1.காலை எழுந்தவுடன் நிதானமாக 1லி தண்ணீர் பருகுங்கள் இதற்காக 30-40 நிமிடங்கள் ஆனாலும் பரவாயில்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படா வண்ணம்.வரண்டுபோன திசுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.திசு இழப்பு குறைகிறது. 2. காலை பல்துலக்கும் போதும்,குளிக்கும்போதும் தொண்டைக்குழியை சுத்தம் செய்யுங்கள். அப்போது நாசியும் சேர்ந்து சுத்தமாகும். இதனால் தொண்டை, நாசியிலுள்ள சளி,தலையிலுள்ள நீர் இறங்கி சுவாசம் சீராகும்.தலைவலி,ஜலதோஷ தொல்லை எழா. 3.காலையில் மனதிற்க்கு பயிற்ச்சியும் மாலையில் உடலுக்கு பயிற்ச்சியும் கொடுங்கள். காலை உடலை வருத்தாமல் தியானம், மூச்சுப்பயிற்ச்சி, யோகா செய்வதால் மனம் அமைதியடைந்து படபடப்பு (டென்ஷன்) இரத்த அழுத்தம்(BP) ஏற்படுவதில்லை.வீண் சத்து இழப்பு(CALORIE LOSS) இல்லாமையால் பணிகளை செவ்வனே செய்ய முடிகிறது. மாலையில் உடலுக்கு பயிற்சியால் உணவு செரித்து,கொழுப்புகள் போன்றவை கரைந்து விடுகின்றன. 4.உணவு உண்டபின் அரைமணி நேரம் கழித்து தண்ணீர் அதிகம் பருகுங்கள். தண்ணீர் அதிகம் பருகுவதால் உணவு கரைந்து எளிதாக குடலுக்குள் செல்வதால் குடல்வாயு கலைகிறது. அதனால் அஜீரனம்,முதுகுவலி,மூட்டுவலி ஏற்படுவதில்லை 5.இரவு எளிய உணவுகளை முன்னிரவில் (8மணிக்குமுன்) எடுத் பழமும் பாலும் மட்டும் சாப்பிடுங்கள். 6.இரவு அதிகம் கண் விழிக்காதீர்கள்.கணிணி,
தொலைக்கா
பறவைகள்,விலங்குகள் கூட மாலையில் தம் இருப்பிடம் திரும்பி ஓய்வெடுக்கும்போது, நாம்மட்டும் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் இரவு விழித்து ஆரோக்கியம் கெடுப்பது ஏன் ? தண்ணீரில் உண்டான உடலுக்கு, பின்னர் தண்ணீர்காட்ட மறுப்பது ஏன்? |
சித்தர்கள் கண்டறிந்த அற்புதமான வைத்திய முறை சித்த மருத்துவம். அவற்றில் எளிமையான அஞ்சறைப்பெட்டி மருந்துகளை நம் பாட்டிமார்கள் பயன்படுத்தி நம்மை வளர்த்தனர். பக்கவிளைவுகளற்ற, பெரும் பொருட்செலவு இல்லாத இந்த முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
17 ஏப்ரல், 2013
ஆரோக்கிய வாழ்விற்க்கு சில அன்றாட பழக்கங்கள்
8 ஏப்ரல், 2013
அதிகாலை குளியல் மகத்துவம்
காலையில் படுக்கை தேனீர்அருந்துபவரா நீங்கள்? இது
உங்களுக்குத்தான்! அதிகாலையில் விழித்து எழுபவர்களை பற்றிய இலண்டன் பல்கலை
ஆய்வை கீழே படியுங்கள்.
அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் செய்யும் செயல்கள் இரட்டிப்பு பலன் தரும் என்று முன்னோர்கள் கூறி அதிகாலை எழும் பழக்கத்தை உண்டாக்கினார்கள்.
பாரதியாரும் காலை எழுந்தவுடன் படிப்பு என்கிறார். கோவில்கள்,ஆஸ்ரமங்கள், காலை 5-5.30மணிக்கு,பூஜைக்காக அழைக்கிறார்கள் வேதங்கள் படிக்கிறார்கள். காலை 3 முதல் 4 வரை தேவகுளியல், மானிடர் குளிக்கலாகாதென்றும், 4 முதல் 6 வரை மானிடக் குளியலென்றும், சூரியோதயத்திற்க்குப் பின் ராட்சச குளியல் குளிக்கலாகாதென்றும் வகுத்து அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதுவும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் நாடி நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.வியாதியஸ்தர்கள் மட்டுமே வெந்நீரில் குளிக்கலாம்.
இப்படி உடலை கெடுக்கும்-சோம்பேறியாக்கும் பழக்கம் நமக்கு தேவையா?
அதிகாலையில் விழித்தெழுங்கள்!
சுறுசுறுப்பாயிருங்கள்!!
மேலை நாட்டினரை நம் கலாச்சாரத்திற்க்கு வரும்போது நீங்கள் ஏன் அவர்களை
போல் மாறுகிறீர்கள்?
நாம் நாமாகவே இருப்போம்!
நமது கலாச்சாரம்,பண்பாடு காத்து -ஆரோக்கியமாய் வாழ்வோம்!

அதிகாலைக் குளியல் தங்கத்திற்கு சமம். தங்கத்தை சுடாக்கியபின் சில விநாடிகளில் சுடு ஆறிவிடும். அது போல் பிரம்ம முகூர்த்த குளியலில் உடல் சுடு முழுமையாக வெளியேறுகிறது. ஆறுமணிக்கு பின் ஒரு மணி நேரத்திற்குள் குளிப்பது வெள்ளிக்கு சமம். உடல் சுடு பாதிதான் வெளியேறுகிறது. ஏழுமணிக்கு பின் குளிப்பது இரும்பிற்கு சமம். இரும்பு சுடு ஆற அதிக நேரம் ஆகும் அதுபோல் உடல் சுடு முழுமையாக வெளியேறாமல் உடலிலேயே இருக்கும். குளிப்பதனால் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்காது.
மேலும் படுக்கையில் இருந்து வெறும் வயிற்றில் சூடாக
அருந்துவதால், இயல்பான நிலையிலிருக்கும் குடல் விரிவடைந்து,
பலமிழக்கின்றன.ஜீரண சுரப்பிகள் அழிந்து அஜீரணக்கோளாறுகள் உண்டாகின்றன.
இப்படி உடலை கெடுக்கும்-சோம்பேறியாக்கும் பழக்கம் நமக்கு தேவையா?
அதிகாலையில் விழித்தெழுங்கள்!
சுறுசுறுப்பாயிருங்கள்!!
மேலை நாட்டினரை நம் கலாச்சாரத்திற்க்கு வரும்போது நீங்கள் ஏன் அவர்களை
போல் மாறுகிறீர்கள்?
நாம் நாமாகவே இருப்போம்!
நமது கலாச்சாரம்,பண்பாடு காத்து -ஆரோக்கியமாய் வாழ்வோம்!
14 ஜனவரி, 2013
வாருங்கள் வரவேற்கிறோம்.
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்ற பாரதியின் பாட்டுக்கு
இலக்கணமாய், உலகில் நாகரீகம் தோன்றா காலத்திற்கு முன்பே சிந்து
சமவெளி நாகரீகம் கண்டு, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்
தோன்றிய மூத்த குடிமக்கள் நாங்கள் என்று பாரதத்தின் பெருமையை
பறைசாற்றிய நம் முன்னோர்கள், ஆன்மீகம், விஞ்ஞானம், வானவியல்
கலைகள் 64கிலும் வல்லுநராய் திகழ்ந்தார்கள்.
ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணீர் என்று ஏர்
முனையிலிருந்து போர் முனை வரை பெண்களும் பங்கு வகித்தார்கள்.
அன்னிய ஆதிக்கத்தின் கீழிருந்த கால கட்டத்தில் நம்
வீரவிளையாட்டுக்களான சிலம்பம், களரி, வாள்வித்தை போன்றவை
மறையத்துவங்கி, நம் திறமையும் ஞானமும் குன்றின. மானத்திற்கு அஞ்சிய
பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கத்துவங்கினர்.
அப்போது மறையத்துவங்கியதுதான் நம் அரிய பொக்கிஷமான சித்த
வைத்தியமும். ஏர் முனைக்குச் சென்றவர்கள் , உணவுத்தானியங்களும்,
வயல்களில் களைகளாக தோன்றும் செடிகளும் எந்த வகையான
பிணிகளுக்கு உகந்தது, எதில் என்ன உள்ளது, அதன் குணம் என்ன என்று
உள்ளங்கைக்குள் வைத்திருந்த கைமருந்துகள், நாகரீக காலத்தில்
ஏர்முனைக்குச் செல்லும் பெண்கள் இல்லாமல் பாட்டி வைத்தியமாகி, இன்று
சித்தர்கள் கண்டது என்று சித்தவைத்தியமாகி உள்ளது.
மறைந்து வரும் நம் பண்டைய கால உணவு மருத்துவ முறைகள்
முற்றிலும் மறைந்து விடாமல் இருக்க, எமக்குத் தெரிந்த மருத்துவக்
குறிப்புகளை வெளியிடுகின்றோம். நீங்களும் உங்களுக்குத் தெரிந்த
குறிப்புகளைக் கொடுத்து உதவுங்கள். படித்து உபயோகித்து பயனடையுங்கள்.
வாருங்கள் பாட்டி வைத்தியத்திற்கு
வரவேற்கிறோம் - வரவேற்போம்

16 ஜனவரி, 2012
குப்பை மேனி
தெரு ஓரங்களில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு மூலிகை. இம்மூலிகைக்கு சித்தர்கள் வைத்திருக்கும் பரிபாஷை பெயர் பூனை வணங்கி.
- இதன் இலையுடன் மஞ்சள், சிறிது உப்பு சோ்த்தரைத்து சொரி சிரங்குகளின் மேல் பூச விரைவில் குணமாகும். தோல் நோய்களும் குணமாகும்.
- இலைச்சாறு சமன் பசும்பாலுடன் கலந்து உரைகுத்தி தயிரை மாதவிலக்கான 3 நாட்களும் காலை வெறும் வயிற்றில் குடிக்க குழந்தைப் பேறு உண்டாகும்.
- இதன் இலைச்சாற்றை வலது காதில் விட இடக்கண் நோயும், இடது காதில் விட வலக்கண் நோயும் இரு காதிலும் விட இரண்டு கண்களிலும் ஏற்பட்டுள்ள கண்நோய் குணமாகும்.
- இலையை பொடி செய்து மூக்குபொடி போல் உபயோகிக்க தலைவலி நீங்கும்
- செடியை வேருடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திரகாயம் செய்து (மெல்லிய துணியில் சலித்து) ஒரு சிட்டிகை பொடியை நெய்சோ்த்து காலை மாலை 40 நாட்கள் உண்டுவர பவுத்திரம் நோய் நீங்கும்.
- வேரைபொடி செய்து கஷாயம் செய்து (ஒரு லிட்டரை அரைக்கால் லிட்டராக காய்ச்சி)குடிக்க நாக்குபூச்சி, வயிற்று கிருமிகள், நாடா புழு நீங்கும்
எழுத்தாணிப்புண்டு
இதன் இலைகள் பித்த நரையை போக்கவல்லவை. தொடர்ந்து துவையல் அல்லது கஷாயமாக உட்கொள்ள நரைமயிர் கருக்கும். இளமையைக் கொடுக்கும். முத்தெருக்கஞ்செடி என்றும் சொல்வார்கள். இலைச்சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்குக்கு தடவலாம்.இதன் வேரை 5கிராம் எடுத்து பால்விட்டரைத்து இருவேளை குடிக்க கரப்பான், பரு, சிறுகட்டிகள் நீங்கும். பெண்களுக்கு மார்பகம் வளர்ச்சி பெறும்.
கரு ஊமத்தை
ஊமத்தையில் பல வகைகள் உள்ளன. மேலே காண்பது கரு ஊமத்தை. நீலம், வெள்ளை, மஞ்சள் என பல நிறங்களில் உள்ளன. எல்லா வகை ஊமத்தைகளின் பயனும் ஒன்றாக இருந்தாலும் கரு ஊமத்தை சற்று விசேஷமானது. ஊமத்தை வெளிப்பிரயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- இதன் பிஞ்சை உமிழ்நீர் விட்டு அரைத்து தலையில் புழு வெட்டு ஏற்பட்ட இடங்களில் தடவ புழுவெட்டு நீங்கி முடி முளைக்கும்
- இதன் இலைச்சாற்றுடன் சமன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தைலமாக்கி ஆறாத புண்கள், ரணங்கள் மேல் தடவி வர விரைவில் ஆறும்.
- இதன் இலையை உலர்த்தி சுருட்டி புகைபிடிக்க ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சு திணறல் தற்காலிகமாக நீங்கும். தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.
- இலையை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்ட மூட்டு வலி, வாதவலிகள் நீங்கும்.
- கரு ஊமத்தை சாறு பாதரசத்தை கொண்டு ரசமணி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பெருந்தும்பை
பெருந்தும்பை என்னும் இந்த மூலிகை குழந்தைகளின் மாந்தம் எனப்படும் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும். அல்சர் நோய்க்கும் நல்ல மருந்து. இதனைச் சாறு எடுத்து குடிக்க வேண்டும். இதற்கு ஜோதிபத்ரம் என்ற பெயரும் உண்டு. இதன் இலைகளை பச்சையாக சுருட்டி விளக்கிற்கு திரியாக பயன்படுத்தலாம். ரத்தக் கழிச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் பிழைக்காது என்று கைவிடப்பட்ட ஒரு நாய்க்குட்டிக்கு இந்த மூலிகைச் சாற்றை ஒரு வேளை கொடுத்ததிலேயே குணமாகி விட்டது. இதன் வேறு பெயர்கள் மற்றும் பயன்கள் அறிந்தவர்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)