மருந்தில்லா
மருத்துவம்
மருந்தில்லா
மருத்துவம் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவரும் அன்றாட பழக்கவழக்க,சமய சம்பிரதாயங்களை
அடிப்படையாகக் கொண்டதேயாகும்.
ஆன்மீகத்தை
அடித்தளமாகக் கொண்டு அதில் ஆரோக்கியத்தை வைத்துக் கட்டப்பட்டது நம் பண்பாடு,கலாச்சாரமாகும்.
உதாரணமாக
ஸ்ரீமத் பகவத்கீதை அளவு கடந்துண்பவனுக்கு யோகம் இல்லை. அறவே உண்னாதவனுக்கும் அஃதில்லை.மிகைப்பட
உறங்குபவனுக்கும், மிகைப்பட விழித்திருப்ப வனுக்கும் யோகமில்லை (அத் 6; 16,17)என்று
கூறுகிறது. இதனையே நம் முன்னோர்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, பாலோடாயினும்
காலமறிந்து உண், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர். வள்ளுவப் பெருந்தகையும்
மருந்தென
வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
என்கிறார்.
உண்ட உணவு சீரணித்த காலமறிந்து பின் உண்பவருக்கு மருந்தே தேவையில்லை.பால் சாப்பிடுவதாக
இருந்தாலும் உணவு சீரணித்த பின்னரே சாப்பிட வேண்டும்.சுவையாக இருக்கிறது என்பதற்காக
அதிகம் உண்ணக்கூடாது உண்ணும் உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும் என்று உண்பதற்குக்கூட
நியதிகள் வைத்துள்ளார்கள்
சனி நீராடு என்றார்கள்.நம்
வானவியல் சாஸ்திரம் சூரியனை அடிப்படையாகக் கொண்டது..அதன்படி வாரத்தின் முதல் நாளாக
ஞாயிறும் கடைசி நாளாக சனிக் கிழமையும் வைத்து அன்று எண்ணை தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை
வழக்கில் கொண்டு வந்தார்கள். கிரகங்களில் வலுவானதாகக் கருதப்படுபவர் சனி பகவான். இவர்
இருக்கும் இடம் பொறுத்து ஜன்ம சனி,வாக்குச்சனி,அஷ்டமத்துச்சனி,ஏழரைச் சனி,கண்டச்சனி,விரயச்சனி
என்று தனி செல்வாக்கு பெற்றவர். அவருக்கான சனிக் கிழமையன்று அவருக்குப் பிடித்த எள்
எ0ண்ணை தேய்த்துக் குளிப்பதால் அவர் பிரீதியடைந்து அனுகூலம் செய்வார் என்று கூறி தலை
முழுகும் பழக்கம் வைத்திருந்தனர்.எண்ணை தேய்த்துக் குளிப்பதால் எலும்புகளுக்கு பசைத்தண்மை
கிடைத்து எலும்புத் தேய்மானம்,மூட்டுவலி வராமல் தடுக்கப்படுவதுடன்,உடல் குளிர்ச்சிய
டைவதால் கப,பித்த நோய்கள் தாக்காமல் பாதுகாக்கப்படும்..ஆனால் நாம் இன்று கிரேக்க கிரிகோரியன்
முறைப்படி சந்திரனை முதன்மையாய்க் கொண்டு ஞாயிற்றுக் கிழமையை விடுமுறையாக வைத்துச்
சனி நீராடுதலை மறந்து ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம்.
வடமொழியில்கூட
ஆங்ஃகா அஞ்சன் தாந்த்கா மஞ்சன் நித் கரோ நித் கரோ என்று கண்ணுக்கு அஞ்சனம் தீட்டுவதையும்,பல்
துலக்குவதையும் நித்தமும் செய் நித்தமும் செய்
என்று வலியுறுத்தும் பழமொழி உண்டு.கண்களுக்கு தினமும் மை தீட்டுவதன் மூலம் கண் இமை
முடிகளில் வரும் சீலைப்பேன் தாக்குதலை தடுக்கலாம்.இதன் மூலம் காலை எழுவதிலிருந்து இரவு
படுக்கும்வரை நம் பழக்க வழக்கங்களில் மருந்தில்லா மருத்துவமே வைத்திருந்தனர். ஆனால் நாம் இன்று விளம்பரம்,மேல்நாட்டு
மாயையில் சிக்கி ஆரோக்கியத்தை இழக்கிறோம்.
வர்மக்கலை
அடுத்து நம்
முன்னோர்களின் ஞானத்திற்கு சாட்சியாக விளங்குவது வர்மக் கலையாகும்.மனித உடலில் தசை,தமணி,நரம்பு,எலும்பு
சக்திகள் சந்திப்பில் உள்ள உயிர் நிலையே வர்மமாகும். வர்மக்கலை தொடு வர்மம்,தட்டு வர்மம்,நோக்கு
வர்மம் என்று 3 பிரிவுகளைக் கொண்டது.கைகால் -44,தலை -23, நெஞ்சு,முதுகு -33, மூலம்
-8 என 108 வர்மப்புள்ளிகள்.இதில்12 படுவர்மம்,96 கொடு வர்மம்,108ல் 8 தட்டு வர்மம்
என்று வகுத்துள்ளனர். மூன்று நாடிகள் மூலம் வாயு ஓட்டத்தின் அளவையும்,அழுத்தத்தையும் கண்டறிந்து,உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான நரம்பு
மண்டலத்தில் 108 முக்கிய புள்ளிகளை தொட்டு அழுத்தியும்,தட்டி-தடவியும் ,பார்வையால்
பார்த்தும் குணப்படுத்தி வந்துள்ளனர்.விபத்து, தாக்குதல்,முறை தவறிய வாழ்க்கை,சக்திக்கு
மீறிய செயல்பாடுகள் ஆகியவற்றால் வர்மம் பாதிகப்படலாம்.வர்மப் பாதிப்பு சம்பந்த,சம்பந்தமில்லா
உறுப்புகளிலும் தோன்றலாம்., பனை மரத்தில் இருந்து கீழே விழுந்து பேச்சுமூச்சின்றி கிடந்தவரை
ஒரு புள்ளியில் தட்டிவிட்டு எழுந்து நடமாடச் செய்து அற்புதம் நிகழ்த்தியவர்களும் உண்டு.
இதுவும் மருந்தில்லா மருத்துவமே யாகும்.
ஆனால் உள்ளூர் மாடு விலை போகாது என்பதற்கேற்ப இதனையே சீன மருத்துவம் – அக்கு பஞ்சர்,அக்கு பிரஷர் என்று கூறி பின்பற்றி வருகிறோம்.
அக்குபஞ்சர்-அக்குபிரஷர்
ஒரு கண்ணோட்டம்.
அக்குபஞ்சர்,அக்குபிரஷர்
சிகிட்சா முறையில் 38 முக்கிய உறுப்புகளைக் கொண்டு அவற்றிற்கான புள்ளிகளை ஊசியால் குத்தியும்,
அழுத்தியும் வாயு ஓட்டத்தை சரி செய்வதன் மூலம் பிணி தீர்க்கும் முறையாகும்.
நம் உடலை இயக்குவது பத்துவித வாயுவாகும்.இதனை தச வாயு என்று
குறிப்பிடுகின்றனர். உடல் மட்டுமின்றி எந்த ஒரு வாகனமும்(பொருளும்) இயங்க வாயு தேவை.காற்றடைத்த
பலூன் உயரப் பறக்கும்.வாகனங்களில் காற்றடைத்த பின் எவ்வளவு பளுவையும் சுமந்து செல்லும்.அதன்கண்
சிறிய துளை(பஞ்சர்) விழுந்துவிட்டால் துளியும் நகராது.ராக்கெட், ஏவுகணைகள் விண்ணில்
பறப்பதும் காற்றின் உந்து சக்தியாலேயே. எனவே புள்ளிகளில் ஊசியால் குத்தி பஞ்சர் செய்வதைவிட
அழுத்தம் கொடுத்து வாயு ஓட்டத்தை தடை செய்து, பின் வேகமாக பாயச்செய்து அடைப்புகளை நீக்கும்
அக்குபிரஷர் முறை சிறந்தது.மேலும் தொடர்ந்து ஒரே இடத்தில் ஊசியால் குத்துவதால் அந்நரம்பு
வலுவிழக்கும் சாத்தியமுமுண்டு.
முத்திரைகள்
வெளி,வளி,ஒளி,அப்பு,பிருத்வி
என பஞ்சபூத சேர்க்கையால் உண்டானது இச் சரீரம்.பஞ்சபூத சக்தியை பெற்று அதன் மூலம் உடலை
கட்டுப்படுத்தி(காயகல்பம்) வாழ்ந்தவர்கள் – வாழ்பவர்கள் ரிஷிகள்.இதனை
உடம்பார்
அழியின் உயிரார் அழிவர்
திடம்பட
மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பினை
வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பினை
வளர்த்தோன் உயிர் வளர்த்தோனே என்னும் திருமூலர்
பாடலில் இருந்து அறியலாம்.திருமூலர் 3000 ஆண்டுகள் தேகம் காத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் உணவினால் இது சாத்தியமாகாது.
பிரபஞ்ச சக்தியை
அவர்கள் பெறுவதற்கு யோக முத்திரைகளை பயன்படுத்தினர். முத்திரை என்பதற்கு இலச்சினை,அடையாளம்,குறிப்பு
என்றும் கொள்ளலாம்.ஒவ்வொரு நாடும்,அரசும் தமக்கு என்று ஒரு முத்திரை வைத்துள்ளது.பஞ்சபூத
சக்திகளை – கட்டைவிரல்=நெருப்பு, ஆட்காட்டி விரல் = காற்று, நடுவிரல் = ஆகாயம், மோதிரவிரல்
= நிலம், சுண்டுவிரல் = நீர் என்ற முறையில் இணைத்து தங்களை பிரபஞ்சத்துடன் இணைத்து
அஷ்டமா சித்திகளை பெற்று நெடிது வாழ்ந்து
– வாழ்ந்தும் கொண்டுள்ளனர்.
கல்லாலின் புடையமர்ந்து
நான்மறை அறங்கள் கற்ற
வல்லார்கள் நால்வர்க்கும்
வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப்பாலாய்
உள்ளதுமாய் அல்லதுமாய்
இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து
பவத்தொடக்கை வெல்வோம் என்கிறது தட்சிணாமூர்த்தி துதி. சொல்லாமல் சொல்வது
என்பது குறிப்பால் உனர்த்தல் ஆகும்.இதற்கு சான்றாக சங்க கால புலவர்களில் ஒருவரான ஔவையார்
கவையாகிக்
கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல
மரங்கள் – அவைநடுவே
நீட்டோலை வாசிப்பின்
குறிப்பறிய
மாட்டாதவன்
நல்ல மரம் என்று குறிப்பறிய மாட்டாதவனை மரத்திற்குச்
சமமாய் ஒப்பிடுவதிலிருந்து அறியலாம்.இதற்கும் மேலாக
மோப்பக்
குழையும் அனிச்சையும் முகம்
நோக்கக்
குழையும் விருந்து என்ற உபசரிப்பவரின்
முகக் குறிப்பை வைத்தே விருந்தினரின் மனம் வாடும் என்று குறிப்பறிதலுக்கு இலக்கணம்
வகுக்கிறார் வள்ளுவர்.
இங்ஙனம் குறிப்பால்
உணர்த்தும் கலை என்பது நம் வாழ்வுடன் இணைந்துவிட்ட ஒன்று. .பாரதத்தின் பழம்பெரும் நாட்டியக்
கலையான பரதமும், பாரோர் போற்றும் சிற்பக் கலையும் இதற்கு சாட்சியாகும்.
நாட்டியக்கலையான
பரதத்தில் குறிப்பாலுணர்த்தும் பொருட்டு ஒற்றைக் கையால் முத்திரை பிடிப்பதனை(கரகரணம்)
இருபத்தியெட்டு அல்லது முப்பது எனவும், இணைக்கை (சம்யுத ஹஸ்தம்) இருபத்தி மூன்று எனவும்
ஆக 51 வகை யான முத்திரைகள் அபிநயத்தில் உள்ளன.இவற்றில் சங்கீத ரத்னாகாரத்திற்கும்,
சிலப்பதிகாரத்திற்குமிடையில் எண்ணிக்கை வித்தியாசம் உள்ளது. பரதக்கலை கூறும் முத்திரைகள் . இணையாத்
தொழிற்கை( அசம்யுத ஹஸ்தம்)
1.பதாகம்(கொடி)
2.திரிபதாகம்(முக்காற்கொடி) 3.அர்த்தபதாகம்(அரைக்கொடி)
4.கர்த்தரீமுகம் (கத்தரிக்கோல் அலகுகள்) 5.மயூரம்(மயில்)
6.அர்த்தசந்திரன்(அரைமதி,இளம்பிறை) 7.அரானம்(வளைந்தது) 8.சுகதுண்டம்(கிளிமூக்கு)
9.முஷ்டி(முட்டிக்கை) 10.சிகரம்(உச்சி) 11.கபித்தம்(விளம்பழம்) 12.கடகாமுகம்(வளையல்
வாய்) 13.சூசி(ஊசி) 14.சந்திரகலா(மதியின் கலை) 15.பதுமகோசம்(குவிந்த தாமரை)
16.சர்ப்ப சீர்ஷம்(பாம்புத்தலை) 17.மிருகசீர்ஷம்(மான் தலை) 18.சிங்கமுகம்(சிங்கத்தலை)
19. காங்கூலம்
20.அலபதுமம்(அலர்ந்ததாமரை) 21.சதுரம்(நாற்கோணம்)
22.பிரமரம்(வண்டு) 23.ஹம்ஸாஸ்யம்(அன்னத்தின் அலகு) 24.ஹம்ஸபக்ஷம்
(அன்னத்தின் சிறகு) 25.ஸந்தம்சம்(இடுக்கி) 26.முகுளம்(மொட்டு) 27.தாம்ரசூடம்
(சேவற்கொண்டை) 28திரிசூலம்(முத்தலைவேல்) என்று அபிநயதர்ப்பணம்,
பரதகலைச்சித்திரம் கூறுகிறது. இதில் சந்திரகலா,திரிசூலம் நீக்கி,பரணம் பூர்ணநாபம் சேர்த்து
28 என்று மஹாபாரத சூடாமணியும்,மாயூரம்,சந்திரகலா,சிங்கமுகம்,திரிசூலம் நான்கினையும்
நீக்கி 24 என்று பரத சாஸ்திரம்,சங்கீத ரத்னாகாரமும், இதில் இருபதும் வேறு 13ம் சேர்த்து
33 என்று சிலப்பதிகாரமும்(1;3;18) ( இவற்றுள் சில இணைக்கை) கூறுகின்றன. இவற்றுடன் வியாக்ரம்,
அர்த்தசூசி சேர்த்து 30 என்பதும் உண்டு. இணைக்கை(சம்யுதஅஸ்தம்)
1.அஞ்சலி(கும்பிடுதல்) 2.கபோதம்(புறா) 3.கற்கடம்(நண்டு) 4.ஸ்வஸ்திகம்(குறுக்கிடுதல்) 5.டோனம்(ஊஞ்சல்) 6.புஷ்பபுடம்(மலர்க்குடலை) 7.உத்சங்கம்(நல்-அணைவு) 8.சிவலிங்கம் (தெய்வப்பிரதிஷ்டை) 9.கடகாவர்த்தனம்(பூசை-ஆசிகூறல்) 10.கர்த்தரீஸ்வஸ்திதம்(கத்தரிக் குறுக்கீடு) 11சகடம்(வண்டி) 12.சங்கம்(சங்கு) 13.சக்கரம்(சக்கராயுதம்) 14சம்புடம்(மூடிப் பத்திரப்படுத்துதல்) 15.பாசம்(கட்டு) 16.கீலகம்(நட்புப்பிணைப்பு) 17.மத்ச்யம்(மீன்) 18.கூர்மம் (ஆமை) 19.வராகம்(பன்றி) 20.கருடன்(கருடப்பறவை 21.நாகபந்தம்(பாம்புப்பிணையல்) 22.கட்வா(கட்டில்-மஞ்சம்) 23பேருண்டம்(அண்ட பேரண்டம் என்ற இனைபிரியா பறவை)
சிற்பக்கலையில்
சிற்ப விற்பன்னர்கள் சிலை வடிக்கும் பொருட்டு 32 வகையான முத்திரைகளை(ஹஸ்த பேதம்)கையாண்டு
வந்துள்ளனர். இவற்றில் நமக்கு குறைவான அளவிலேயே முத்திரை பலன்கள் கிடைத்திருந்தாலும்
பரதம் மற்றும் சிற்பக்கலையில் பயன்படுத்தும் முத்திரைகள் ஆராய்ச்சிக்குறியவையே.
சமய சம்பிரதாயங்கள்
நீறில்லா நெற்றி
பாழ் என்றார்கள்.நாமம் போடப் பயன்படுத்தும் நாமக் கட்டி கட்டிகளை கரைக்க வல்லது.இதனை
நெற்றியில் இடுவதால் சிர நோய்கள் தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
ஆலயப் பிரகாரத்தில்,கல்
பதித்து மிதியடியின்றி நடத்தல்,கை கூப்புதல், குனிந்து வணங்குதல் போன்றவையும்,அலகு
குத்தி தேர் இழுத்தல்,அங்கங்களில் அணிகலன்கள் பூணுவதும்,செப்புப் பாத்திரத்தில் துளசி
தீர்த்தம் தருவதும், வெங்கலம், பித்தளை உருளிகளில் நைவேத்யம் தயாரித்து வழங்குவது போன்ற
வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் ஆரோக்கியத்துடன் இணைந்த மருந்தில்லா மருத்துவமே
Disease and Mudras நோய்களும் முத்திரைகளும்
Laziness,Fatigue,Weakness
|
Prithvi & Pran Mudras
|
Anxiety,Irritability
|
Gyan & Dhyyan Mudras
|
Tension
|
Gyan,Dhyan & Surya Mudras
|
Depression
|
Gyan & Pran Mudras
|
Uneasiness
|
Gyan,Pran,Apanvayu Mudras
|
Fear
|
Gyan & Abhaya Mudras
|
Hiccough
|
Apanvayu Mudra
|
Sneezing,yawning
|
Aditya Mudra
|
Cough & cold
|
Ling & Surya Mudras
|
Tonsilitis
|
Shankh Mudra
|
Sinusitis
|
Ling & Surya Mudras
|
Constipation
|
Apan Mudra
|
Piles
|
Sahajshankh Mudra
|
Acidity
|
Apan & Apanvayu Mudras
|
indigestion
|
Ling,Surya,Prithvi,Sahajshankh Mudras
|
Fever
|
Ling,Apanvayu, Varun Mudras
|
Itching
|
Varun Mudra
|
Nausea
|
Apanvayu Mudra
|
Allergy
|
Ling, SHankh Mudras
|
Fainting
|
Varun Mudra
|
Memory enhancement
|
Gyan Mudra
|
Rigidity
|
Pran Mudra
|
Jaw stiffness
|
Akash Mudra
|
Dehydration
|
Varun Mudra
|
Diarrohea
|
Varun,Vayu,Apanvayu Mudras
|
Thirst
|
Varun & Pran Mudras
|
Loss of Appetite
|
Pran Mudra
|
Liver problem
|
Surya,Shankh,Sahajshankh Mudras
|
Abdominal pain
|
Apanvayu Mudra
|
Headache
|
Apanvayu Mudra
|
Migrain
|
Gyan & Apan Mudras
|
Asthma
|
Ling, Surya, Apanvayu Mudras
|
Pneumonia
|
Ling & Surya, Mudras
|
Pleurisy
|
Ling & Surya, Mudras
|
Tuberclosis
|
Ling & Surya, Mudras
|
Diabeties
|
Pran & Apan Mudras
|
B.P High
|
Akash,Pran,Apanvayu Mudras
|
B.P Low
|
Akash,Pran,Apan,Ling Mudras
|
Paralysis
|
Vayu & Pran Mudras
|
Polio
|
Vayu & Pran Mudras
|
Thyroid problems
|
Surya,Shankh,Sahajshankh Mudras
|
Obesity
|
Surya Mudra
|
Dysmenorrohea
|
Apan & Shankh,Yoni Mudras
|
Psoriasis
|
Varun & Apan Mudras
|
Skin disorder
|
Varun Mudra
|
Swelling
|
Jalodar nashak Mudra
|
Toothache
|
Apan & Akash Mudras
|
Backache
|
Pran & Apanvayu Mudras
|
Sciatica
|
Pran & Apanvayu Mudras
|
Leg pain
|
Pran Mudra
|
Neck pain
|
Vayu Mudra
|
Knee pain
|
Apanvayu Mudra
|
Spinal problem
|
Vayu, Sahajshankh,Dhyan Mudras
|
Blood disorder
|
Varun, Pran, Apan Mudras
|
Burning sensation
|
Varun & Apan Mudras
|
Kidney problems
|
Apan, Apanvayu,Kidney Mudras
|
Retention of urine
|
Apanvayu Mudra
|
Important
1.
Mudras can be done by anyone. முத்திரைகள் வயது,உடல்நிலை பேதமின்றி அனைவரும்
செய்யக்கூடியதே.
2.
To balance tatvas the tip of thumb should join with the tips of fingers and to increase the thumb should be on the base of other fingers and to reduce the fingers should be in the base of thumb. பஞ்ச பூத சக்திகளை சமப்படுத்தகட்டை விரல்
நுனியை மற்ற விரல் நுனியுடன் பொருத்த வேண்டும். கூட்டுவதற்கு கட்டை விரலை மற்ற விரலின்
அடிப்பாகத்திலும், குறைப்பதற்கு மற்ற விரல்களை கட்டை விரல் அடிப்பாகத்திலும் வைக்க
வேண்டும்.
3.
AS far as possible,the hands should face upwards while doing mudras. கைகள் மேல்நோக்கி இருத்தல் வேண்டும்.
4.
Doing in both hands is more benefial.When doing in right hand ,it affect left part of the body and vice versa.
ஒரே சமயத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.ஏனெனில் ஒருபக்கம் மட்டும் செய்யும்
போது மறுபக்கம் பாதிக்கப் படக்கூடாது.
5.
Mudras can be done ,few seconds to hours.If done for 50 minutes ,desired results will come. நல்ல பலன் தெரியும்வரை தொடர்ந்து முடிந்தளவு
செய்து வரலாம்.
6.
While doing the tips of the fingers used.No need to press.Other fingers should be straight.விரல்களை அதிகம் அழுத்த தேவையில்லை.பஞ்சபூத
சக்தியை ஈர்க்கும் வண்ணம் மேல்நோக்கி விரல்கள் இருத்தல் வேண்டும்.
7.
No side effects.Improves not only physical health,also improves mental health by reducing anger increasing peace and realizing one from addictions. பக்க விளைவுகள் இல்லாதது.மனம் அமைதி பெறும்.
8.
Chikitsa should be stopped after one’s health improves. சிகிச்சையாக செய்பவர்கள் நல்ல பலன் கிடைத்தபின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் தொடர தேவையில்லை.
9.
Before starting take a few deep breaths,till the breaths rhythematic and the mind is relaxed. துவங்குமுன் ஆழ்ந்த சில மூச்சு இழுத்து மனம்,உடல் எல்லாம் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.
10. Keep the body relaxed and easy.சாதாரணமாக இருந்தால் போதுமானது. விரைப்புத்தண்மையுடன்,மன அழுத்தத்துடன் செய்யத் தேவையில்லை.
11. Morning is the best time to practice. Practice 15 -20 minutes for 2 – 3 sittings and 30 -50 minutes for single sitting.காலை,இரவு நேரமே சிறந்தது.மற்ற நேரங்களில் ஓய்வு கிடைக்கும்போது செய்யலாம்..
இணையாத் தொழிற்கை (கரகரணம்,அசம்யுத ஹஸ்தம்)
இணைக்கை முத்திரைகள்
சிற்பக்கலை முத்திரைகள்(ஹஸ்தபேதம்)