பக்கங்கள்

11 அக்டோபர், 2018

ஆடுதின்னாப்பாளை Aristolochia bracteolate Lam; Aristolochiaceae


                                     ஆடுதின்னாப்பாளை                                        Aristolochia bracteolate Lam;Aristolochiaceae                மாற்றுப்பெயர் ; ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம்                     பாளை, வாத்துப் பூ.                                                வளரியல்பு ;     தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி                       இலைஅமைப்பு ;   மற்றடுக்கில் வெள்ளைப் பூச்சுடைய முட்டைவடிவ சாம்பல்     கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன், ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக    இருக்கும். கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித்     தன்மையுடையது.இதன் மலர்களும் இதே நிறத்தை ஒத்து இருக்கும்.                         பூ,காய் ;    முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்                          மருத்துவ பாகம் ;   சமூலம்.                                                         குணம் ;   கிருமி நாசினி,பிரசவகாரி,முறைவியாதிரோதி,ருதுவர்தனகாரி.        தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது.
மருத்துவக் குணங்கள்:
   ஆடுதொடாப்பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி
   நீடுகருங் குஷ்டம் நிறைகரப்பான் –ஆடிடச்செய்
   யெண்பது வாய்வு மிகில்குஷ்ட முந்தீருந்
   திண்பெறுநற் றாதுவுமாய் செப்பு
                       (பதார்தகுண சிந்தாமணி)
()மலாஸயக்கிருமி,சிலந்திப்பூச்சி விஷம்,கருங்குஷ்டம்,கரப்பான்,சர்வ வாத ரோகம், கிடிப குஷ்டம் நீங்கும்,சுக்கில விருத்தி உண்டாகும்.வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
  1. இலைச் சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடிக்க, பாம்பு விஷம், சில்லறை விஷம், மலக் கிருமிகள், கருங் குட்டம், யானைத் தோல் சொறி குணமாகும்.
  2.  வேரை அரைத்து 2 வேளை 5 கிராம் வெந்நீரில் கொடுத்து கடும் பத்தியத்தில் இருக்கச் செய்ய 3 நாளில் எல்லா விதமான பாம்பு விஷமும் முறிந்து விடும். (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல் சாப்பிடச் செய்து ஒரு நாள் முழுவதும் விஷம் தீண்டியவரை தூங்கவிடக் கூடாது.)
  3. வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வலி நீங்கி சுகப் பிரசவம் ஆகும்.                                        
  4. விதைச் சூரணம் 5 கிராம் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி, சூதகத் தடை, மலக் கிருமிகள்,பிரசவ வேதனை,முறைக்காய்ச்சல் நீங்கும்.
  5. இலைச்சாறு 10மிலி காலைமாலை,குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டுவிட்டு வரும் காய்ச்சல் தீரும்.
  6. இலையை அரைத்து கொட்டைப்பாக்களவு வெள்ளாட்டுப்பாலில் கலந்து குடிக்க சகல விஷம்,புண்,பிளவை,சிரங்கு,வங்கு,கரப்பான்,குஷ்டம் தீரும்.
  7. இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு 2 வேளை சாப்பிட்டு வர தோல் வியாதிகள், குட்டம், மலக்குடல் சம்பந்தமான வியாதிகள், சிறுநீரகத் தொற்றுகள் குணமாகும்.
  8. சமூலம்,பறங்கிப் பட்டை, வெள்ளை மிளகு, பெரியா நங்கை, கீழாநெல்லி வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து 2 வேளை சாப்பிட்டு வர கருங்குட்டம், வெண்குட்டம், சிறுநீர் வழியில் புண், தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி குணமாகும்.
  9. இலைச் சாறு, துளசிச்சாறு சம அளவாக 100 மில்லியளவு எடுத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் குடிக்க சில வகையான விஷங்கள் முறியும்.
  10. இலை 100 கிராம், மிளகு 10 கிராம் அரைத்து பட்டாணியளவு மாத்திரைகளாகப் உருட்டிக் காய வைத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர மேக வாயு நீங்கும்.
  11. சமூலம், வசம்பு சம அளவாக எடுத்து இடித்து கட்டியின் மேல் வில்லையாக வைத்து அதன் அளவிற்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதன்மேல் வைத்து இப்படியாக 3 நாள் கட்ட அரையாப்புக் கட்டி கரையும்.
  12. வேர், கவிழ்தும்பை வேர், வெள்ளருகு வேர், மருக்காரைவேர் சமஅளவாக எடுத்து அரைத்து உடம்பில் பூசி முறுக்கித் துவட்ட, கருவழலை, தண்ணீர் பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் முறியும்.
  13. சமூலத்துடன் கருங்குருவை நெல் சேர்த்தவித்து அவலிடித்து,தினம் வேளைக்கு 40 கிராம்,1மண்டலம் கொடுத்துவர சொறி சிரங்கு,குஷ்டம்,வங்கு, வண்டுக்கடி, அரணைக்கடி,செய்யான்கடி,பூரான்கடி முதலியவை நீங்கும். அப்போது மிளகை பால் விட்டரைத்து ஸ்நானம் செய்வது நன்று.3 மாதம்வரை ந.எண்ணை,கடுகு போகம் நீக்கவும்.
  14. உலர்ந்த இலை 40-60கிராம்,அரை லி நீரிலிட்டு 150மிலியாகக் காய்ச்சி வடிகட்டி குடிக்க கிருமிகள் அழியும்.2-3முறை கொடுத்து பேதிக்கு கொடுக்க அழிந்த கிருமிகள் வெளியேறும்.
  15. வேர் சூரணம் 5-10 கிராம் 50மிலி கொதிக்கும் வெந்நீரில் போட்டு அரைமணி நேரம் மூடிவைத்து வடித்துக் கொடுக்க குளிர் சுரம் நீங்கும்.பிரசவ வேதனை அதிகரித்து சுகப்பிரசவம் ஆகும்.
  16. இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணை கலந்து காய்ச்சிப் பூச கருங்குஷ்டம், கரப்பான், சிரங்கு,சிலந்தி தீரும்.
  17.  வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் காணலாம்.
இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு,
இனிப்பு -நல்ல பாம்பு,
தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு,
உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு,
மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு,
கண் பஞ்சடைவது -மூஞ்செறி பாம்பு,
காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு,
புளிப்பு -வழலைப் பாம்பு,
புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு,
முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு,
நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு,
நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு,
கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு,
பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.


ஆடாதொடை Adhatodavasicanees ; Acanthaceae


                                                  ஆடாதொடை                              Adhatodavasicanees;Acanthaceae        
  ஆடாதோடைக்கும் ஐந்து மிளகுக்கும் பாடாத நாவும் பாடும்
                                       பழமொழி
மாற்றுப்பெயர்கள் ; ஆடாதோடை,ஆடு தொடா மூலி
வளரியல்பு ; ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் குறுஞ்செடி.
இலை    ; நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளும்,வெண்ணிறப் பூவும்
மருத்துவ பாகம் ; இலை,பூ,வேர்
செய்கை  ; கபஹரகாரி,கிருமிநாசினி,அங்காகர்ஷணநாசினி
மருத்துவ குணம் ; இலை கப ஆதிக்கம்,வாத தோஷம்,பற்பல சுரம்,சந்நிபாதம், வயிற்றுநோய் நீக்கும்.
வேர் ; இருமல்,அக்கினிமந்தம்,சுவேதபித்தம், கஷ்டசுவாசம்,கபரோகம் நீக்கும்.
                               
    ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்
    கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்குநாடின்
    மிகுத் தெழுந்த சன்னிபதின்மூன்றும் விலக்கு
    மகத்துநோய் போக்குமறி

()ஆடாதொடை இலை கப ஆதிக்கம்,வாத தோஷம்,பற்பல சுரம்,சந்நிபாதம்,வயிற்றுநோய் ஆகியவற்றை நீக்கும்.

காசமொடு மந்தங் கதித்தபித்தங் கொடுஞ்சு
வாசங்கழுத்துவலிமுதனோய் – கூசியே
யோடாதிராங் கொருநாளு மொண்டொடியே
யாடாதோ டைத்துருக் கஞ்சி.
 ()ஆடாதொடை வேரினாலிருமல்,அக்கினி மந்தம்,சுவேதபித்தம்,கஷ்டசுவாசம் ,களரோகம் முதலியவை போம்.
இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் ஆடாதோடை என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன.
1.   ஆடாதொடை இலை,வேர்,மிளகு சேர்த்துக் காய்ச்சி,வடித்து, தேன் கலந்து பருகக் காய்ச்சல் குணமாகும்
2.   ஆடாதொடை,கோரைக்கிழங்கு,பற்பாடகம்,விஷ்ணுக்கிரந்தி,துளசி,பேய்ப்புடல், கஞ்சாங்கோரை,சீந்தில் வகைக்கு 30கிராம்,இடித்து,1லி.நீரில் 500மிலியாகக் காய்ச்சி,வடித்து(அஷ்டமூலக்குடிநீர்)30-60மிலி,வேளைக்கு பருகிவர எவ்வித சுரமும் தீரும்
3.  சுக்கு,திப்பிலி,கிராம்பு,சிறுகாஞ்சொறிவேர்,அக்கராகாரம்,முள்ளிவேர்,கடுக்காய்தோல்ஆடாதொடை,கற்பூரவல்லி,கோஷ்டம்,சிறுதேக்கு,நிலவேம்பு,வட்டத் திருப்பி முத்தக்காசு வகைக்கு சமன்,3ல்1ன்றாய் காய்ச்சிப் பருக இருமல் சளியுடன் கூடிய சுரம் குணமாகும்
4.   பற்பாடகம்,கண்டங்கத்திரி,ஆடாதொடை,சுக்கு,விஷ்ணுக்கிரந்தி வகைக்கு 40 கிராம், சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி,25மிலி தினமிகுவேளை,4நாள் கொடுக்க நச்சுச்சுரம் தீரும்.
5.   இலைச்சாறு,தேன் சமன் கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி,கோழை மிகுந்து மூச்சுத்திணறல்,இருமல்,இரத்தம் கலந்து கோழை வருதல், குணமாகும்.                                                   அளவு; குழந்தைகள் - 5+5 துளிகள்                                                      சிறுவர்       – 10 +10 துளிகள்                                    பெரியவர்கள் - 15+15 துளிகள்
6.   இலைச்சாறு 2 தேகரண்டி எருமைப்பாலில் காலைமாலை கொடுத்து வர சீதபேதி,இரத்தப்பேதி குணமாகும்.
7.   10 இலைகளை 2ல் 1ன்றாய்க் காய்ச்சி 250மிலி,காலைமாலை தேன் கலந்து 40 நாட்கள் சாப்பிட்டுவர என்புருக்கிக்காசம்(TB), இரத்தக்காசம்,சளிச்சுரம், சீதளவலி, விலாவலி, தீரும்.
8.   வேருடன் சமன் கண்டங்கத்திரி வேர் சமன் சேர்த்துப் பொடித்து ½ - 1 கிராம் தேனில் சாப்பிட்டுவர நரம்பு இழுப்பு,சுவாசகாசம்,சன்னி, ஈளை,இருமல், சளிச்சுரம், என்புருக்கி,குடைச்சல் வலி குணமாகும்.
9.   இலையும்,சங்கன் இலையும் வகைக்கு 1பிடி ½ லி நீரில் போட்டு பாதியாய்க் காய்ச்சி காலைமாலை பருகிவரக் குட்டம்,கரப்பான், கிரந்தி,மேகப்படை, ஊறல், விக்கல்,வாந்தி,வயிற்றுவலி தீரும்.
10.  உலர்ந்த ஆடாதொடை இலைத்தூளை ஊமத்தை சுருட்டிப் புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.(அளவுக்கு அதிகமாக புகைப்பின் மயக்கம் வரலாம்)
11.  700 கிராம் தூய இலைகளை நெய் விட்டு வதக்கி,அக்கரா, சித்தரத்தை, இலவங்கம் வகைக்கு 10 கிராம்,ஏலம்4 பொடித்துப் போட்டு பொன் வறுவலாய் வறுத்து,2லி நீர் விட்டு 1லி ஆக வற்றக் காய்ச்சி வடித்ததில் 1கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதமாய்க் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் 1 கரண்டி கலந்து சாப்பிட்டுவர நீர்க்கோவை தீரும்,தினம் 3 வேளையாக நீடித்து கொடுத்துவர காசம்,என்புருக்கி,மார்ச்சளி, கப இருமல், புளூரசி, நீடித்த ஆஸ்துமா, நிமோனியா குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.
  1. திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய் கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் கலந்து குடிக்க சுவாச மண்டல உறுப்புகள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.
  2. வேர்கசாயம் கடைசி மாதத்தில் காலை மாலை சாப்பிட்டுவர சுகப்பிரசவம் ஆகும். (ஆடாதொடையிலிருந்து கிடைக்கும் காரத்தன்மையுடைய வாசிசைன் மெதர்ஜின் போன்ற மருந்துகளுக்கு இணையானது. பழங்காலத்தில் செவிலியர்கள் சுலபமாக பிரசவம் ஏற்பட பயன்படுத்தினர்)
  3. இலைகளோடு, வேர் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு இரு வேளை ஒரு வாரம் குடித்து வர மூச்சிரைப்பு நோய் குறையும்.
  4. இலைக்கசாயம் 25 மிலியுடன் சிறிது திப்பிலி சூரணம்,தேன் கலந்து தினம் 2 வேளை கொடுத்து வர இரத்தம் சுத்தியாகும்.கபம் குறையும்.கஷ்டசுவாசம் தீரும்.
  5. இலையின் ஈர்க்கு,நிலவேம்பு,சீந்தில்கொடி,பேய்ப்புடல்,வெப்பாலை அரிசி வகைக்கு 20கிராம் இடித்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 25மிலி தினம் 2-3 வேளை கொடுக்க விஷம்,குளிர்சுரம் குணமாகும்.
  6. ஈர்க்கு,திப்பிலி,சுக்கு,சித்தரத்தை,ஓமம்,கண்டங்கத்திரி வகைக்கு 10கிராம் முன் போல் தேன் சேர்த்து கொடுக்க கபசுரம் நீங்கும்.
  7. வேர்பட்டை 80கிராம்,பூ கதிர் 160கிராம்,பேரரத்தை,சித்தரத்தை, வாய்விளங்கம், சிறு தேக்கு,கோரைக்கிழங்கு,இச்சிப்பட்டை,கரிமஞ்சள்,மிளகு,கண்டங்கத்திரி வகைக்கு 10 கிராம்,தூதுவேளை உலர்ந்த இலை,காஞ்சொறிவேர் வகைக்கு 80கிராம்,அரிசித்திப்பிலி 120கிராம்,கோஷ்டம், காட்டாத்திப்பூ வகைக்கு 10கிராம் இடித்துப் பொடித்து,20கிராம் சாம்பிராணி பதங்கம்கூட்டிக் கலந்து(ஆடாதொடை சூரணம்) 5கிராம் பாலில் கலக்கி தினம் 2வேளை 10-20 நாள் கொடுத்துவர சீதள சம்பந்தத்தாலுண்டான சுவாசகாசம், இரைப்பிருமல் தீரும்.
19.  ஆடாதொடை இலைகளை நடுநரம்பு நீக்கி,10மிளகு,1பிடிதுளசி,2 வெற்றிலை சேர்த்து,சிதைத்து,4ல்1ன்றாய் காய்ச்சி,கற்கண்டு கலந்து, தினமிருவேளை பருக இருமல்,சளி,தொண்டைக்கட்டு தீரும் வறட்டு இருமல்  குணமாகும்.
20.  ஆடாதொடையை  தேன் விட்டு வதக்கி,தாளிசபத்திரி.அரிசிதிப்பிலி, அதிமதுரம் சமன்  பொடித்துப்  போட்டு,4ல்1ன்றாய்க்  காய்ச்சி,50மிலி  அருந்திவர  காசநோய், இருமல்,இரைப்பு  குணமாகும்                                                                                                                           
21.  .தூதுவேளை,ஆடாதொடை,கண்டங்கத்திரி வேர்,சித்தரத்தை நான்கையும் அரைத்து நீரிலிட்டு காய்ச்சிப் பருக,1தேகரண்டி குழந்தைகளுக்குக் கொடுக்க சளி,மூக்கடைப்பு தீரும்.                                          
22.  கண்டங்கத்திரி,ஆடாதொடை,வேர் வகைக்கு 50கிராம்,திப்பிலி 5 கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி,தினம் 4வேளை பருக கப இருமல் தீரும்                                                
23.  ஆடாதொடைஇலையை இடித்து பிட்டவித்து சாறு100மிலியில் திரிகடி திப்பிலி பொடி கலந்து உட்கொள்ள ஈளை இருமல் தீரும்.   
24.  ஆடாதோடை இலையை கசாயமாக செய்து தொடர்ந்து 4 நாட்கள் குடிக்க, சளி, காய்ச்சல் கட்டுக்குள் வரும்.
25.  ஆடாதொடைஇலை5,மிளகு10,துளசிஇலை1பிடி,வெற்றிலை2,சேர்த்திடித்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி 75மிலி,தினம்2,3வேளை சாப்பிட மூக்கழற்சி குணமாகும்
26.  ஆடாதொடைஇலை,வேர்,மிளகு  சேர்த்துக்  காய்ச்சி,வடித்து,தேன் கலந்து பருக  காய்ச்சல்   குணமாகும்
27.  பற்பாடகம், கண்டங்கத்திரி, ஆடாதொடை,சுக்கு,விஷ்ணுக்கிரந்தி வகைக்கு 40கிராம்,சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி,25மிலி தினமிருவேளை, 4 நாள் கொடுக்க நச்சுச்சுரம் தீரும்
28.  விஷ்ணுக்கிரந்தி சமூலம், ஆடாதொடைவேர், கண்டங்கத்திரிவேர், தூதுவேளை வகைக்கு 30கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி, காலை மாலை 50மிலி கொடுக்க என்புருக்கிக்காய்ச்சல் தீரும்
29.  கண்டங்கத்திரி சமூலம், ஆடாதொடை வகைக்கு30கிராம், விஷ்ணு கிரந்தி பற்பாடகம் வகைக்கு 15கிராம்,சீரகம்,சுக்கு வகைக்கு 10கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி 4-6வேளை  சாப்பிட்டு வர நிமோனியா, ப்ளு (மண்டைநீரேற்றக்காய்ச்சல்) தீரும்
30.  திரிகடுகு,திரிபலை,வெப்பாலையரிசி,கடுகுரோகிணி,ஆடாதொடைவேர், மஞ்சள், மரமஞ்சள் வகைக்கு10கிராம் இடித்து கசாயம் செய்து கொடுக்க கண்டகூச்ச சன்னி தீரும்.
31.   

ஆகாசகருடன்Corallocarpus epigaeusrattler; cucurbitaceae


                      ஆகாசகருடன்                                   Corallocarpusepigaeusrattler.;cucurbitaceae                                   
மாற்றுப்பெயர்; கொல்லங்கொவை,சாகாமூலி,கருடன்கிழங்கு.                                        வளரியல்பு            ;  கோவையினத்தைச் சேர்ந்த பெருங் கிழங்குடைய ஏறுகொடி   இலைஅமைப்பு ;                                                                                                                              பூ,காய்                      ;                                                                                                                            மருத்துவ பாகம் ;       கிழங்கு                                                                                             குணம் ;  வியதாபேதகாரி,பலகாரி.                                                                                                                                 தீர்க்கும் நோய்கள்;
   அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
  கரையாத கட்டியிவை கானார் – வரையிற்
  றிருடரெனச்செல்லும் விடஞ்சேர் பாம்புமஞ்சுங்
  கருடன் கிழங்கதனைக் கண்டு.
() கருடன் கிழங்கிற்கு அரையாப்புகட்டி,வெள்ளை,கொறுக்குமாந்தை,அற்புதவிரணம் நீங்கும்.விஷத்தையுடைய பாம்பும் இதனைக் கண்டால் நடுங்கும் என்க.
    துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி
    குட்டமரிப்பக்கி கோண்குடணோய் – கெட்டகண்ட
    மாலைபோங் கொல்லன்கோவைக் கிழங்கால் முத்தோஷ
    வேலைப்போம் பாரில் விளம்பு.
()கொல்லன்கோவைக்கிழங்கால் மகாவிஷம்,தேகவெளுப்பு,சுரம்,வாத சூலை,சிரங்கு,பெருவியாதி,நமைச்சல்,வக்கிரநேத்திரம்,குடல்வலி,கண்டமாலை,திரிதோஷம் நீங்கும் என்க.
1.   கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50மிலி நீரில் கலந்து 3 நாள் காலையில் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய்,நரி, பூனை,குரங்கு முதலிய விலங்குகளின் கடிநஞ்சு தீரும்.
2.   புளியங்கொட்டை அளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள்,நட்டுவாக்காலி நஞ்சும்,அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும்.
3.   கிழங்கை தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து 1 தேகரண்டி சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பாம்பு நஞ்சு,கீல் பிடிப்பு,மேக நோய்கள் தீரும்.
4.   5கிராம் கிழங்குப் பொடியை 100மிலி நீரில் கலந்து காய்ச்சிக் காலைமாலை குடித்துவர சீதப்பேதி தீரும்.
5.   100கிராம் கிழங்குடன் 50கிராம் வெங்காயம்,20கிராம் சீரகம் சேர்த்தரைத்துப் பற்றிட கீல்வாதம் குணமாகும்.
6.   கிழங்கு,குப்பைமேனி,அவுரி,ஆவாரை,கீழாநெல்லி இலைகளையும் சேர்த்து இடித்துச் சாறு பிழிந்து உள்ளுக்குக் கொடுத்து உடம்பிலும் துவாலையிட அஷ்டநாக விஷங்கள் போம்.
7.   கிழங்கு அரைகிலோ,வாய்விளங்கம்,வாளுலுவை அரிசி,சுக்கு,மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம் வகைக்கு 40கிராம், இடித்து,4படி நீரிலிட்டு ½ படியாக சுண்டக் காய்ச்சி, வடித்து ,1படி சிற்றாமணக்கெண்ணையில் கலந்து அடுப்பிலேற்றி, 1/2கிலோ வெங்காயம் நறுக்கிப்போட்டு சிறுதீயில் எரித்து வெங்காயம் வெந்து மிதக்கவும்,வடிகட்டி,தினம் 15-25 மிலி- தேக திடத்திற் கேற்ப கொடுத்துவர வெள்லை,வென்குட்டம், அரையாப்பு, கொறுக்கு, குட்டம், மேகரணம்,முதலியன போம்.பத்தியம் ந.எண்ணை,புளி,கடுகு நீக்கவும்.