பக்கங்கள்

29 அக்டோபர், 2016

அக்கி,கொப்புளங்கள்,வேனற்கட்டி,வீக்கம் (HERPEZOSTER, BOILS, SUMMERBOILS)



                                                                                                                                                                                                                                                                           குருதூஷணஞ் செய்தல்,வழியில் முள் அடைத்தல்,மரங்களை காரணமின்றி பூ உதிர,கிளையொடிய அடித்தல், கல்லெரிதல், பச்சைக்கொடி, பூசைகளுக்குறிய பூஞ்செடிகளை நிஷ்காரணமாய் வெட்டல், கிள்ளல், இரண்டாய் பிளந்தெரிதல், இவைகளால் பிளவை,கண்டமாலை உண்டாகும்.அன்றியும் தன் பார்வைக் கெட்டாவிடங்களில் கட்டிகள்,புரை விழும்.இரணங்கள்,கரப்பான்,வண்டுகடி, குழிப்புண்கள் உண்டாகும்.                                                           
 கட்டிகள் (abscesses) என்பது  நம் உடலில் நச்சுக்கழிவுகள் சேர்ந்து உள்ளதன் அறிகுறியாகும்.இவை உடலின் உள்ளேயும்,வெளியேயும் தோன்றும்.  

       தசைகளில் பூச்சி உண்டாகி மாமிசத்தைத் தின்று மஞ்சள் நீர் கொள்ளுதல் பிளவை.                                                                                                                                                                              
 பல மாதர் சஞ்சாரத்தாலும்,நரம்பு பிசகாலும் சம்பவிப்பது அரையாப்பு.

    மேகநீரால் நரம்புவழியாய் இரத்தம்கெட்டு கட்டிபோல் திரண்டு உருண்டு வருவது கண்டமாலை.                                                                                                                         
 1.கல்லீரல்கட்டி(hepatic abscess)   
                                
 2.மூளையில்கட்டி(cerebral abscess)                                              
 3.குடல்கட்டி (appendix abscess)
                    
 4.தொண்டையில்கட்டி(peritonsillar abscess) 
   
 5.அடிவயிற்றுகட்டி(pelvic abscess).                                        
                                 
6.நுரையீரல்கட்டி(empyema)                                              

 7.ஆசனவாய்கட்டி(ischiou rectal absces)     இது முற்றினால்  பவுத்திரத்தில் (anus fistula)விடும்.                                                                                                           8.பற்களின்வேரில்கட்டி(alveolar abscess)                                       
 9.அக்குள்கட்டி(axilalary abscess)                                            
 10.யோனிகட்டி(bartholines abscess)                                   

 11.மார்பககட்டி(breast absce                
 இவை முற்ற­ புற்றுநோயாக மாறும்.                                             
அறைந்தார் ஆயுர்வேதமிது அன்பாய் மாந்தர் தானறிய                   நிறைந்தார் பிளவை சேருவிதம் நிலையா மரணம் வந்தவகை           திறந்தார் விஷநீர் தான் பரவி தெரிக்கும் ராசகட்டி குணம்                 முறைந்தார் முனிவரானவரும் மொழிந்தார் மொழிந்தார் மொழிந்தாரே.                               
 ராஜபிளவைகுணம்; நடுமுதுகில் முள்ளந்தண்டின்மேல் மாங்காய் அல்லது தாமரைக்காய் போல் வீங்கி,முக்கண்ணுண்டாகி புரையோடி, வேதனை அதிகரித்து  மூச்சுவிடாக்குத்து, குளிர்சுரம், நாவரட்சி, சோபதாபங்  காணும்.   
பக்கப்பிளவைகுணம்;முள்ளந்தண்டோரத்தில் உரைபோல் திரண்டு பல கண்ணும்,புரையும்  உண்டாகி  தவனங்கழிச்சல்  காணும்.

  மார்புப்பிளவைகுணம்;மார்பின் தண்டுபோல் திரண்டு காணும்.    

 கண்டமாலைகுணம்;கழுத்தைச்சுற்றி எரித்துத் தடித்து வெடித்துப் புண்ணாக்கி சீழ்கட்டிப் புரையோடும்.                                                                                                                  
1.   வேப்பிலை,மஞ்சள்,அருகு,பச்சரிசி,பாசிப்பயறு சேர்த்தரைத்து அம்மைக் கொப்புளங்கள் மீது பூசி குளிக்க குணமாகும்
2.   மஞ்சள்,வேப்பிலை சமனரைத்துப் பற்றுபோட அம்மைக் கொப்புளங்கள், சேற்றுப்புண் குணமாகும்
3.   முட்சங்கன் இலையை அரைத்துப் பூச அம்மைக்கொப்புளங்கள் மறையும்
4.   முட்சங்ஙன் வேர்பட்டையை அரைத்துத் தடவ அடிபட்ட வீக்கம் கரையும்
5.   அரத்தையை வெந்நீரிலரைத்துப் பூச அடிபட்ட வீக்கம்,வலி குறையும்
6.   திருநீற்றுப்பச்சை இலையை அரைத்துப் பூச கட்டிகள் உடையும்
7.   நல்வேளை இலைகளை அரைத்தோ,வதக்கியோ சீழ்க்கட்டிகள் மீது பற்று போட உடையும்
8.   ஆமணக்கு விதையின் மேல்தோல் நீக்கி அரைத்துக் கட்டிகளின் மீது பூச , உடையும்
9.   ஆமணக்கு இலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வி.எண்ணையில் வதக்கி ஒற்றடம் கொடுக்க வீக்கம்  குறையும்
10. ஊமத்தை இலையை அரைத்து சமன் அரிசிமாவு கூட்டி கட்டிகள், வீக்கங்கள் மீது விரல் கனத்திற்குப் பற்றிட  கரையும்
11. எருக்கன் இலையை வதக்கி இளம்சூட்டில் கட்ட கட்டிகள் உடையும்
12. எருக்கன்பழுப்பு இலைகளை வதக்கிச் சாறெடுத்து, தேன்,சுண்ணாம்பு கலந்து குழைத்து கட்டிகள் மீது பூச உடையும்
13. எள் இலையை நெய்யில் வதக்கிக் கட்ட கட்டிகள் உடையும்
14. ஓமத்தை அரைத்து மஞ்சள்தூள் கலந்து சூடாக்கி வீக்கத்தின் மீது வைத்துக் கட்ட கரையும்
15. கடுகை தேனுடன் அரைத்துப் பற்றிட கட்டிகள் உடையும்
16. சிவப்புக்குங்கிலியம்  50கிராம், 200 மிலி  பாலில் கொள்ள கட்டிகள், காயங்கள் குணமாகும்
17. கொத்துமல்லி இலையை ந.எண்ணையில் வதக்கிக் கட்ட கட்டிகள் கரையும்.
18. துத்தி இலைச்சாற்றை  அரிசிமாவுடன் கலந்து இளம்சூட்டில் பற்றிட கட்டிகள் உடையும்
19. நீர்ப்பிரம்மி சமூலத்தை வி.எண்ணையில் வதக்கி  ஒற்றடமிட்டு, இளம் சூட்டில் கட்ட வீக்கம், கட்டிகள் கரையும்
20. மிளகுஇலை,தழுதாழைஇலை,நொச்சிஇலை சமன் எடுத்து கொதிக்க வைத்து ஒற்றடமிட்டு, இலைகளைக் கட்ட அடிபட்ட வீக்கம் குணமாகும்
21. வல்லாரை இலையை வி.எண்ணையில் வதக்கி வீக்கம்,கட்டிகளின் மீது பூசி வர மறையும்
22. மருதோண்றி இலையை அரைத்துப்பூச கொப்புளங்கள்,தீக்காயங்கள் குணமாகும்
23. தும்பை இலைகளை அரைத்துப்பூச கொப்புளங்கள்,நமைச்சல்,சிரங்குகள் குணமாகும்
24. அமுக்கராகிழங்கு,சுக்கு சமனெடுத்து வெந்நீரிலரைத்துப் பூச வீக்கம் குறையும்
25. ஊமத்தை இலையை அரைத்து மஞ்சள்தூள் கலந்துபூச தேள்,பூரான், வண்டுக் கடியால் ஏற்படும் வீக்கம் குணமாகும்
26. மஞ்சள்கரிசாலை இலையை அரைத்துப் பூச வீக்கம் கரையும்
27. குப்பைமேனி இலைகளை அரைத்துப் பற்றிட வண்டுக்கடி வீக்கம் குணமாகும்
28. காக்கரட்டான் இலைகளை வி.எண்ணையில் வதக்கிக்கட்ட வீக்கம் கரையும்
29. தவசுமுருங்கை இலைகளை இடித்து வதக்கிக்கட்ட அடிபட்ட வீக்கம், காயம் குணமாகும்
30. நொச்சி இலைகளை அரைத்துப் பற்றிட மண்ணீரல் வீக்கம் கரையும்
31. நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம் குணமாகும்
32. பொடுதலை இலையை அரைத்துப் பற்றிட கட்டிகள் உடையும்
33. மஞ்சளை அரைத்துப் பூச கட்டிகள்  உடையும்
34. மல்லிகை பூக்களை மார்பில் வைத்துக்கட்ட பால்சுரப்பு,மார்பகவீக்கம்  குறையும்
35. முடக்கற்றான் இலையை வதக்கிக் கட்ட கீல்வாயு,வீக்கம் குணமாகும்
36. வாதநாராயணன் இலைகளை சமைத்துச் சாப்பிட,வி.எண்ணையில் வதக்கிக் கட்ட வாதவலி, வீக்கம்,கட்டிகள் குணமாகும்
37. சிருங்கிபற்பம் 100-200மிகி,தினம்3வேளை,50மிலி பாலில் கொள்ள அக்கி தீரும்
38. குங்கிலியபற்பம் 0.5-1 கிராம்,தினமிருவேளை 5-10 மில்லி பாலில் கலந்து உட்கொண்டு, ஊமத்தன்தைலம் மேலே பூசி வர கொப்புளங்கள் ஆறும்
39. பறங்கிப்பட்டை சூரண மாத்திரை2, தினம்3வேளை சாப்பிட்டு, அருகன் தைலம் பூசிவர வேனற்கட்டி  குணமாகும்
40. சந்தனத்தை  இழைத்துப்  பூச வேனற் கட்டிகள் உடையும்
41. பெருங்காயத்தை உரைத்துப் பற்றிட  கட்டிகள் உடையும்
42. வாதநாராயணன் இலையுடன் உப்புச் சேர்த்து,கசக்கிச்சாறெடுத்து,பஞ்சில் தோய்த்துக் கட்ட கட்டிகள்,சீழ்புண்கள் ஆறும்
43. உத்தாமணிஇலைச்சாற்றுடன்,சுண்ணாம்பு கலந்து கால்வீக்கங்களுக்குப்  பற்றிட  குறையும்
44. ஆவாரை இலை,பூவை அரைத்துப் பூசி குளிக்க உஷ்ணம், அம்மைக் கொப்புளம், எரிச்சல் குணமாகும்
45. கறிவேப்பிலையை அரைத்துப் பூச வேனற் கட்டிகள் மறையும்
46. அத்தியிலை2,தும்பைஇலை2,துளசிஇலை5,காலையில் மென்று சாற்றினை விழுங்கி வர அல்லது சர்க்கரையின்றி  கஷாயம் செய்து சாப்பிட்டுவர உஷ்ணத்தினாலுண்டாகும் கட்டி குணமாகும்
47. சிவனார்வேம்பு இலைகளை அரைத்துப் பூச வீக்கம் கரையும்
48. சிவனார்வேம்பு வேரை வெண்ணையில் அரைத்துப் பற்றிட வீக்கங்கள் குணமாகும்
49. தான்றி பொடியை அக்கி மேல் தடவ குணமாகும்
50. உப்பு,புளி சேர்த்துப் பற்றிட சுளுக்கு,வீக்கம் கரையும்
51. சுண்ணாம்பு, சர்க்கரை சேர்த்துப் பற்றிட சுளுக்கு, காயமின்றி அடிபட்ட வீக்கம்  கரையும்
52. தலையில் அடிபட்டு காயமின்றி வீக்கம் இருந்தால் முருங்கை இலையைப் பற்றிட குணமாகும்
53. மல்லிகை இலையை எள் நெய்யில் வதக்கி ஒற்றடமிட வீக்கம் கரையும். வலி நிற்கும்
54. நத்தைச்சூரியை அரைத்துப் பூச கல் போன்ற வீக்கம் கரையும்
55. கருஞ்சீரகத்தை காடி அல்லது வெந்நீரிலரைத்துப் பூச கட்டிகள் உடையும். வீக்கம் கரையும்
56. உதிரமர இலையை வதக்கிக் கட்ட வீக்கம்  கரையும்
57. கருஞ்செம்பை இலைகளை அரைத்துக் கட்ட எல்லாவகை கட்டிகளும் பழுத்து உடைந்து ஆறும்
58. நத்தைச்சூரிவேர் எலுமிச்சையளவு அரைத்து,கால்ஆழாக்கு ந.எண்ணையில் குழைத்து   காலையில்  5நாள் பத்தியத்துடன் கொடுக்க அரையாப்புக் கட்டி கரையும் .
59. பச்சரிசிமாவு மஞ்சள்தூள்,விளக்கெண்ணயில் குழைத்து இளம்சூட்டில் பற்றிட கட்டிகள் உடையும்வேதனை குறையும்                                                                                                
60.   ஊமத்தையிலையின் மேல் விளக்கெண்ணை தடவி வாட்டிக்கட்ட கட்டிகள் உடையும்.                                
61.   வெள்ளைப்பூண்டு,சுண்ணாம்பு சேர்த்து அரைத்துக்கட்ட கட்டிகள் உடையும்.     
62.   நெல்லிவேர்பட்டை,நிலப்பனைக்கிழங்கு,நெற்பொறி,ஆவாரை வேர்பட்டை சமனாய் முலைப்பாலிலரைத்து ஆவின் வெண்னயில் மத்தித்து பூசிவர பிளவைகட்டி விதனம் வாங்கும்.                                                                                             
63.   மலைதாங்கி வேர்,ஆவாரம்பூ,குருவையரிசி,மா இவற்றை இடித்துப் பிட்டவித்துக் கொடுக்க பிளவை ரணத்தில் நீர்கசிதல் வாங்கும்.                                                                                       
64.   கோவைக் கிழங்கைத் தயிர்விட்டரைத்துக் கட்ட ஆணி விழுந்து பிளவை ஆறும்.                                                            
65.   பிளவைக்கொல்லி கிழங்கையரைத்துக்கட்ட ஆணி விழுந்து புண்னாறும்.                 
66.   ந.எண்ணை கால்படியில் சித்திரமூலம்பட்டை 40கிராம் அரைத்துப் போட்டு எண்ணை காயும்போது கருப்பட்டி(பனைவெல்லம்) 15கிராம் போட்டு மெழுகு பதத்தில் இறக்கி வேளைக்கு 1கரண்டி சாப்பிட்டு உப்பு,புளி பத்தியமிருக்க கண்டமாலை,அரையாப்பு தீரும். 
67.   கொடிவேலி வேர்பட்டையும் சுண்ணாம்பும் சமனாயரைத்துபூச அரையாப்பு வற்றும்.                                           
68.   கோவையிலையை அரைத்து வெண்ணையில் மத்தித்துக்கட்ட அரையாப்பு வற்றும்.                                             
69.   அவுரியிலையை அரைத்து வெண்ணையில் மத்தித்துக் கட்ட அரையாப்பு வற்றும்.                                             
70.   பூண்டு,வெள்ளறுகு அரைத்துக் கட்ட அரையாப்பு தீரும்.
71.   முடக்கத்தானிலை,சுண்னாம்பு,வெல்லம் அரைத்துத் தடவ அரையாப்பு தீரும்.                                                             
72.   ஆதாளைவேரை நையத்தட்டி வைத்துக் கட்ட அரையாப்பு தீரும். 

73.   5 கழற்சிக்காய் பருப்புகளை வெண்ணையாய் அரைத்து ஓதத்தின் மேல் (hydrocele) பற்றுபோட வீக்கம் உடனே வடியும்.  

74.   தேங்காய்பூவில் புறா முட்டையை உடைத்து ஊற்றி வறுத்து ஒத்தடம் கொடுக்க கால் மணி நேரத்தில் ஓதம் குணமாகும்.  

75.   .கட்டடத்தில் இருக்கும் அரசமரத்தின் வேரை(தரையில் படா) நீர்விட்டு மையாயரைத்து பற்றிட கண்டமாலை குணமாகும்.                                                                   
76.   நெல்லிவேர்பட்டை,நிலப்பனங்கிழங்கு,நெல்பொரி,ஆவாரைவேர்பட்டை சமனெடுத்து முலைப்பாலில் அரைத்து பசுவெண்ணையில் மத்தித்து பூச பிளவை வீக்கம் வற்றும்                                                          
77.   வராகிக்கிழங்கை முலைப்பாலில் அரைத்து பசுவெண்ணையில் மத்தித்து பூச பிளவை வீக்கம் வற்றும்                                            
78.   கோவைக்கிழங்கை தயிர் விட்டரைத்துக்கட்ட ஆணி விழுந்து புண் ஆறும்                                                         
79.   கீழாநெல்லி 3பங்கு ஈருள்ளி1பங்கு சேர்த்து மோர் தெளித்து இடித்து பிழிந்த சாறு கால்படி 3நாள் காலையில் கொடுக்க நன்றாய் பேதியாகி வீக்கம் வற்றும்                                                            
80.   வெள்ளைப்பூண்டும் வெள்ளருகும் அரைத்து வீக்கத்தில் கட்ட அரையாப்பு கரையும்       

81.   எருக்கம்பிஞ்சும் வெள்ளைப்பூண்டும் சமனாய் உமிக் காந்தலில் வெதுப்பி அரைத்துக் கட்ட அரையாப்பு தீரும்                                           
                                                                                                                          

82.   கருப்புஎள்எண்ணைகால்படியில் சித்திரமூலம்பட்டை40கிராம் அரைத்துப் போட்டு எண்ணை காய்ந்து வரும்போது  100 கருப்பட்டியை தட்டி போட்டு மெழுகுபதத்திலிறக்கி,வேளைக்கு 1கரண்டி பத்தியத்துடன் 3நாள் சாப்பிட கண்டமாலை அரையாப்பு தீரும்             

83. சப்பாத்தி பூ இலையை கட்டிகள் மீது கட்டி வ உடைந்த கட்டிகள் குணமாகும்.
                                                                                               
84. கடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டயும் தண்ணி விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி பூச கட்டி தானாக கரையும்.
85. தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட கழலைகள் குணமாகும். 

86.சிறிதளவு சுண்ணாம்பு, தேன் அல்லது வெல்லம் சேர்த்து குழைக்க சூடு பறக்க வரும் கலவையை கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்ட வேனல் கட்டி மறையும்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமையான பதிவு

பெயரில்லா சொன்னது…

சிறப்பான பதிவு... அருமை... மிக அருமை...