பக்கங்கள்

29 அக்டோபர், 2016

மஞ்சள்காமாலை.(JAUNDICE.)



பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.
தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.
1.   அவுரி இலைகளையரைத்து, கொட்டைபாக்களவு, வெள்ளாடடுப் பாலில், கொள்ள, மஞ்சள் காமாலை  தீரும்.
2.   ஆமணக்கு,கீழாநெல்லி இலைகள் சம அளவரைத்து, எலுமிசசையளவு, காலையில் கொள்ள மஞ்சள் காமாலை தீரும்.
3.   கரிசாலையிலைகளையரைத்து.கொட்டைபாக்களவு.தினம் 2வேளை, 200மிலி. மோரில் கொள்ள  மஞ்சள் காமாலை தீரும்.
4.   கீழாநெல்லி இலைகளையரைதது,எலுமிச்சையளவு,250மிலி மோரில் சாப்பிட, மஞ்சள் காமாலை, நீரிழிவு குணமாகும்.
5.   வில்வ இலைச்சூரணம் 1தேக்கரண்டி,மஞ்சள்கரிசாலைச்சாறு 1தேக்கரண்டி கலந்து காலையில் சாப்பிட மஞ்சள் காமாலை தீரும்.
 
6.   அன்னபேதிச்செந்தூரம்200மிகி,ஏலாதிசூரணம் 1கிராம் 5,10மிலி தேனில் தினம் 2 வேளை கொள்ள  மஞ்சள் காமாலை  தீரும்.
7.   நிலவேம்பு இலைகளை குடிநீர் செய்து பருகிவர மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
8.   சிற்றாமணக்கு கொழுந்திலைகளையரைத்து,மோரில் கொள்ள மஞ்சள் காமாலை குணமாகும்.
9.   கரும்புச்சாறு 200மிலி காலையில் பருகிவர மஞ்சள்காமாலை கட்டுப்படும்.
10.  பொன்னாவாரை இலையுடன் சமன் கீழாநெல்லியரைத்து, நெல்லிக் காயளவு, காலைமாலை மோரில் கொடுக்க மஞ்சள் காமாலை  தீரும்.

11.  பச்சைதிராட்சை பழச்சாற்றை வெறும் வயிற்றில் அடிக்கடி சாப்பிட்டுவர காமாலை குணமாகும்.                                       
                                        
12.    வேப்பங்கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு,எருமைதயிரில் காலை 3 நாள் சாப்பிட்டு உப்பில்லா பத்தியமிருக்க காமாலை குனமாகும்.
 
13.    முள்ளங்கி இலைச்சாற்றை சர்க்கரை கலந்து காலைமாலை சாப்பிட்டு வர காமாலை குணமாகும்.
14.    கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருக காமாலை குணமாகும்

15.    அரை தேகரண்டி கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்க காமாலை குணமாகும்

16.    அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்த காமாலை குணமாகும்

17.    கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்து சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருக காமாலை குணமாகும்

18.    சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு தம்ளர் நீர் சேர்த்து அரை தம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்த காமாலை குணமாகும்

19.    வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருக காமாலை குணமாகும்

20.    வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரை பங்கு ஒமம், உப்பு சேர்த்து, அரை தேகரண்டி உண்ண காமாலை குணமாகும்

21.    நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு பொடித்து அரை தேகரண்டி, நீரில் கலந்து அருந்த காமாலை குணமாகும்

22.    15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருக காமாலை குணமாகும்

23.    ஒரு தேகரண்டி வெட்டிவேர்ப் பொடியில் அரை தம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருக காமாலை குணமாகும்

24.    சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரை தேகரண்டி உண்ண காமாலை குணமாகும்

25.    செங்கரும்பின் சாற்றை ஒரு தம்ளர் காலை மாலை அருந்த காமாலை குணமாகும்

26.    சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு தேகரண்டி உண்ண காமாலை குணமாகும்

27.    மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் தேகரண்டி சேர்த்து அருந்த காமாலை குணமாகும்

28.    அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்த காமாலை குணமாகும்

29.    நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருக காமாலை குணமாகும்

30.    பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு தம்ளர் நீர் விட்டு அரை தம்ளராக காய்ச்சி அருந்த காமாலை குணமாகும்

31.    நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம்50 கிராம் -பொடி செய்து ஒரு வாரம் காலை, மாலை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.