Apaya Mudra அபய முத்திரை
ஹிந்து
சமயத்தில் தெய்வங்கள் கையை உயர்த்தி ஆசி கூறுவதை அபய ஹஸ்தம் என்றும் மற்றொரு கையால்
திருவடி காட்டுவதை சரண ஹஸ்தம் என்றும் கூறுவர். பெரியோர்களும் சான்றோர்களும் ஆசி கூறுவதற்கு
இம் முத்திரையையே உபயோகிப்பர்.
செய்முறை
வலது கையை
தோள்பட்டை வரை உயர்த்தி புஜத்தை வளைத்து உள்ளங்கை முன்புறம் தெரியும்படி நெஞ்சுக்கு
நேராக வைக்க வேண்டும். விரல்கள் நேராக மேல்நோக்கி இருக்க வேண்டும்.
கால அளவு
தினம்
15 -40 நிமிடங்கள்
பலன்கள்
பயத்தை போக்குகிறது.
தன்னம்பிக்கை உண்டாகும். மனம் அமைதி அடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக