மலச்சிக்கல்
17. முதுகு, மூட்டுவலி, பக்கவாதம்
18. சூதக வலி, பெரும்பாடு,கருப்பைக்கோளாறு
19. தலைப்பேன், பொடுகு, இளநரை
20. சொறி, சிரங்கு, கரப்பான், தோல்நோய்
21. தேமல், வெண்படை, படர் தாமரை
22. காணாக்கடி, வண்டு கடி
23. இரத்த சோகை
24. யானைக் கால்
25. கண் அழற்சி, இமைக்கட்டி
26. மூலம், பவுத்திரம்
27. முகப்பரு, கரும்புள்ளி
28. நீர்க்கடுப்பு, எரிச்சல்
29. சிறுநீரகக் கற்கள், கோளாறுகள்
30. காயங்கள், புண்கள்
31. தாது பலம், ஆண்மைப் பெருக்கம்
32. மிகுதாகம், மிகு வியர்வை, அதிமூத்திரம்
33. வெட்டை மேகம், சூலை
34. உடல் பலம், உடல் மெலிவு
35. உடல் வலி, உடற்சோர்வு
36. காது வலி, சீழ், மந்தம்
37. விஷக்கடி, நஞ்சுகள்
38. செரியாமை, சுவையின்மை
39. வயிற்றிரைச்சல், பொருமல்
40. பித்தம், மயக்கம்
41. ஈரல், நெஞ்செரிச்சல்
42. வலிப்பு
43. கருத்தரித்த பெண்களுக்கு
44. பிரசவித்த பெண்களுக்கு.                                    
45. பிறந்த குழந்தைகளுக்கு                                                            
46. புற்றுநோய்

18 ஜனவரி, 2016

23 ஜூன், 2014

ஆரோக்கியமும் பாரதியும்

                                                          பாப்பா பாட்டு
   
  எட்டயபுரத்துக்கவி  முண்டாசுக்கவி பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களால் புரட்சி உண்டாக்கினார். எல்லோருக்கும் பாடினாலும் எல்லோராலும் பெரிதும் விரும்பப்படுவது பாப்பாப்பாட்டு.

       பாப்பாப்பாட்டு என்றதும் இது குழந்தைகளுக்கான பாடல் என்றே நாம் நினைக்கிறோம்.ஆனால் உண்மையில் பாரதி நம்மைத்தான் குழந்தையாக நினைத்துப் பாடியுள்ளார் என்பதை அதன் கருத்தை ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.இதில் நம் ஆரோக்கிய இரகசியத்தையே புதைத்து வைத்துள்ளது உணர்ந்தவர்களுக்கே புரியும்.

        கவிஞர்கள் கவிதை எழுதும்போது தங்களையோ பிறரையோ ஏதேனும் ஒரு உறவு முறையில் விழிப்பது வழக்கம்.அந்த வகையில் பாரதியாரும் நம்மை பாப்பாவாக பாவித்து கூறியுள்ளார்.

         முதலில் ஓடி விளையாடு ஓய்ந்து இருக்கலாகாது என்கிறார்.இதற்கு எப்பொழுதும் சுறுசுறுப்பாக இரு சோர்வு கொள்ளாதே செயலாற்று என்று பொருள்.இது கீதையில் கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் அடிப்படையாகும். கீதை அத்யாயம் 3-22,23ம் ஸ்லோகத்தில் அர்ஜுனா மூவுலகிலும் நான் செய்ய வேண்டிய காரியங்கள் இல்லை என்றாலும் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபாடாவிட்டால் மணிதர்கள் என் வழியையே யாண்டும் பின் பற்றுவர் என்பதை சுருக்கியுள்ளார்.

           ஓய்ந்திருத்தல் என்பதற்கும் இளைப்பாறுதல் என்பதற்கும் வித்தியாசம் உண்டு.ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்றால் அவர் மீண்டும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யப்போவதில்லை என்று பொருள். அதுவரை அவர் பணி முடிந்து சற்று இளைப்பாற வீட்டுக்கு வந்து போகிறார் என்பதே பொருள்.எனவே எக்காலமும் ஒய்வின்றி கடமையாற்றுவதே கடமை.

           கூடிவிளையாடு குழந்தையை வையாதே என்பதில் இருந்தே இது நமக்கு சொன்னது என்பது தெரியும்.ஊருடன் ஒத்து வாழ் என்பது பழமொழி. குழந்தைகளை திட்டுவதனால் அவற்றின் பிஞ்சு மனதில் தாழ்வு மனப்பான்மை வெறுப்பை உண்டாக்காதே என்று மன ஆரோக்கிய இரகசியத்தை புதைத்து உள்ளார்.

            காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.இரவு தூங்கி எழும்போது உறுப்புகள் எல்லாம் ஓய்வாக இருக்கும். இந்நேரத்தில் உடலுக்கு வேலை கொடுக்காமல் தியானம் பூஜை யோகா என்று உடலை வருத்தாத செயலில் ஈடுபட்டால் உடல் களைப்பில்லாமல் இருக்கும். அதனால் இரத்த அழுத்தம்(BP)மன அழுத்தம்(Tension)உண்டாகாது. வாய் திறந்து மூச்சு இழுத்து பாடுவது பிராணாயாம பயிற்சியாகும். மாறாக காலை நடை பயிற்சி உடற்பயிற்சி என்று கஷ்டப்படுத்தினால் ஜீரனக்கோளாறுகளும், சர்க்கரை இழப்பால் சோர்வும் உண்டாகி பணி நேரத்தில் தூக்கமும் அதனை கட்டுப்படுத்தும் போது இரத்த அழுத்தமும் மன இறுக்கமும் உண்டாகின்றன.

        மாலைமுழுதும் விளையாட்டு. மாலையில் உடற்பயிற்சி நடைப்பயிற்சி விளையாட்டு என்று செலவிடும்போது காலை மதியம் உண்ட உணவில் உள்ள சர்க்கரை கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடலில் தேவையான இடங்களில் சேர்ந்து விடுகிறது.பயிற்சிகளால் உடல் களைப்படைவதால் இரவு நல்ல தூக்கம் கிடைக்கிறது.ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

           தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்.நாம் இளமையில் எதை பின்பற்றுகிறோமோ அதுவே முதுமையிலும் தொடரும்.எனவே நீ இளமையிலேயே இத்தகைய பழக்கத்தை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ் என்பதையே பாப்பாபாட்டு மூலம் நமக்கு கூறுகிறார் பாரதியார்.

             இந்தப்பாட்டுக்கே நாம் விளக்கம் தர வேண்டியுள்ளது என்றால் நாம் தமிழில் எவ்வளவு பின் தங்கி உள்ளோம் என்பதை சிந்தியுங்கள்.எனவேதான் செல்லத்தமிழ் மெல்லச் சாகும் என்று அன்றே கூறி சென்றுவிட்டார்.

                                    வாழ்க பாரதி!   

29 ஜூன், 2013

முன்னோர் கூறும் நல்ல பழக்கங்கள்

ஆய்வுக்கு உதவும்  நமது உணவு பழக்கங்கள்

  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிமக்கள் நாம்  என்பதை நிரூபிக்கும் வகையில் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த
உணவுபழக்கங்கள் கூட இன்று ஆராய்ச்சி செய்யும் நிலையில் உள்ளது என்றால்  நாம் எந்த அளவு உலகின் முன்னோடியாக விளங்கினோம் எனபதை சிந்தித்து  பாருங்கள்.
                  மேல்நாட்டு மோகத்தால் நாகரீக உணவு பீசா பூசா கூசா என்று நாம் போகின்ற  நிலையில் நம் முன்ளோர்கள் கடைபிடித்துவந்த கஞ்சி பழைய சோற்றில் உள்ள  மருத்துவ குணங்களுக்கு இவை ஈடாகுமா?

  காலை நீராகாரம் பருகி,பழையசோறு சாப்பிடுவதால் உடல் எப்போதும்
குளிர்ச்சியாகவே இருக்கும்.இதனால் கடும் வெயில் என்றாலும் கூட நீர்
வியர்வையாக வந்து தோல்களில் நின்று உஷ்ணம் தாக்கா வண்ணம்
பாதுகாக்கிறது.குளிர்சாதன பெட்டியிலிருந்த நீரை வெளியே எடுத்தவுடன் நீர்
திவலைகள் காணப்படுவதுபோல வியர்வை செயல்படுகிறது.
   நிலத்தைவிட நீர் உஷ்ணமாகும் காலம் அதிகம் என்பது விஞ்ஞான உண்மை.
நிலமாகிய சரீரத்தை நீரான வியர்வை வந்து வரட்சியடையாமல் காக்கிறது.
  ஆனால் இன்று நாம் குளிர்சாதன கருவியை(A.C)பயன்படுத்துவதால் வியர்வை  வெளியேறாவண்ணம் தடை செய்யப்பட்டு உடலில் தங்கி பிணிகளுக்கு காரணிகளாக  அமைகின்றன.
  இன்று நாம் காலை சிற்றுண்டி என்று எடுத்துக் கொள்ளும் உணவுகள் சீரணமாக  அதிக நீர் தேவைப்படுகிறது.நீங்கள் சாப்பிடும் 4 இட்லிகள் சீரணமாக 1லி  தண்ணீர் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.எனில் ஏனைய உணவுகளுக்கு  எவ்வளவு நீர் தேவைப்படும் என்று கணக்கிட்டு பாருங்கள்.
  காலை பணிகளின் காரணமாக நாம் இந்த உணவுகள் சீரணமாக போதுமான நீர்  எடுத்துக் கொள்வதில்லை யாதலால் உடல் வரட்சியாகி உஷ்ணமதிகரித்து பாதி  பிணிகளுக்கு காரணமாகிவிடுகிறது.
  கோதுமையின் கடைசிக்கழிவே மைதா என்றும்.அதனை தயாரிக்க பயன்படுத்தும் மூலபொருட்களால் பாதிப்புகள் உண்டாகின்றன என்றும், எனவே மைதாவை தடை செய்ய வேண்டும் என்றும் குரல்கள் இன்று நாட்டில் ஒலிக்கத் துவங்கி உள்ளன.எனில்  இதனால் தயாரிக்கப்படும் பீசா பிஸ்கட் புரோட்டா போன்ற உணவுகள் எத்தனை கேடு உண்டாக்கும் என்பதனை சிந்தித்து பாருங்கள்.
 தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவனுக்கொரு குணம் உண்டு என்று நம்  முன்னோர்கள் நம் மண்ணுக்கும் உடலுக்கும் ஏற்ற உணவுகளை பயிர் செய்தும்  உண்டும் வாழ்ந்திருக்கிறார்கள்.நாகரீக காலத்தில் நாம் அவற்றை இழந்தாலும்  மீண்டும் புதுப்பிப்போம்
  ஆராய்ச்சி செய்யும் அளவு நாம் கொண்டிருந்த உணவுகள்,நடைமுறைகளை
பின்பற்றி மீண்டும் நம் பெருமையை நிலைநாட்டுவோம்.
   வருங்காலம் பயன்படுத்த அழிந்துவரும் நம்உணவு செயல்முறைகளை
கொடுத்து(வெளியிட்டு)ச் செல்வோம்

இன்று காடைக்கண்ணி, குதிரைவாலி, சாமை, வரகு போன்ற பயிர்கள்  காணாமல் போய்விட்டன. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எது நலம் தரும்   நடைபயிற்சி

நொறுங்கத்தின்றால் நூறு வயது என்பார்கள். அதாவது உணவு நன்கு
சீரணமாகும்வண்ணம் நிதானமாக மென்று உண்டால் அதிககாலம் ஆரோக்கியமாய்  வாழலாம் என்பது பொருள்.
   ஆனால் உண்பதற்க்கு கூட நேரமில்லாமல் நின்றுகொண்டே துரித உணவு(FAST FOOD)அதிவேகஉணவு(SUPERFASTFOOD) என்று போகும் இக்காலத்தில்    பலரும் அதிகாலையிலேயே புகைவண்டி,பூங்கா,சாலையோர
நடைபாதைகளிலோ,மைதானங்களிலோ,டிராக்சூட்,கேன்வாஸ் ஷு சகிதம் நடை பயிற்சி  செய்வதை(WALKING) நாம் பார்க்கலாம்.அவர்களில் ஒருவராகக்கூட நாமிருக்கலாம்.    மருத்துவர்களும் எந்த ஒரு பிணிக்கும் நடை பயிற்ச்சி மேற்கொள்ளச்  சொல்கிறார்கள். இதனால் காலையில் சுத்தமான ஓசோன்வாயு கிடைக்கிறது,உடலில் தேங்கும் கொழுப்பு (CHLOSTRAL) சத்துக்கள் (CALORIES) கரைந்து ஆரோக்கியம்
கிடைக்கிறது என்பார்கள். இது எநதளவு நலம் பயக்கிறது? இப்படி நலம் தரும்
நடைபயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்?

          காலை வெறும் வயிற்றில் நடப்பதனால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு பித்தநீர் அதிகம் சுரந்து,இரவு உணவை சீரணித்து ஓய்வு நிலையில் இருக்கும் உணவு  நாளங்களை அழிக்கிறது. அதிகம் நடப்பதால் நரம்பு,தசைகள் முறுக்கேறி அடிவயிற்றில் வலி,தசை முறுக்கல், நரம்பு முறுக்கல் உண்டாகிறது.  நடைபயிற்சி முடிந்தபின்னர் இயல்புநிலை பயிற்சி (RELEASING
EXCERCISE) செய்யாததால் தினமும் முறுக்கேறும் தசை நரம்புகள் நாளடைவில்  பலமிழந்து உடைந்து விடுகின்றன.
   பாதணிகள் அணிந்து கொள்வதால் பாதங்களில் சமமான அழுத்தமே
கிடைக்கிறது.உச்சந்தலையில் துவங்கி பாதங்களில் முடியும் நரம்புகளுக்கு
போதுமான அழுத்தம்(ACCU PUNCTURE, ACCU PRESSURE) கிடைக்காமல் ,முழுபயனும்  கிடைப்பதில்லை.

  உணவு அனைத்தும் சீரணிக்கப்பட்ட நிலையில் செய்வதால் சர்க்கரை, ஊட்டச்சத்து(GLUCOSE,CALORIE) இழப்பு ஏற்பட்டு குறைந்த இரத்த
அழுத்தம் (LOW BP) ஏற்படுகிறது.இந்நிலையில் சிற்றுண்டி மேற்கொண்டு
பணிக்குச் செல்லும்போது இழப்பின் காரணமாக சோர்ந்திருந்தவை,உணவை சீரணிக்க  முடியாமல் சோர்வும் அசதியும் உண்டாக்குகின்றன.இதனால் பணிநாட்டமின்மை  தூக்கம் உண்டாகிறது. சிமெண்ட்,டைல்ஸ் களில் நடப்பதனால் உஷ்ணம்,குளிர்ச்சி உடலை தாக்குகின்றன.
             இங்கு வள்ளல் பெருமான் மாலை வெயில் உடலில்படும்படி உலாவுதல் நல்லது  என்றதையும்,பாரதியார் மாலை முழுவதும் விளையாட்டு என்பதையும் கருத்தில்  கொள்ள வேண்டும்.

   ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர் வாக்கு. ஆலயம் செல்வதால்  என்ன கிடைக்கப்போகிறது என்பது நாத்திக வாதம். ஆலயம் செல்லுமுன்  அதிகாலையிலேயே குளித்து விடுவதால் உடல் நன்கு குளிர்ந்து விடுகிறது.பின்  ஆலயம் சுற்றும்போது உண்டாகும் உஷ்ணம் குளிர்ச்சியை போக்கி புத்துணர்வு  தருகிறது.
   பாதணி இன்றி கல்தரைகளில் வலம் வருவதால் பாத நரம்புகள்
அழுத்தப்பட்டு(ACCU PUNBTURE,PRESSURE)நரம்புமண்டலம் தூண்டப்பட்டு பிணி
நீங்குகிறது.     தோப்புக்கரணமிட்டும்,கீழேவிழுந்தும், குனிந்தும்,கைகளை தூக்கியும் ,சம்மணமிட்டு அமரும்போதும் முறுக்கேறிய தசை நரம்புகள் இயல்புநிலைக்குத் திரும்புகின்றன.இது இயல்புநிலை திரும்பும்(RELEASING
EXCERCISE) பயிற்சியாகிறது.    தீர்த்தம்,பிரசாதம் அருந்துவதால் இலகுவான உணவால் வயிறு நிதானமாக சீரண  வேலையை துலக்குகிறது.
   ஓங்கி உயர்ந்த மதில்களுக்கிடையில் நடப்பதால் சுற்றுப்பற மாசுபட்ட
காற்று தடை செய்யப்பட்டு சுத்தமான காற்று கிடைக்கிறது.இதனால் சுவாசம்
சீராகி உடல் ஆரோக்கியம் கூடுகிறது.மனமும் அமைதியடைவதால் பணிகளை சிறப்பாக  செய்யமுடிகிறது.
   எனவே,ஆரோக்கியம் தரும் நடைபயிற்ச்சி எனபது ஆலயத்தில்தான்
உள்ளது. எனவேதான் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும், கோவில் இல்லா ஊர் பாழ் என்றும் கூறினர் பெரியோர். 
          கோவில் பிரகாரங்களை சுற்றும்போது அதுவும் இறை சிந்தனையோடு சுற்றும்போது உடலுக்கும் மனதிற்கும் நலம் தருவதோடு புண்ணியம் கிடைக்கிறது. கோவில்களில் கிடைக்கும் நலம் தரும் அதிர்வுகள் தெருவைச் சுற்றினால் கிடைப்பதில்லை.

இப்படி ஆரோக்கியத்திற்க்கு அடிகோலும் ஆலயம் காத்து, தொழுது நலமோடும்  வளமோடும் வாழ்வோம்!              

          வாரம் ஒருமுறை எண்ணெய்க்குளியல்,  மனைப் பலகையில் அமர்ந்து குளித்தல், நாசிசுத்தி,  எண்ணெய்க்குளியல் செய்த அன்று வெந்தயக் களி, தரையில் விரிப்பில் அமர்ந்து உண்ணுதல் போன்ற முன்னோர் கற்றுக்கொடுத்த பல நல்ல பழக்கங்கள் நம்மை விட்டுப் போய்விட்டதால் மருத்துவத்திற்கு ஏராளமாக செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது.  இவற்றை பின்பற்றி உடல்நலத்தைக் காத்துக்கொள்வோம்.