குடலுக்குள் மேகரணம் உண்டாகில் உண்டாவது அதிசாரபேதி / டியூபர்குளோசிஸ் ஆப் பவல்ஸ்(tuberculosis of pavels).
சாதம் செரியாமல் அக்கினி மீறி வாயு அதிகரித்து மூலத்தில் வாயு நின்று எந்நேரமும் பேதி விளைவிப்பது-அதிசாரம்.
குடலில் வாயு அதிகரித்து பவனவாயில் கடுப்புண்டாகி பலவிதமான கழிச்சல் அதிகரிப்பது - கிராணி
மூலக்கிராணி,சீழ்க்கிராணி,நீர்கிராணி,வாயுக்கிராணி,சூசிகாகிராணி,அஜீரணக் கிராணி என 6 வகை.
வாதஅதிசாரக்குணம்:வயிறு பொருமி பொருமி கழியும்.தொப்புளின் கீழ் நோகும். அங்கம் நொந்துவாடும்.அயரும்.மலம் கருமையாயிருக்கும்.நுரைவிழும்.காற்றுப் பரியும்.
குடலில் வாயு அதிகரித்து பவனவாயில் கடுப்புண்டாகி பலவிதமான கழிச்சல் அதிகரிப்பது - கிராணி
மூலக்கிராணி,சீழ்க்கிராணி,நீர்கிராணி,வாயுக்கிராணி,சூசிகாகிராணி,அஜீரணக் கிராணி என 6 வகை.
வாதஅதிசாரக்குணம்:வயிறு பொருமி பொருமி கழியும்.தொப்புளின் கீழ் நோகும். அங்கம் நொந்துவாடும்.அயரும்.மலம் கருமையாயிருக்கும்.நுரைவிழும்.காற்றுப் பரியும்.
பித்தஅதிசாரக்குணம்;மலம் ஒருகால் செம்மையாயும்,பசுமையாயும் இறங்கும்; ஒருகால் சீதம்,இரத்தம் விழும்;அபானங் கடுத்து நோகும்;எரியும்;அரோசிகங் காணும்; அன்னத்தைத் தள்ளும்;வாந்தி பண்ணும்;தாகம் அதிகரிக்கும்;வியர்க்கும்.
சிலேத்மஅதிசாரகுணம்;மலம் வெண்மையாய்க் கழியும்;சீதம்,நுரை விழும்; அபானங் கடுக்கும்;வயிறு பொருமும்;இசிக்கும்;அரோசிகங் காணும்;அன்னத்தை தள்ளும்; இருமல் காணும்.
அதிசாரதோஷகுணம்;இரத்தம் விழும்;பிதற்றும்;வாந்தியிருக்கும்;விக்கலெடுக்கும்; தேகம் நடுங்கும்;வயிறு பொருமும்;வியர்க்கும்;நசிக்கும்;அவயம் மிகுதியாய்க் குளிர்ந்திருக்கும்;நித்திரை,சோபம் அதிகரிக்கும்.
சுரம் அதிசாரக்குணம்;சுரம் தீவிரமாய்க்காயும்;தாகமிகும்;பலவிதமாய் வயிறு கழியும்; சீதம்,இரத்தம் விழும்;அரோசிக்கும்;அன்னத்தை தள்ளும்.
அசாத்தியஅதிசாரகுணம்;ஊண்போலும்,தேன்போலும்,கரிபோலும்,தைலம்போலும், வெண்மையாயும்,மிகு நாற்றத்துடன் பலவிதமாய் கழிச்சல் காணும்;இடை வற்றும்; சுர நடுங்கும்;தேகம் வற்றும்;மயக்கங் காணும்;நினைவு தடுமாறும்; விக்கலெடுக்கும்; தொண்டை கம்மும்;கைகால் சோர்ந்து நடுங்கும்;விழி விரிந்து வெளுக்கும்;உதடு வெளுக்கும்;கைகால்,மூக்கு,நெஞ்சு,தொப்புள் குளிர்ந்திருக்கும்; அவயங்களில் நரம்பு தோன்றும். .
மூலக்கிராணிக்குணம்:கீழ்வயிறு கடுத்துளைந்து சீழ்குருதி விழும், அபானவாயு கீழ்நோக்கி உறுப்பு தள்ளும்.மலங் கழியும்,நாளுக்குநாள் உடல் வற்றும்,வயிறு நோகும்,நா வரளும்,இளைப்பு,சோப,தாபம் உண்டாகும்.
வாதமூலக்கிராணிகுணம்;மலங் கழியும்;சீதம்,இரத்தம் விழும்;தொப்புளில் சுருக்கென்று வலிக்கும்.
பித்தமூலகிராணிகுணம்;மலஞ் சிறுத்து கழியும்;பலவிதமாய் நாறும்.
சிலேத்மமூலகிராணிகுணம்;உக்கிரமாயும்,வெண்மலமாயும் கழியும்,காற்று பரியும்.
வாயுகிராணிகுணம்:உண்ட
அசனம் செமியாது வயிறு நோகும் பொருமும் இரைந்து கழியும் புளியேப்பம் விடும் இருமும்
வாயுபரியும் நாட்சென்றால் புறந்தாள் அரைந்து வற்றும் அன்னஞ்செல்லாது உடல் வரண்டு வற்றி
வரும் நாவரளும் தாகமிகும் கனவு காணும் வெருவும்.
சங்கிராணிக்குணம்:வயிறு ஊறும்,சீழ்போலும்,சீதம்போலும், நெய்போலும், வெந்நீர் போலும், புலால் கழுவின தண்ணீர் போலும் பலவிதமாய் கழியும் அபானங்
கடுக்கும்
இரத்தகிராணிகுணம்:அடிவயிறு வலிக்கும்நெஞ்செரியும்,ஏப்பம் பரியும்தாகிக்கும் சலமாயும் இரத்தமாயும் தண்ணீராயும்
கழியும்,உண்டி, அசனஞ் செமியாது அபானங் கடுக்கும்,உடல் நடுக்கும்,கால்கை ஓயும்
வயிற்றுக் கடுப்பின் குணம்:முந்தி மலங்கழிந்து அடங்கும் வயிறு உளையும் அன்னஞ்செல்லாது
அகம் மெலிந்து உலரும்
1.
ஓமம்,மிளகு,வெல்லம்
வகைக்கு சமன் பொடித்து, தினமிருவேளை அரை தேகரண்டி சாப்பிட வயிற்றுகடுப்பு,
கழிச்சல்தீரும்
2.
ஓமத்தை நீர்விட்டரைத்து ஓமம்,மிளகு,வெல்லம் வகைக்கு சமன் பொடித்து, தினமிருவேளை அரைதேகரண்டி
சாப்பிட வயிற்றுகடுப்பு, கழிச்சல்தீரும்.
வயிற்றின்
மீது பற்றிட வயிற்றுவலி நீங்கும்
3.
சீந்தில் சர்க்கரை 1கிராம்
சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும். கல்லீரல்,மண்ணீரல் பலப்படும்
4.
ஓமதீநீர்30மிலி அல்லது ஓமத்தைலம் 3துளிகுழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் போக்கு, செரியாமை,
சீதக்கழிச்சல் தீரும்
5.
திருநீற்றுப்பச்சைவிதை 1தேகரண்டி,
3மணிநேரம் ஊறவைத்துப் பருக வயிற்றுக் கடுப்பு, இரத்தக்கழிச்சல் குணமாகும்
6.
கடுக்காய் தூள் அரை தேகரண்டி, தினமிரு
வேளை மோரில் கொள்ள வயிற்றுப் போக்கு தீரும்
7.
கல்யாணமுருங்கை இலைச்சாறு சமன் வி.எண்ணை கலந்து
தினமிருவேளை பருக சீதபேதி குணமாகும்
8.
குடசப்பாலைவிதை அல்லது பட்டை 0.500-1 கிராம் நீரிலிட்டுக் காய்ச்சி தினமிரு வேளை பருக சீதக்கழிச்சல் குணமாகும்
9.
குடசப்பாலை வேர்பட்டை கஷாயம் தினமிருவேளை 100மிலி
பருக வயிற்றுப் போக்கு குணமாகும்
10.
கொத்தமல்லிவிதை 2தேகரண்டி சிதைத்து. 3ல்1ன்றாய்காய்ச்சி,1தேகரண்டி சர்க்கரை
சேர்த்து, 200மிலி தினமிரு வேளை பருக இரத்தக்கழிச்சல்,
வயிற்றுப் போக்கு, வயிற்று வலி தீரும்
11.
அரை தேகரண்டி தேனில்,20சுற்று
சாதிக்காயை இழைத்து,குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப்போக்கு,
சீதபேதி குணமாகும்
12.
சாதிக்காய்பொடி அரைகிராம் பாலில் கலந்து தினம் 3வேளை கொள்ள
பெரியவர்களுக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாகும்
13.
நாவல்கொழுந்திலைச்சாறு 1தேகரண்டி
தினமிருவேளை கொள்ள பேதி கட்டுப்படும்
14.
மாதுளம்பிஞ்சு அல்லது கொழுந்து அரைத்து, நெல்லிக்காயளவு,
தினம் 3வேளை கொள்ள வயிற்றுப்போக்கு,பேதி தீரும்
15.
வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில்
3முறை உரைத்து,தொப்புளை சுற்றித் தடவ,குழந்தைகளுக்கு வயிற்றுவலி,வயிற்றுப்போக்கு தீரும்
16.
வசம்பை சுட்டுகரியாக்கி 100மிகி,
1பாலடை தாய்ப்பாலில் குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு தீரும்
17.
10கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து,அரை தேகரண்டி பெருஞ்சீரகம்,
சிறிது உப்பு சேர்த்து,மோரில் சாப்பிட
வயிற்றுப்போக்கு கட்டுப்படும்
18.
1தேகரண்டி இஞ்சிச்சாறுடன் சிறிது தேன்கலந்து தினம்3வேளை
சாப்பிட வயிற்று வலி, வயிற்றுபாரம் குணமாகும்
19.
சீரகத்தை உலர்த்திப் பொடித்து1கிராம்
தேன் அல்லது பாலில் தினமிரு வேளை பருக கழிச்சல் கட்டுப்படும்
20.
திரிகடுகுசூரணம் அரைதேகரண்டி தேனில் கலந்து தினம்3வேளை கொள்ள
வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் குணமாகும்
21.
புதினாவை துவையல்செய்து சாப்பிட வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி,
செரியாமை தீரும்
22.
புதினாஎண்ணை 2மிலி வெந்நீரில் கொடுக்க
வயிற்றுவலி,அஜீரணம் குணமாகும்
23.
அரைகிராம் பொரித்த பெருங்காயத்தை சிறிது பனை வெல்லத்துடன்
சேர்த்து சாப்பிட வயிற்றுவலி, வயிற்றுபொருமல் குணமாகும்
24.
உத்தாமணி இலை3, சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி, 25மிலியுடன்,
வசம்பை சுட்டகரி 2அரிசி எடை சேர்த்து, 5மிலிவீதம், தினமிருவேளை குழந்தைகளுக்கு கொடுக்கமாந்தம்,
செரியாமை தீரும்
25.
5
நுணா இலைகளை சிதைத்து,காய்ச்சி,குடிநீர்செய்து,தினமிருவேளை,20மிலி
கொடுக்க மாந்தம்,கழிச்சல் தீரும்
26.
பொடுதலை இலைகளை,நெய்யில் வதக்கி,மிளகு,சீரகம்,உப்பு சேர்த்துச்
சாப்பிட சீதபேதி குணமாகும்
27.
கைப்பிடி பொடுதலை இலைகளை வதக்கி,10கிராம்
வறுத்த ஓமத்துடன் சேர்த்தரைத்து, 4ல்1ன்றாய்காய்ச்சி,
2பாலடை அளவு, 3மணி நேரத்திற்கொரு முறை கொடுக்க
குழந்தைகளுக்கு கழிச்சல் குணமாகும்
28.
2தேகரண்டி கசகசாவை பாலிலூறவைத்தரைத்துக் கொடுக்க குழந்தைகளுக்கான சீதபேதி கட்டுப்படும்
29.
கறிவேப்பிலையை துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து
சாப்பிட குமட்டல்,
வாந்தி, சீதபேதி குணமாகும்
30.
கோவைஇலைச்சாறு 50மிலி தினமிருவேளை பருகிவர
சீதபேதி குணமாகும்
31.
பேராமுட்டிவேர் 20கிராம் சிதைத்து 10ல்1ன்றாய் காய்ச்சி,சிறிது தேன்
சேர்த்து 50மிலி, தினமிருவேளை பருகி வரகாய்ச்சல்,
மிகுதாகம், மிகுவியர்வை, சீதபேதி கட்டுப்படும்
32.
வெண்தாமரைசமூலம் சர்பத் செய்து சாப்பிட இரத்தமூலம், சீதபேதி,
ஈரல் நோய்கள் குணமாகும். இருமல் கட்டுப்படும்
33.
அம்மான்பச்சரிசிஇலைகளை அரைத்து எலுமிச்சையளவு 200மிலி
பாலில் கலந்து காலையில் குடிக்க இரத்தக்கழிச்சல் குணமாகும்
34.
2கிராம் பற்பாடகத்தை அரைத்து 200மிலி மோரில் கலந்து,
தினமிருவேளை குழந்தைகளுக்குக் கொடுக்க சுரத்துடன்கூடியபேதி குணமாகும்
35.
வசம்பை சுட்டசாம்பல் 1சிட்டிகை,5-10மிலி தேனில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நீங்கும்
36.
நன்கு கனிந்த வில்வபழத்தை நீர்விட்டுப் பிசைந்து
வடிகட்டி சமஅளவு சர்க்கரை சேர்த்து,தேன்பதமாய் காய்ச்சி 30மிலி சாப்பிட சீதபேதி குணமாகும்
37.
சிறிது சுட்ட சுக்கு, பொரித்த
பெருங்காயம், பொரித்த ஓமம் எடுத்து 3ல்1ன்றாய் காய்ச்சி, 15மிலி தினமிருவேளை கொடுக்க வயிற்றுப்போக்கு
குணமாகும்
38.
உத்தாமணிச்சாறு 10துளி சமன் தேன்கலந்து நாவில்
தடவ மாந்தபேதி குணமாகும்
39.
பொரித்த பெருங்காயம்100மிகி,1தேகரண்டி ஓமத்தீநீரில் கொடுக்க மாந்தபேதி குணமாகும்
40.
தயிர்சுண்டிச்சூரணம்5-10கிராம்,
200மிலி மோரில்கலந்து, தினமிருவேளை கொள்ள வயிற்றுப்போக்கு,
காலரா கட்டுப்படும்
41.
நத்தைபற்பம்200மிகி,5-10துளி எலுமிச்சைசாறு அல்லது மோரில் கலந்து கொடுக்க சீதக்கழிச்சல் குணமாகும்
42.
ஆமையோட்டுப்பற்பம்500மிகி,50மிலிவெந்நீரில்கலந்து தினம்3வேளை கொடுக்க மாந்தபேதி குணமாகும்
43.
சுண்டைவற்றல்,நெல்லிவற்றல்,சுக்கு,வெந்தயம்,ஓமம்,மாதுளைஓடு,மாம்பருப்பு, கறிவேப்பிலை,சீரகம் வகைக்கு சமனெடுத்து,வறுத்து,பொடித்து,2சிட்டிகை,200மிலி மோரில்
தினமிருவேளை கொள்ள பேதி கட்டுப்படும்
44.
சாதிக்காயை சுட்டுப்பொடித்து,தேனுடன்கலந்து,
தினமிருவேளை நாவில் தடவ காதிரைச்சல், வயிற்றுப்போக்கு,சீதபேதி குணமாகும்
45.
சின்னவெங்காயத்தை அரிந்து,கற்கண்டுதூள்
அல்லது சர்க்கரை கலந்து,அகன்ற பாத்திரத்தில் சாய்வாக வைக்க சேரும்
நீரை இரவில்பருகி, காலையில் மீதமுள்ள வெங்காயத்தை இடித்துப் பிழிந்து
குடித்து வர ரத்தத்தோடு கூடிய சீதபேதி குணமாகும்
46.
அத்திப்பாலை உலர்த்திப் பொடித்து 500மிகி,
வெண்ணையில் கலந்து கொடுக்க கழிச்சல் தீரும்
47.
1லி மோரில் 1தேகரண்டி மஞ்சள்தூள்,உப்பு,சிறிதுசுக்கு போட்டு,திரியாமல்காய்ச்சி,
கறிவேப்பிலை போட்டு ஆறவைத்து,வடித்துப் பருக வயிற்றுப்போக்கு,செரியாமை தீரும்
48.
மோர்,மாதுளைபழத்தோல்,சுக்கு,மஞ்சள்,உப்புசேர்த்துகாய்ச்சி,கறிவேப்பிலை போட்டு ஆறவைத்துப் பருக கடுமையான வயிற்றுப்போக்கு குணமாகும்
49.
மாதுளம்பழத்தோலைஅரைத்துதயிர்அல்லதுமோரில்கொள்ளவயிற்றுக்கடுப்பு
, வயிற்றோட்டம் தீரும்
50.
மாதுளம்பழத்தோடுடன் சமன் சாதிக்காய் பொடித்துச்
சாப்பிட குருதி சீதபேதி,
வயிற்றோட்டம் குணமாகும்
51.
கொய்யா இலைக் குடிநீர் பருகிவர காலராவினால் ஏற்படும்
வாந்தி, வயிற்றுப் போக்கு கட்டுப்படும்
52.
கொய்யாதளிருடன் உப்பு சேர்த்து மென்று சாப்பிட வயிற்றோட்டம்
நிற்கும்
53.
ஆலம்விழுதை எருமை தயிரிலரைத்து,எலுமிச்சைசாறு
40மிலியுடன் பிசைந்து சாப்பிட வயிற்றுக்கடுப்பு குணமாகும்
54.
வேப்பம்பட்டை,நாவல்பட்டை,மிளகு,சீமைகாசுக்கட்டி,பொடித்து10கிராம்,கஷாயம் செய்து பருக வயிற்றுப்போக்கு தீரும்
55.
அசோகுப்பூ,மாம்பருப்பு,சமனளவு பொடித்து,3சிட்டிகை,பாலில்
கொள்ள சீதபேதி, இரத்தபேதி குணமாகும்
56.
அத்திப்பால்15மிலி,வெண்ணை,சர்க்கரை கலந்து காலைமாலை கொள்ள நீரிழிவு,
இரத்தக்கழிச்சல்,பெரும்பாடு,நீரில்குருதிபோதல்,நரம்புபிடிப்பு,பித்தம் தீரும்
57.
கட்டுக்கொடி இலைச்சாற்றை சர்க்கரை கலந்த நீரில்
வைத்துக் காலையில் சாப்பிட்டுவர வெள்ளை,வெட்டை,சீதக்கழிச்சல்,இரத்தக்கழிச்சல் தீரும்
58.
சீரகப்பொடி1கிராம்,தேன்
அல்லது பாலில் தினமிருவேளை உண்டுவர சீதக்கழிச்சல், செரியாக்கழிச்சல்,பித்தம்,வாயு,உதிரச்சிக்கல் தீரும்
59.
மாசிக்காயை கருகாமல் வறுத்துப் பொடித்து1கிராம்,தேன் அல்லது நெய்யில் கொள்ள பெரும்பாடு,நீர்த்தக்கழிச்சல்,இரத்தக்கழிச்சல்,மிகுவியர்வை தீரும்
60.
2மிளகாய்வற்றலை பழகிய மண்சட்டியில் நெய் விட்டு கருக்கி,புளியங்கொட்டை அளவு கட்டிக்கற்பூரம் போட்டு,அரை லி.நீர்விட்டு,1கைநெற்பொரி சேர்த்துக் காய்ச்சி, வடித்து ஒவ்வொரு வாந்தி,பேதியின் போதும்1மடக்கு குடித்து வர குணமாகும்
61.
மங்குஸ்தான் பழத்தோட்டை பாலில் அரைத்துக்
குடிக்க சீதபேதி வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
62.
விளாம்பொடியை தேனில் குழைத்து கொடுக்க
குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
63.
காசுக்கட்டியைச் சூரணம் செய்து கால் முதல் அரை
கிராம் தேன் அல்லது நெய் கலந்து உண்டுவர வயிற்றுப்போக்கு,மலத்துடன்
குருதி செல்லல் கட்டுப்படும்
64.
ஒதியம்பட்டைசூரணம் 1-2கிராம் மோரில் தினம்3வேளை
உண்டுவர வாய்ப்புண்,
குடற்புண், பேதி, குருதிக்கழிச்சல்
தீரும்.
65.
நாவல் கொழுந்திலைசாறு 1தேகரண்டி
தினம்2வேளைசாப்பிட வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.
66.
கறிவேப்பிலையை அரைத்து,100 மிலி
மோரில் கலந்து குடிக்க சீதக்கழிச்சல் நீங்கும்
67.
5கிராம் கசகசாவை அரைத்து மோரில் கலந்து
தினம்2வேளை கொள்ள சீதக் கழிச்சல் தீரும்.
68. குடசப்பாலை சூரணம்
2கி. அல்லது இம்பூரல் மாத்திரை 2 தினம் 3வேளை கொள்ள சீதக்கழிச்சல் தீரும்.
69. எலுமிச்சைச்சாறு50மிலி,சமன் நீர் கலந்து
4மணிக்கொருமுறை பருகிவர வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
70. .மாதுளம்பூச்சாறு30மிலி,தேன்15மிலி
கலந்துபருக வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
71. முற்றின கடுக்காயை
துணியில் சுற்றி எரித்து,தோலைமட்டும்
பொடித்து விளக்கெண்ணையில் குழைத்துக்கொடுக்க வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
72. மாந்தளிர்,மாம்பூ,மாதுளம்பூ சமனரைத்து,எலுமிச்சையளவு, பசு மோரில் சாப்பிட
சீதபேதி,இரத்தபேதி,சீதமும்,இரத்தமும் கலந்த
வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
73. கொய்யாகொழுந்து
அல்லது பிஞ்சை கசாயம் செய்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
74. 1தேங்காய் சில்லுடன்,5பூண்டுப்பல்
சேர்த்தரைத்து பாலில் 3,4வேளை
கொடுக்க வயிற்றுப்போக்கு குணமாகும்.
75. நாவல்பழச்சாற்றுடன்,பனைவெல்லம்,பன்னீர் கலந்து பருக
இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு தீரும்.
76. மணத்தக்காளிச்சாறு
பருக காலரா நிற்கும்.
77. எலுமிச்சைச்சாறு
அடிக்கடி கொடுக்க காலரா தீரும்.
78. வெங்காயம்,மிளகு சேர்த்திடித்து
சறுபிழிந்து குடிக்க வாந்தி, வயிற்றுப்போக்கு
தீரும்.
79. சுனையுடன் கூடிய 5,6 நெல்லைவாயில் போட்டு
நீரருந்த குடல் உள் சிக்குண்டிருக்கும் முடி நெல்லுடன் வெளிப்படும்.பேதி
நிற்கும்.
80. தக்காளிச்சாறு,எலுமிச்சைச்சாறு,தேன் சமன் கலந்து
கொள்ள அதிசாரபேதி குணமாகும்.
81. சுக்கு,திப்பிலி,ஓமம்,மிளகு,உப்பு,கறிவேப்பிலை,பெருங்காயம்,சுண்டவற்றல் சமன் வறுத்து பொடித்து சுடுசோற்றில் முதலில் நெய்சேர்த்து பிசைந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு வாயு தீரும்.
82.சுண்டவற்றல்,கருவேப்பிலை,மாம்பருப்பு,ஓமம்,மாதுளம்பழத்தோடு,நெல்லிமுல்லிவெந்தயம் சமன் வறுத்து பொடித்து திரிகடி,தயிரில் கொள்ள சகல கிராணி அதிசாரம் கழிச்சல், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, மூலக்கடுப்பு ,சீதம் இரத்தம்விழுதல் தீரும்.
83. மஞ்சள்,பிரண்டை,பூண்டு,சுக்கு,மிளகுவகைக்கு2கிராம்பொடித்து ஒருகோழி முட்டைக் கருவில் பொரித்துச் சாப்பிட வாத,பித்த.சிலேத்தும,மூலக்கிராணி தீரும்
84. கொட்டைக்கரந்தையும் சீரகமும் சமனரைத்து ந.எண்ணையில் வேகவைத்து சாப்பிட வாத,பித்த,சிலேத்தும,மூலகிராணி தீரும்.
85. எலுமிச்சைசாற்றில் சர்க்கரை கலந்து சாப்பிட வயிற்றுகடுப்பு தீரும்.
86. நெல்லிக்காய் சர்க்கரை கலந்து சாப்பிட வயிற்றுக்கடுப்பு தீரும்.
86. நெல்லிக்காய் சர்க்கரை கலந்து சாப்பிட வயிற்றுக்கடுப்பு தீரும்.
87. வெந்தயம்,நெல்லிப்பருப்புபொடி,திரிகடி,புளித்ததயிர் அல்லது ந.எண்ணையில் கொள்ள வயிற்றுக்கடுப்பு தீரும்.
88. நெல்லிப்பருப்பை எலுமிச்சைசாறிலரைத்து சர்க்கரை கலந்து கொடுக்க வயிற்றுக் கடுப்பு தீரும்
89. துத்திவேர் அரைத்து எலுமிச்சைஅளவு, எருமை தயிரில் கொடுக்க வயிற்றுக்கடுப்பு தீரும்.
90. ஒருஎலுமிச்சம்பழத்தை எருமைதயிரில் கொடுக்க வயிற்றுக்கடுப்பு தீரும்.
91. நாவல்கொழுந்தையரைத்து எலுமிச்சையளவு, எருமைதயிரில் 3நாள் கொடுக்க வயிற்றுக்கடுப்பு தீரும்.
92. வெள்ளாட்டுப்பாலில் எலுமிச்சைசாறு கலந்து 3நாள் காலையில் கொடுக்க வயிற்றுக் கடுப்பு தீரும்
93. இலவங்கபட்டை அரைத்து எலுமிச்சைஅளவு,300மிலி எருமைமோரில் கொள்ள வயிற்றுக் கடுப்பு தீரும்
94. கறந்த எருமைபால்200மிலியில் ஒருதுளி புளியிலைச்சாறு கலந்து 8நாள் கொடுக்க வயிற்றுக் கடுப்பு தீரும்
95. வெள்ளெருக்கு,குப்பைமேனி சமன்
பொடித்து திரிகடி பசுநெய்யில் கொள்ள அஜீரண கிராணி தீரும்.
96. அமுக்கராவேரும்,இந்துப்பும் சமன்
பொடித்து தேனில் மத்தித்து கொள்ள சீதம் விழுதல் தீரும்.
97. விளம்பிசினை பொடித்து
எருமைதயிரில் 3நாள் கொடுக்க கழிச்சல் தீரும்.
98. ஒருதலைப்பூண்டின்மேல் உப்பை அரைத்துப்பூசி உமிக்காந்தலில் வெதுப்பி,உப்பு, தொலி,முளை நீக்கி அரைத்து தயிரில் சாப்பிட வாத,பித்த,சிலேத்ம கிரானி தீரும். கடுப்பு நிற்கும்.
98. ஒருதலைப்பூண்டின்மேல் உப்பை அரைத்துப்பூசி உமிக்காந்தலில் வெதுப்பி,உப்பு, தொலி,முளை நீக்கி அரைத்து தயிரில் சாப்பிட வாத,பித்த,சிலேத்ம கிரானி தீரும். கடுப்பு நிற்கும்.
99. இளநீரில்
எலுமிச்சைசாறு கலந்து கொள்ள வயிற்றுக்கடுப்பு தீரும்
100.சுக்கு,ஓமம்,பூண்டு
வகைக்கு40கிராம்,திப்பிலி 10கிராம், மிளகு 5கிராம்
வெதுப்பி பொடித்து பாதிஎடை ஆடுதீண்டாப்பாளை சூரணம் கலந்து 1தேகரண்டி கலைமாலை
சாப்பிட்டுவர வாயு கிராணி தீரும்.
101.ஓமத்தைக்கருக வறுத்து
உமிபோக்கி பொடித்து திரிகடி கொள்ள வாயுகிராணி தீரும்.
102.வெள்ளெருக்கும்,குப்பைமேனியும்
சமனாய் பொடித்து திரிகடி பசுநெய்யில் கொள்ள அஜீரண கிராணி தீரும்.
103.அமுக்கராவேரும்
இந்துப்பும் சமனாய் பொடித்து தேனில் கொள்ள சீதம் விழுதல் தீரும்.
104.அத்திப்பிஞ்சு,அதிமதுரம்,ஓமம்,இந்துப்பு,ஈருள்ளி,மிளகு,சுக்கு,சீரகம், சமனாய் ஆவினெய்யில் வேகவைத்துப் பதத்தில் வடித்துக் கொள்ள சகல கழிச்சலும் தீரும்.
104.அத்திப்பிஞ்சு,அதிமதுரம்,ஓமம்,இந்துப்பு,ஈருள்ளி,மிளகு,சுக்கு,சீரகம், சமனாய் ஆவினெய்யில் வேகவைத்துப் பதத்தில் வடித்துக் கொள்ள சகல கழிச்சலும் தீரும்.
105.ஓமம்,மிளகு வகைக்கு
40கிராம் வறுத்துப்பொடித்து வெல்லம்40 கிராம் கூட்டி அரைத்து திரிகடி 10நாள்
சாப்பிட வயிற்றுக்கடுப்பு, கழிச்சல்
தீரும்.
106.கறிவேப்பிலையைடன் தேக்கரண்டியளவு சீரகம்
சேர்த்தரைத்து வாயில் போட்டு
தண்ணீர் குடித்துவிட வயிற்றுப் போக்கு நிற்கும்.
107.பூண்டு சாறு ,சமஅளவு சோயா எண்ணெய்
எடுத்து வயிற்று பகுதியில் மசாஜ் செய்ய வயிற்று வலி தீரும் .
108. எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வர காலரா அண்டாது.
109.கசகசாவுடன்
நாட்டுச் சர்க்கரையை சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று நாளில்
வயிற்றுப் போக்கு குணமாகும்.
110.வயிற்றுபுண்குணமாக தேங்காய்பால் எடுத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
111.கசகசாவை அரைத்தும் சாப்பிடலாம்
112.மனத்தக்காளி கீரை சாப்பிடலாம்.
113.பெருந்தும்பை சாறு எடுத்து குடிக்கலாம்.
114.தயிரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வயிற்றுபோக்கு குணமாகும்.
115.மாதுளை பழ சாறு ஐஸ் தண்ணீர் சேர்க்காமல் குடிக்க வயிற்றுபோக்கு குணமாகும்
116.தொட்டால் சிணுங்கி இலைசாறு குடிக்க வயிற்றுபோக்கு குணமாகும்
110.வயிற்றுபுண்குணமாக தேங்காய்பால் எடுத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
111.கசகசாவை அரைத்தும் சாப்பிடலாம்
112.மனத்தக்காளி கீரை சாப்பிடலாம்.
113.பெருந்தும்பை சாறு எடுத்து குடிக்கலாம்.
114.தயிரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வயிற்றுபோக்கு குணமாகும்.
115.மாதுளை பழ சாறு ஐஸ் தண்ணீர் சேர்க்காமல் குடிக்க வயிற்றுபோக்கு குணமாகும்
116.தொட்டால் சிணுங்கி இலைசாறு குடிக்க வயிற்றுபோக்கு குணமாகும்
3 கருத்துகள்:
உங்க தமிழ் பற்று சரி ஆன சாதாரண மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும் ஏன் இப்படி
சிறந்த தகவல்கள்.
சிறந்த தகவல்கள்
கருத்துரையிடுக