நொறுங்கத் தின்றால் 100 வயது என்பார்கள். நாம் உண்ணும் உணவு உமிழ்நீருடன் கலந்து இரைப்பை சென்று அங்கு பித்தநீர் (Hydro chloric acid ) கலந்து மிருதுவாக்கப்பட்டு உணவுக்குழல் மூலம் ஜீரணிக்கப்படுகிறது.
நுரையீரல் சுருங்கி விரியும் போது இரைப்பையும் சுருங்கி விரிந்து (நிமிடத்திற்கு 20 முறை) உணவை குடலுக்குள் அனுப்புகிறது. . உணவு சரியான முறையில் கூழாக்கபடாத நிலையில் உணவுடன் காற்றும் சென்று தடை உண்டு பண்ணி அஜீரணம், குடல்வாயு, வயிற்றுவலி போன்ற உபாதைகளை உண்டு பண்னுகின்றன.
உண்னும்போது முதலில் நெய், எண்ணை பசை அல்லது திரவ மூல உணவுகளையும், பின் காரம்,இனிப்பு வகையான உணவுகளையும் இறுதியாக புளிப்புள்ள உணவாக மோர், காடிநீர் பொன்ற உணவுகளையும் உண்ண எளிதில் ஜீரணமாகும்.
ஒருவர் காலை உணவாக 4 இட்லி உண்டால் அது இரைப்பையிலிருந்து குடலுக்குள் செல்ல 1லி நீர் தேவை.ஜீரணித்து மலமாக வெளியேற 24மணிநேரம் தேவை. எனவேதான் திருமூலர்
ஒரு போதுண்பான் யோகி இரு போதுண்பான் போகி முப் போதுண்பான் ரோகி அதி போதுண்பான் சாகி என்றார்.
உடற்பிணி உள்ளவர்களே மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.தற்காலத்தில் எல்லோருமே நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் மூன்று வேளை உண்கிறோம்.
நொறுக்குத்தீனி என்பது உடலை நொறுக்கும் தீனி என்று அறிக.
சிலர் வீணாகப் போகிறதே என்று சாப்பிடுகிறேன் என்பார்கள்.வீணாவதை குப்பைத் தொட்டியில்தான் பொடுவார்கள்.வயிற்றை குப்பைத் தொட்டி ஆக்காதீர்கள்.தேவை உள்ளவர்களுக்குக் கொடுங்கள்.
1. இஞ்சித்தேனூறல்
1தேகரண்டி,உணவுக்குமுன் மென்று சாப்பிட பசியின்மை,
வயிற்றுப் பொருமல் தீரும்
2. இஞ்சிச்சாற்றை
தொப்புளை சுற்றி பற்றிட குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் குணமாகும்
3. இஞ்சிச்சாறு
1தேகரண்டி,சமன் தேன் சேர்த்து,தினம்
3வேளை சாப்பிட்டுவர வயிற்றுவலி, வயிறு
கனமாக இருத்தல் தீரும்.இருமல்,தொண்டை எரிச்சல், ஜலதோஷம் நீங்கும்
4. ஏலரிசி,ஓமம்,சீரகம்,சமன், இளவறுப்பாய் வறுத்து,பொடித்து,1தேகரண்டி உட்கொள்ள செரியாமை தீரும்
5. ஏலக்காய்
தோல் நீக்கி, அரிசியை பொடித்து,2கிராம்,எலுமிச்சைசாற்றில் குழைத்து, ஒவ்வொரு வேளை உணவிற்குப்பின்
சாப்பிட கர்ப்பகாலவாந்தி, அஜீரணம், குமட்டல்
தீரும் .
6. ஓமம்,சுக்கு,கடுக்காய்தோல்,சமன்
பொடித்து,அரை தேகரண்டி,200மிலி மோருடன்
குடிக்க வயிறு மந்தம் குணமாகும்
7. திரிபலாசூரணம்
1தேகரண்டி,இரவில்,200மிலி
வெந்நீரில் கொள்ள அஜீரணம், புளியேப்பம், மலச்சிக்கல் குணமாகும்
8. கோரைக்கிழங்கு
4சிதைத்து 400மிலிநீரிலிட்டு குடிநீர் செய்து
வேளைக்கு 2 தேகரண்டி, குழந்தைகளுக்கு
கொடுக்க அஜீரணம் குணமாகும்
9. சீரகத்தை
இளவறுப்பாய் வறுத்து,பொடித்து,1தேகரண்டி,சாதத்துடன் நெய்சேர்த்துப் பிசைந்து
சாப்பிட பசியின்மை,வயிற்றுப்பொருமல்,சுவையின்மை தீரும்
10. புதினாஎண்ணை
2மிலி,100மிலி வெந்நீரில் கொள்ள வயிற்றுவலி,அஜீரணம் குணமாகும்
11. புதினாவை
துவையல் செய்து,சாதத்துடன் சேர்த்து முதலில் சாப்பிட்டுவர
வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி,செரியாமை
தீரும்
12. நுணாஇலை5, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து சேர்த்து வதக்கி, 1தேகரண்டி
சீரகம், 1 தேகரண்டி ஓமம், 1சிட்டிகைபெருங்காயம்
சேர்த்து, 5ல்1ன்றாய் காய்ச்சி. தினமிரு
வேளை, 2தேகரண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப்புசம்
குணமாகும்
13. உணவுக்குப்பின்
2தேகரண்டி வெற்றிலைசாறு குடிக்க அஜீரணம் தீரும்
14. தூதுவேளை
இலைகளை துவையல் செய்து சாப்பிட்டுவர செரிமானத்தண்மை அதிகரிக்கும். சளி,இருமல்,கோழைக்கட்டு, மூச்சுதிணறல்
குணமாகும்
15. உணவுக்குப்பின்
2வெற்றிலை மென்று,சாறை விழுங்க செரிமானத்தன்மை
அதிகரிக்கும்
16. ஓமத்தீநீர்
30மிலி பருகிவர செரியாமை,வயிற்றுப்பொருமல்,சீதக்கழிச்சல் குணமாகும்
17. உத்தாமணி
இலை3,
சிதைத்து, 100மிலிநீரிலிட்டு, 25மிலியாகக் காய்ச்சி, 2அரிசி எடை, வசம்பைச் சுட்டகரி சேர்த்து,5மிலி,காலைமாலை குழந்தைகளுக்குக் கொடுக்க மாந்தம், செரியாமை
தீரும்
18. கடுக்காய்தூள்
அரைதேகரண்டி,இரவில்,வெந்நீரில் கொள்ள
செரியாமை, மலச்சிக்கல்
தீரும்
19. கோவைகாயை
வற்றல் செய்து,நெய்யில் பொரித்து அல்லது ஊறுகாய் செய்து
சாப்பிட சுவையின்மை தீரும்
20. திப்பிலியை
நெய்யில் வறுத்துப்பொடித்து,கால்,அரை தேகரண்டி,அரைதேகரண்டி தேனில் குழைத்து, தினமிருவேளை சாப்பிட்டு வர தொண்டைக்கட்டு, நாக்குச் சுவையின்மை
தீரும்
21. திப்பிலி,மிளகு,தோல்நீக்கிய சுக்கு,சமன்,வறுத்து,பொடித்து,அரைதேகரண்டி,தேனில் கொள்ள வயிற்றுவலி,வயிற்றுப்பொருமல் குணமாகும்
22. முற்றிய
பிரண்டைத்தண்டை நறுக்கி, மோரிலூறவைத்து,வற்றல் செய்து, எண்ணையில் பொரித்துச் சாப்பிட,பசியின்மை,நாக்குச்சுவையின்மை தீரும்
23. மரமஞ்சள்
கட்டைகளை,தூள்செய்து,5கிராம்,2ல்1ன்றாய்க் காய்ச்சி,வடித்து சாப்பிட காய்ச்சல்,
நாக்குச்சுவையின்மை தீரும்
24. மணித்தக்காளி
வற்றலை உணவில் சேர்த்துவர நாக்குச்சுவையின்மை தீரும்
25. முசுமுசுக்கை
இலைகளை அரைத்து, தோசைமாவுடன்சேர்த்து,தோசைசெய்து
சாப்பிட, காய்ச்சல், சளியுடன் கூடிய
காய்ச்சல், நாக்குச்சுவையின்மை, வாசனையின்மை
தீரும்
26. சாதிக்காய்
100கிராம்,சுக்கு 100கிராம்,சீரகம் 300கிராம் பொடித்து,உணவுக்குமுன்
2 கிராம் சாப்பிட்டுவர அஜீரணம் தீரும்
27. வசம்பை
சுட்டு பொடியாக்கி,கால்கிராம்,தேனில் குழைத்து,3வேளை, உணவுக்குப்
பின் சாப்பிட பசி அதிகமாகும்
28. எலரிசியை
பொடித்து,1சிட்டிகை,இளம்சூடான பாலில் பருகிவர அஜீரணக் கோளாறுகள் நீங்கும்
29. அதிமதுரத்தை
ஒன்றிரண்டாய் இடித்து,விதிப்படிகுடிநீர்செய்து,சர்க்கரை,பால் சேர்த்து, காய்ச்சி பாகுபதம் எடுத்து,2தேகரண்டி,தினமிருவேளை கொள்ள நீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், பசியினமை, சுவையின்மை,கண்ணெரிச்சல் தீரும்
30. கறிவேப்பிலையை
நெய்யில் வறுத்துப்பொடித்து,சூடான சாதத்தில் பிசைந்து
சாப்பிட சுவையின்மை, செரியாமை தீரும்.முடி கறுப்பாகும்.பார்வை தெளிவடையும்
31. 5கிராம் சதகுப்பையை 100மிலி நீரிலிட்டு 25மிலி யாக காய்ச்சி, வடித்து,சர்க்கரை
கலந்து தினமிருவேளை கொடுக்க குழந்தைகளுக்கு பால் செரியாமை,உப்புசம்
நீங்கும்
32. பிரண்டைக்
கொழுந்தை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட அரோசிகம் (சுவையின்மை ) தீரும்.ஜீரண
சக்தியுண்டாகும்
33. சிவகரந்தை
இலைச்சாறு 1தேகரண்டி, சமன் தேன்
கலந்து,தினம் 2வேளை பருக நல்ல
பசியுண்டாகும்
34. சம்பங்கிபூ5, கொதிக்கும் நீரிலிட்டு,அரைமணிநேரம் ஊறவைத்து,வடித்து, நீரை 3 வேளை பருக
ஜீரணமுண்டாகும்
35. இஞ்சியுடன்
உப்பு சேர்த்தரைத்து,உணவுக்குமுன் சாப்பிட செரியாமை,சுவைமந்தம் தீரும். நாக்கு,தொண்டை சுத்தமாகும்
36. கொய்யா
தளிரிலைகளை உண்டுவர அஜீரணம் மறையும்
37. அன்னாசிப்பூவையுலர்த்தி,பொடித்து, 5-10 கிராம் சாப்பிட்டுவர புளியேப்பம், நீர்வேட்கை,
வாந்தி, செரியாமை தீரும்
38. தாளிசாதிச்சூரணம்
100-500மிகி, 5துளி தேனில் கலந்து,தினமிருவேளை
கொடுக்க குழந்தைகளுக்கான பசியின்மை தீரும்
39. சிறிது
அதிமதுரதூளை தாயின் மார்பில் பூச
பாலுண்ணும் குழந்தைகளுக் கேற்படும் பசியின்மை நீங்கும்
40. பாலுடன்
நீர் கலந்து,சுக்கு,கோரைக்கிழங்கு
சேர்த்து காய்ச்சிக்கொடுக்க பால் நன்கு செரிக்கும்
41. இஞ்சிச்சாறு,உப்பு,புதினா,வெங்காயம் கலந்து
சாப்பிட அஜீரணம்,குமட்டல் , பசியின்மை,
வயிற்றுப்புசம் தீரும்.
42. உணவுக்குப்பின்
இரண்டு வெங்காயம் சாப்பிட எளிதில் ஜீரணமாகும்
43. நெல்லிக்காய்சாறு
30மிலி,தேன்10மிலி,கலந்து அதிகாலை வெறும் வயிற்றில்
சாப்பிட்டுவர அஜீரணம் அகலும். குடல் வலுவடையும்.
44. ஆரஞ்சுதோலை
நறுக்கி ஊறவைத்து,பிசைந்து வடித்து,50மிலி,ஆரஞ்சு பழச்சாறு 100 மிலி கலந்து பருக நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
45. கொய்யாபழம்
அதிகம் உண்டுவர மலச்சிக்கல் நீங்கி ஜீரணம்
அதிகரிக்கும்
அதிகரிக்கும்
46. பசும்பாலில்
தேன் கலந்து காலைமாலை சாப்பிட்டுவர ஜீரணம் அதிகரிக்கும்.
47. 50மிலி
தேனை நீருடன் கலந்து கொள்ள நாள்பட்ட அஜீரணம் அகலும்..
48. சம்பங்கிபூவை
கஷாயம் செய்து சாப்பிட அஜீரணம்,மலச்சிக்கல் நீங்கும்.
49. புளியந்தளிர்,பூ சேர்த்து துவையல் செய்து சாப்பிட அஜீரனம் நீங்கும்.
50. சீரகத்தை
இலேசாக வறுத்துப் பொடித்து,பனைவெல்லம் சேர்த்து சாப்பிட
நல்ல பசி உண்டாகும்.
51. ஓமத்தை
தேய்த்து,உமிபோக்கி,அரைத்து பசும்பாலில் சாப்பிட அஜீரணம்,
வயிற்றுப்போக்கு நீங்கும்.
52. பலாப்பழத்தினால்
ஏற்பட்ட அஜீரணம் வாழைப்பழத்திலும்,வாழைப்
பழத்தினால் உண்டானது ஏலக்காயிலும்,நெய்யினால் உண்டானது எலுமிச்சைசாறிலும்
தீரும்.
53. எலுமிச்சம்பழச்சாற்றில்
சீரகத்தை ஊறவைத்துலர்த்தி சுவைத்துவர அரோசிகம் நீங்கும்
54. சுண்டைவற்றல்,கறிவேப்பிலை,மிளகு,சீரகம்,வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிட
அரோசிகம் தீரும்.
55. 200கிராம் இஞ்சியை தட்டிச்சாறெடுத்து அதில் 60கிராம் பூண்டுச்சாறு
கலந்து வெதுவெதுப்பாய் குடிக்க 3நாள் காலைமாலை நெஞ்சில்குத்து,விலாக்குத்து தீரும்.
56. கடுகு,பூண்டு இரண்டும் கொட்டைப்பாக்களவு அரைத்து சிறிது பழம்புளி சேர்த்து ரசம் செய்து
கால்படி வீதம் 3நாள் சாப்பிட விலாகுத்து நெஞ்சில்குத்து தீரும்
57. கருஞ்சீரகம்,சீரகம்,இந்துப்பு,திரிகடுகு,கருவேப்பீர்க்கு வறுத்து பொடித்து அரை தேக்கரண்டி சாதத்தில் முதலில் போட்டு
நெய்விட்டு பிசைந்து சாப்பிட மந்தாக்கினி வாயு நீங்கும்
58. ஓமம்
சுக்கு கொடிவேலிவேர் சமன் பொடித்து,சமஅளவு கடுக்காய்பொடி
கலந்து திரிகடி மோரில் கொள்ள
அக்கினிமந்தம் பொருமல் தீரும்
59. மிளகு,
வெந்தயம், தைவேளை வேர் வறுத்து பொடித்து தேனில் கொள்ள சகல வாயுவும் நீங்கும்
60. வேப்பிலையை
புதுசட்டியில் போட்டெரித்து நீராக்கி திரிகடி தேனில் 8 நாள் கொள்ள சகல குன்மம்,வாயு,வலி தீரும்.புளி தள்ளவும்
61. மிளகாய்,உப்பு,எள்
சமன் வறுத்து பொடித்து திரிகடி பசுநெய்யில் கொள்ள சகல குன்மம், வாயுவலி தீரும்
62. சுக்கு,வெங்காரம்,ஓமம்,மிளகு வகைக்கு
2கிராம் வறுத்து பெருந்தும்பை கொழுந்து1 பிடி சேர்த்து
எருமை மோரிலரைத்துச் சாப்பிட குன்மவலி நீங்கும்.
63. சித்திரமூலம்,திப்பிலி,ஓமம்,மிளகு,சீரகம்,பொன்முசுட்டைவேர்,பெருங்காயம்,
சடாமஞ்சில்,திப்பிலிவேர்,இந்துப்பு சமன் பொடித்து திரிகடி கொள்ள குன்ம அக்னி
மந்தம் தீரும்
64. சுக்கு,
திப்பிலி, மிளகு பெருங்காயத்தை பொரித்த பொடி சம அளவு கலந்து தினம் சிறிது
சாப்பிட்டு வர வாயுத்தொல்லை, அஜீரணம் ஒழியும்.
65. வெள்ளரிப்பிஞ்சு,
சிறிது எலுமிச்சம்பழம், சிறிது உப்பு சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிட நன்றாக
ஜீரணமாகும்
66. எலுமிச்சம்பழ
ரசத்தில் சிறிது இஞ்சியும், சீரகமும் சேர்த்து தினமும் 2 வேளை சாப்பிட நன்றாக
ஜீரணமாகும்
67. தினமும்
4 பேரிச்சம்பழம் சாப்பிட நன்றாக ஜீரணமாகும்
68. எலுமிச்சம்பழத்
தோலை சாப்பிட அல்லது ஊறுகாய் சாப்பிட நன்றாக ஜீரணமாகும்
69. ஓம
வள்ளி இலையை இடித்துச் சாறெடுத்துச் சாப்பிட நன்றாக ஜீரணமாகும்
70. வசம்பை
எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்,
விளக்கெண்ணெய் கலந்து அடிவயிற்றில் பூச வயிற்றுப் பொருமல் நீங்கும்.
71. ஒரு
தம்ளர் சாதம் வடித்த நீரில், கால் தேகரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க
வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
72. சுக்குடன்
கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட அஜுரணம் குணமாகி பசி
ஏற்படும்.
73. ஒமம்,கருப்பட்டி
இட்டு கசாயம் செய்து பருக அஜீரணம் சரியாகும்.
74. மிளகைப்
பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினம் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி
சாப்பிட வாயுக் கோளாறு நீங்கும்.
75. ஒரு
தம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து வடிகட்டி
குடிக்க அஜீரணம் சரியாகும்.
76. வேப்பம்பூவை
தூள் செய்து 4 சிட்டிகை, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொள்ள ஏப்பம் குணமாகும்.
77. பீட்ருட்
சாறுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வர வயிற்றுப்புண் குணமாகும்.
78. வெந்தயத்தை
நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
79. புழுங்கல்
அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடிக்க
வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
80. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம்
சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட அஜீரணம் சரியாகும்.
81. வெற்றிலை,4
மிளகு மென்று தின்ன அஜீரணக்கோளாறு சரியாகும்.
82. சீரக
நீரைக் குடித்து வர நன்கு சீரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
83. 1தேக்கரண்டி
இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருக ஜீரணசக்தி அதிகரிக்கும்.
84. வேப்பம்
பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்ள வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்
நீங்கும்.
85. மனத்தக்காளி
கீரை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
86. சுக்கு
ஒரு துண்டு, மிளகு இருபது, சீரகம் கால் கரண்டி, வெந்தயம் கால் கரண்டி, வேப்பம்பூ
அரைக் கரண்டி எடுத்து, மிதமாக வறுத்துப்பொடி செய்ததுடன் நல்லெண்ணெயில் பொறித்த
கருவேப்பிலைப் பொடி கால் பிடி கலந்து பகல் உணவில் சாதத்துடன் உப்பு சேர்த்து
பிசைந்து சாப்பிட அல்லது மோருடன் கலந்து பருக வாந்தி, குமட்டல், உணவு செரியாமை
போன்ற வயிற்று உபாதைகள் கட்டுப்படும்.
87. உணவுக்குப்பின்
இரண்டு வெங்காயம் சாப்பிட எளிதில் ஜீரணமாகும்
88. நெல்லிக்காய்சாறு
30மிலி,தேன்10மிலி,கலந்து அதிகாலை வெறும் வயிற்றில்
சாப்பிட்டுவர அஜீரணம் அகலும். குடல் வலுவடையும்.
89. ஆரஞ்சுதோலை
நறுக்கி உணவுக்குப்பின் இரண்டு வெங்காயம் சேர்த்து சாப்பிட எளிதில் ஜீரணமாகும்
90. கொய்யாபழம்
அதிகம் உண்டுவர மலச்சிக்கல் நீங்கி ஜீரணம் அதிகரிக்கும்
91. பசும்பாலில்
தேன் கலந்து காலைமாலை சாப்பிட்டுவர ஜீரணம் அதிகரிக்கும்.
92. 50மிலி
தேனை நீருடன் கலந்து கொள்ள நாள்பட்ட அஜீரணம் அகலும்..
93. சம்பங்கிபூவை
கஷாயம் செய்து சாப்பிட அஜீரணம்,மலச்சிக்கல் நீங்கும்.
94. புளியந்தளிர்,பூ சேர்த்து துவையல் செய்து சாப்பிட அஜீரணம் நீங்கும்.
95. சீரகத்தை
இலேசாக வறுத்துப் பொடித்து,பனைவெல்லம் சேர்த்து சாப்பிட
நல்ல பசி உண்டாகும்.
96. ஓமத்தை
தேய்த்து,உமிபோக்கி,அரைத்து பசும்பாலில் சாப்பிட அஜீரணம்,
வயிற்றுப்போக்கு நீங்கும்.
97. எலுமிச்சம்பழச்சாற்றில்
சீரகத்தை ஊறவைத்துலர்த்தி சுவைத்துவர அரோசிகம் நீங்கும்
98. சுண்டைவற்றல்,கறிவேப்பிலை,மிளகு,சீரகம்,வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து
சாப்பிட அரோசிகம் தீரும்.
99. ஓமம்
சுக்கு கொடிவேலிவேர் சமன் பொடித்து,சமஅளவு கடுக்காய்பொடி
கலந்து திரிகடி மோரில் கொள்ள
அக்கினிமந்தம் பொருமல் தீரும்
100.மிளகு, வெந்தயம், தைவேளை வேர் வறுத்து பொடித்து தேனில் கொள்ள சகல வாயுவும் நீங்கும்
101.அரைதேகரண்டி
இஞ்சி சாறு, அரைதேகரண்டிஎலுமிச்சை சாறு, அரைதேகரண்டி தேன் கலந்து சாப்பிட அஜீரனக்
கோளாறுகள் மறையும்.
ஆரஞ்சு பழச்சாறு 100மிலி கலந்து
பருக நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
1 கருத்து:
நன்றி!, மிகவும் பயனுள்ள பதிவு.
அனைத்து விதமான நோய்கள், உடல் உபாதைகள் மற்றும் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் எளிய வீடு மருத்துவ குறிப்பு மற்றும் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
https://naturalhomeremediesfor.com/
#homeremedies #health #naturalhealth #ayurveda #siddha
கருத்துரையிடுக