பக்கங்கள்

29 அக்டோபர், 2016

உடல்பலம்,உடல்மெலிவு.




                                                                          
  1. அமுக்கராகிழங்குசாறு, பனங்கற்கண்டு,தேன்,திப்பிலி கலந்து 100மிலி, தினம்2 வேளை பருகிவர உடல் பலம் அதிகரிக்கும்.                                                                                            
  2. ஆவாரைபூ,இலை,பட்டை,காய்,வேர் சமன் பொடித்து10கிராம்,தினம்3வேளை, வெந்நீரில் கொள்ள உடல் பலம் பெறும்.பிரமேகம்,மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல்மெலிவு, பலக்குறைவு தீரும்.                                                                                                                                     
  3. இஞ்சியை தோல்நீக்கி,சிறுதுண்டுகளாக்கி,தேனில்48நாள் ஊறவைத்து, தினம் காலையில் சிறிது சாப்பிட்டுவர உடல் பலம் பெறும்.நரை,திரை,மூப்பு அணுகாது.                                                   
  4. தண்ணீர்விட்டான்கிழங்கு மேல்தோல் நீக்கி,காயவைத்துப் பொடித்து,2கிராம், பசுநெய்யில் கலந்து,தினம் 2வேளை சாப்பிட்டுவர உடல் பலம் பெறும்                                  
  5. கள்ளி மலையானை,மிளகுசீரகம் சேர்த்து கீரை செய்து சாப்பிட்டுவர உடல் தேறும்                                                      
  6. கல்யாணபூசனி காய்துருவல் 5கிலோ,அவல்1படி, மிளகுத்தூள்30கிராம், ப.மிளகாய்1கை, பெருங்காயம்15கிராம் கலந்து வேகவைத்து கொட்டைபாக்களவு உருட்டி காய வைத்து வற்றலாக்கி, ந.எண்ணெயில் பொரித்து வேளைக்கு 4உருண்டை சாப்பிட்டுவர இளைத்த உடல் பருக்கும்
  7. கசகசா,வால்மிளகு,பாதாம்பருப்பு,கற்கண்டு வகைக்கு சமன் பொடித்து பசும்பால்.தேன், நெய் சேர்த்து லேகியம் செய்து அரைதேக்கரண்டி இரவில் பாலுடன்  கொள்ள உடல் பலம் பெறும்
  8. நாயுருவி வேர்தூள் 0.5-1கிராம் வெந்நீரில் சாப்பிட்டுவர உடல்பலம் பெறும்
  9. கோரைக்கிழங்குசூரணம் 1-2கிராம் தினம் 2வேளை பாலில் உண்டுவர உடல் பருக்கும்
  10. தேற்றான்கொட்டை சூரணம்1கிராம் தினம்2வேளை பாலில் கலந்து பருக நீர்சுருக்கு, நீர்கட்டு, வெள்ளை,மூலம் தீரும்.உடல் பலம் பெறும்.
  11. நஞ்சறுப்பான் இலைசூரணம் 0.5 – 1 கிராம் உண்டுவர உடல் வலுவாகும்
  12. சிறுகீரையை உணவுடன் உண்டுவர உடல் பலம் பெறும்
  13. சந்தனத்தைசீவி குடிநீர் செய்து பருகிவர பருத்த உடல் இளைக்கும்.நீர்கட்டு,நீர்எரிச்சல்  தீரும்.
  14. அன்னாசி பழத்துடன் தேன் கலந்து உண்டுவர உடல்வலிவு, அழகு தரும்
  15. கல்யாணபூசணிக்காயை வேகவைத்து, அரைத்து பால்,தேன்,நெய் கலந்து லேகியம் செய்து 5-10கிராம் தினம் 2வேளை உண்டுவர உடல் பருக்கும்.உடற்சூடு நீங்கும்
  16. மிளகரனை வேர்பட்டை 20கிராம் சிதைத்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி தினம்2வேளை 125மிலி பருகிவர கபம்,குளிர்சுரம் தீரும்.தேகபலம்,பசித்தீவனம் உண்டாகும்.
  17. அமுக்கராகிழங்கை பாலில் வேகவைத்து பொடித்து சமன் மூங்கிலுப்பை பொடித்து சேர்த்து அரைதேகரண்டி தினம் 2வேளை பாலில் சாப்பிட்டுவர மெலிந்த உடல் பருக்கும்.
  18. அத்தி, ஆலம், அரசு, விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலை உரமாக்கும்.
  19. முளை கட்டிய பச்சை பயறை லேசாக அவித்து சாப்பிட்டு வர இளைத்த உடல் தேறும்.
  20. பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வர உடல் பலம் பெறும்.
  21. சோற்றுக் கற்றாழை மடலை உள்ளிருக்கும் சதைப் பகுதியை நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளைத்த உடல் தேறும்.
  22. தூதுவளை பொடியை தேனில் 1 தேகரண்டி காலை வேளையில் சாப்பிட்டு வர நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும்.
  23. பேரிச்சம் பழம், தேன் கற்கண்டு சேர்த்து லேகியப்பதமாகச் செய்து தினம் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.
  24. முருங்கை இலை ஈர்க்குகளை சிறிதாக நறுக்கி சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து ரசம் செய்து அருந்தி வர கை கால் உடல் அசதி நீங்கும்.உடல் பலம் பெறும்.
  25. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
  26. காரட் மற்றும் தக்காளிச் சாறுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வலிமை பெரும்.
  27. பிரண்டை உப்பு 2-3கிராம் வெண்ணையில் சாப்பிட்டுவர உடல்பருமன் குறையும். ஊளைசதை கரையும்
  28. பொண்ணாங்கானியுடன் பருப்பு,மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட உடல் இளைக்கும்
  29. பப்பாளிக்காயை கூட்டு/சாம்பார் செய்து சாப்பிட உடல் இளைக்கும்         
  30. கேரட்டை அரைத்து 400மிலி மோரில் கலந்து பருகிவர உடல் இளைக்கும்
  31. இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு தம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலை வெறும் வயிற்றில் குடிக்க, இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
  32. கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை தேகரண்டி நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடை சீராகும்.
  33. சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை தேகரண்டி தேனில் உண்ண உடல் எடை குறையும்.
  34. பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை தேகரண்டி தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
  35. எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு தம்ளர் நீரில் கலந்து பருக, இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையை குறைக்கும்.
  36. தினம் காலையில் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து, அரை தேகரண்டி தேன் கலந்து சாப்பிட எடை குறையும்.
  37. வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வர கை கால் எரிச்சல் குணமாகும்.
  38. சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி மெழுகு போல் அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்
  39. ஆள்காட்டி விரல் பருமனில் இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவி நசுக்கி, முக்கால் குவளை தண்ணீரில் கொதிக்க விட்டு வடிகட்டி அரைக் குவளை காய்ச்சிய பால் கலந்து தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்துப் பருக நுரையீரல் சுத்தமாகும். சளி, வாயுத் தொல்லை நீங்கும்..தேவையில்லாத கொழுப்பு பொருள் கரையும்.அதிக எடை படிப்படியாக குறையும்.                                                                  
  40. இலந்தை இலைகளை சுத்தம் செய்து அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி அருந்திவர உடல் மெலியும்
  41. 100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.
  42. நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர எடை குறையும்.
  43. புடலங்காய் சமைத்து உண்ண தேவையில்லாத உடல் பருமன் குறையும்
  44. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
  45. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், கலந்து 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துவர உடல் எடை குறையும்.
  46. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வர (3-4 மாதங்களுக்கு) உடல் எடை குறையும்.
  47. தினம் காலையில் 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வர 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
  48. கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு தேக்கரண்டி காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
  49. 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.
  50. இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைத்து காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வர 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்
  51. அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு தம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிட்டு .இரவில் வைத்திருந்து காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட(பத்து நாட்கள் தொடர்ந்து) தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
  52. கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரைதேகரண்டி நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
  53. சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரைதேகரண்டி தேனில் உண்ண உடல் எடை குறையும்.
  54. பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரைதேகரண்டி தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்
  55. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினம் காலை குடித்து வர கொழுப்பு குறையும்.
  56. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடிக்க எடை குறையும்.
  57. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
  58. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடிக்க உடல் பருமன் குறையும்.
  59. பாதாம் பவுடரை சிறிது தேன் கலந்து காலை சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
  60. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
  61. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.
  62. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.
  63. சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வர உடல் எடை குறையும்.
  64. வாழைத்தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும், உடல் அழகு பெறும்.
  65.  
நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:                                              தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:                                                           இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
s

1 கருத்து:

Vijayalakshmi சொன்னது…

இதை படியுங்கள் மேலும் பல நல்ல தகவல் உள்ளன---https://www.healthtips4.com/2021/06/weight-increase-reason-in-tamil.html